சமூக அடுக்கமைவு என்றால் என்ன ? -

சமூக- அடுக்கமைவு -என்றால் -என்ன -
 சமூக அடுக்கமைவு

சமூக அடுக்கமைவு - வரைவிலக்கணம்

சமூக அடுக்கமைவு என்பது மக்களிடையேயான சமூக சமத்துவமின்மையால் ஏற்படுகின்றது. செல்வம், அதிகாரம், உரிமை, சமூக கௌரவம் முதலியவற்றின் அடிப்படையிலான சமூகத் தரம், வாழ்க்கை வேறுபாடு என்பனவற்றினூடாக அடுக்கமைவு வெளிப்படுத்தப்படுகின்றது.

பல காலமாக சமூகவியலாளர்களிடையே சமூக அடுக்கமைவு தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்துள்ளன. தொழிற்பாட்டு வாதிகள் ஒரு சமூகத்தின் சீரான இயக்கத்திற்கு சமூக அடுக்கமைவு அவசியம் என்று கூறுவர். முரண்பாட்டு வாதிகளோ நீதியற்ற தனியுரிமை, சொந்த விருப்பங்கள், நன்மைகள் என்பவற்றின் காரணமாக சமூக அடுக்கமைவு உருவாக்கப்படுகின்றது.

“பொருளாதாரக் காரணிகளின்  அடிப்படையில்  சமூகமானது  வெவ்வேறு வர்க்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த வர்கப்பிரிப்பே சமூக அடுக்கமைவு எனப்படுகின்றது” – கார்ல் மாக்ஸ் -

“சமூக அடுக்கமைவு என்பது சமூகக் கூறுகளை அந்தஸ்தின் அடிப்படையில் பல்வேறு குழுமங்களாக வகுப்பதாகும்” - இன்ஸ்பெர்க் -

“மக்கள் குழுக்களுக்கு இடையே காணப்படுகின்ற அமைப்பாக்கப்பட்ட சமத்துவம் இன்மையே சமூக அடுக்கமைவு ஆகும்”. – அன்ரனி கிட்டின்ஸ் -

“செல்வச் செழுமை, அதிகாரம், சமூக அந்தஸ்து, வயது, மக்களினப்பண்புகள், சமூகம் சார்ந்த பிற சிறப்பியல்புகள் என்னும் பரிமாணங்களின் கீழ் குறிப்பிட்ட இணைப்பின் அடிப்படையில் சமூகத்தினுள்ளே காணப்படும் படிநிலையாக்கமே சமூக அடுக்கமைவு” எனப்படும். - டிரொங்கர்ஸ் -

அதிகாரம், கௌரவம், செல்வம் என்பனவற்றின் அடிப்படையில் சமூகமானது பல நிலைகளாக ஒழுங்கமைக்கப்பட்டிருப்பது  சமூக  அடுக்காக்கம் எனப்படும் - ஹரலம்போஸ், ஹொல்பேர்ன் -

“சமூக அடுக்காக்கம் என்பது ஏதாவது ஒரு சமூகத்தில் இருக்கும் அங்கத்தவர்களை வகைப்படுத்தி மதிப்பீடு செய்யும் அளவீடு ஆகும். இதன்படி மேலானது கீழானது எனும் நிலை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும்”. டால் கொற் பர்சன்ஸ் 

  • கல்வி உளவியல்   - Click Here
  • எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெற - Click Here
  • கல்வியியல் கட்டுரைகள்  - Click Here
எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்

Post a Comment

0 Comments