கருத்தியல்வாதம் |
இலட்சியவாதம்/ கருத்தியல்வாதம் (Idealism)
பழமையானதொரு தத்துவக் கோட்பாடு இதுவாகும். இதனை ஆன்மீகக் கொள்கை (Spiritualism) என்றும் அழைப்பர். இலட்சியவாதம் அல்லது கருத்தியல் வாதத்தைக் குறிக்கும் ஆங்கிலப் பதம் Ideology ஆகும். இது Idea(கருத்து) Ideal (குறிகோள், இலட்சியம்) ஆகிய பதங்களில் இருந்து மருவியதாகும். உள்ளம் / ஆன்மா எனப்படும் அருவப்பொருள் உண்மை நிலை உடையதாகும்.
இந்த உள்ளம் / மனத்தினை சார்ந்ததாக அனுபவங்கள், சிந்தனைகள், குறிகோள்கள், விழுமியங்கள் என்பன காணப்படுகின்றன. சடப்பொருள்கள் உண்மைப் பொருட்கள் அல்ல என்பது இந்த கொள்கையின் அடிப்படையாகும். சடப்பொருளால் ஆன பரந்த இயற்கை உலகத்தை ஆராய்ந்து உணரும் தன்மையை உண்மைப் பொருளான மனதுக்கு உண்டு என்பதும் இதன் கருத்தாக உள்ளது.
இலட்சியவாதத்தில், அது முன்னிலைப்படுத்தும் விடயத்தை அடிப்படையாகக் கொண்டு பல வகைகள் உள்ளன.
- அகவயக் கருத்துவாதம் (subjective idealism),
- புறவயக்கருத்து வாதம் (Objective idealism),
- ஆழ்நிலை கருத்து வாதம் (Transcendental idealism)
- முழுமையான கருத்துவாதம் (absolute idealism) என்பனவே அவைகளாகும்.
இவ்வாறு பல காணப்படினும் அவை யாவற்றிலும் பின்வரும் பொதுத்தன்மைகள் காணப்படுகின்றன:
- உண்மைப் பொருள் சடத்தன்மை உடையதன்று. அது ஆன்மீகத் தன்மை கொண்டதாகும்.
- மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றவன் (கூர்ப்படைந்தவன்). இது உள்ளத்தின் வளர்ச்சியிலும் காணப்படுகிறது.
- மனிதன் ஏனைய உயிரினங்களிலும் பார்க்க சிறப்புப் பெற்றவன்.
- சகல அறிவுகளும் புலன்களினால் மட்டும் வரும் என்றில்லை. உயர் அறிவு உள்ளுணர்வினால் (Intuition) பெறப்படுவதாகும். இதன் மூலம், வாழ்க்கைப் பெறுமானங்களையும் இறைவனையும் அடைந்து கொள்ள முடியும்.
- மனிதனின் உள்ளம்/ ஆன்மா மனித நடத்தையைக் கட்டுப்படுத்தி திசைமுகப்படுத்துகின்றது.
- மனித வாழ்வின் நோக்கம் தனது ஆன்மிகப் பண்புகளும் மன ஆற்றல்களும் முழுமை பெறலாகும். அதற்காக கல்வி உதவக் கூடிய வகையில்
இலட்சியவாதமும் கல்வியும்
இலட்சியவாதம் மனிதனது ஆன்மீகச் சூழலை வலியுறுத்துவதாகவும் சிறந்த விழுமியங்களின் அடிப்படையில் மாணவர்கள் வழிப்படுத்தபடல் வேண்டும் எனவும் கூறுகிறது. இதனால் புத்தக அறிவுக்கு இங்கு முக்கியம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக மனிதவியற் பாடங்கள் இதில் முக்கியம் பெறுகின்றன. அத்துடன் வாழ்க்கையில் உயரிய இலட்சியங்கள்/ மதிப்புக்கள் அடையக்கூடிய வகையில் பாடங்கள் இங்கு முக்கியம் பெறும். மேலும், விஞ்ஞானம், சமயம், கலைகள் என்பவும் முக்கியம் பெறும். இந்த வகைக் கலைத்திட்டத்தில், ஆசிரியரே முதன்மை பெறுவார். இவரே மாணவர்கள் இலட்சியங்களை அடைய வழிகாட்டுபவராகத் திகழ்வார். இக்கொள்கையின்படி திட்டமிடப்படும் கலைத்திட்ட விருத்தியின்
போது பின்வரும் வினாக்கள் தொடுக்கப்படும்:
உள விருத்திக்காக பகுத்தறிவு ரீதியாகவும் ஆக்கபூர்வமாகவும் மாணவர்கள் சிந்திக்க்கும் உள விருத்திக்கு எத்தகைய அறிவு விடயங்கள் உதவுவதாக இருக்கும்? (What knowledge aspect may assist pupils to think critically and creatively for mental development?)
இயல்பாகவே நிலையாக அறிவை பிரதிபலிக்கக் கூடிய முக்கிய பாடங்கள் எவை? (Which may reflect vital subject matter that has endured in nature?)
உள்ளார்ந்த ஆற்றல்களின் விருத்திக்கான கற்றலை எது வலியுறுத்தக்கூடும்? (Which may emphasize learning acquired for development of inner potentiality ?)
ஒருவரை ஒருவர் நோக்கிய மனித விருத்தியுடன் தொடர்புபட்ட வகையில், பிரதிபலிக்கக்கூடிய பரந்தளவான பாட உள்ளடக்கம் எதுவாக இருக்கும்? (Which may reflect universal content in relating one human being to another involving human development?)
எந்த உள்ளடக்கம், தனிப்பட்ட மாணவனை விழுமியங்களை விருத்தி செய்வதன் ஊடாக மட்டுப்படுத்தப்பட நிலையில் இருந்து படிப்படியாக வரையறை இல்லாத மனிதனாக்குகிறது? Which content is emphasize individual pupils moving away from being finite to increasingly becoming infinite human beings through development of values?
கல்வியியல் கட்டுரைகள் - Click Here
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்