முற்காலத்தில் யதார்த்தத்தின் தன்மை,உலகில் மனிதன் வகிக்கும் இடம், இறைவன் இருக்கிறான் என்ற நிலைப்பாடு, ஆத்மாவின் இறவாத் தன்மை போன்ற பிரச்சினைகளை அறிவுசார் முறையிலும் தர்க்க முறையிலும் தத்துவ ஞானிகள் ஆராய்ந்தனர்.
பௌதிக உலகுக்கு அப்பாற் சென்றது அல்லது பௌதிக உலகை விஞ்சிச் சென்றது என்பதே பௌதிகவதீதவியல் என்பதன் கருத்தாகும். இது யதார்த்தத்தின் அடிப்படை பற்றிய ஆய்வாகும் அதாவது உயர்ந்த யதார்த்தம் அல்லது அனைத்திற்கும் பின்னால் உள்ள கண்ணுக்குத் தெரியாத இயல்பு பற்றிய ஒரு ஆய்வாகும்.
பௌதிக உலகுக்கு அப்பாற் சென்று, விஞ்ஞான முறைகள், நுட்பங்களின் ஊடாக ஆய்வுக்குட்படுத்துவது கடினமான ஒரு விடயமாகும். பிரச்சினைகள் - வேறு எந்த முறையினாலும் அல்லது முறைகளினாலும் தீர்க்க முடியாத கூறுகளைக் கொண்டவையாகும் இது மனிதனுடனும் சமூகத்துடனும் தொடர்புடைய யதார்த்தத்தைக் காட்டுகிறது. உதாரணமாக ஆன்மா பற்றிக் கந்துரையாடுதலைக் குறிப்பிடலாம்.
பரம உண்மை என்பது யாது? உண்மை யாது? மாற்றமடைதல் என்பது யாது? அகிலத்தின் அர்த்தம் என்பது என்ன? என்பன போன்ற வினாக்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும் இவ்வாறான வினாக்கள் பௌதிகவதீதவியல் விடயப் பரப்பிலேயே அடங்கும். கல்வியிலும் இவ்வாறான தன்மையுடைய பிரச்சினைகள் காணப்படும் உதாரணமாகப் பிள்ளையின் உள்ளம் வெறுமையானதா? அதில் ஏதேனும் உள்ளார்ந்த ஆற்றல் உள்ளதா? இப் பிரச்சினைகளை விஞ்ஞானிகளால் தீர்க்க முடியாது. அதாவது யதார்த்தத்தின் எந்தவொரு கேள்விக்கும் விஞ்ஞான அவதானிப்பு மற்றும் பரிசோதனை மூலம் பதிலளிக்க முடியாது. இவற்றுக்கு எவ்வாறு விடையளிக்கலாம். இப் பிரச்சினைகள் அல்லது வினாக்களுக்காகக் கற்பனையாக விடையளிப்பது அர்த்தமற்றது இவை பற்றித் தத்துவ ரீதியில் நோக்குதல் வேண்டும்.
பௌதிகவதீதவியல்வாதி என்பவர் யதார்த்தத்தின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள முற்படுபவராவர். அதீத பௌதிகவியலில் அடங்கியுள்ள அனைத்தும் ஏனைய விடயங்களை விடச் சர்ச்சைக்குரியவை என்பதால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ன விசாரிக்கிறார்கள்? என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியவர்களாக உள்ளோம்.
நாத்திகர்கள்(Atheists) பௌதிகவதீதவியலை நிராகரிக்கின்றனர்.நாத்திகர்கள் பொதுவாக தெய்வங்கள்மீது அவநம்பிக்கை கொண்டவர்களாவர். ஏனெனில் அவர்கள் பொதுவாக அமானுஷ்யத்தின் இருப்பை நிராகரிப்பவர்களாவர். அவர்கள் பௌதிகவதீதவியல் ஒரு அர்த்தமற்ற கோட்பாடு என வாதிட்டனர். எனினும் பௌதிகவதீதவியல் தொழிநுட்ப ரீதியாக அனைத்து யதார்த்தங்களையும் ஆய்வு செய்வதால் அது பலராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.
நாத்திகர்கள் யதார்த்தத்துக்கும் கடவுளுக்கும் தொடர்பில்லை என்கின்றனர். இவர்கள் பொருள்முதல் முன்னுரிமை வாதத்துக்கே கொடுக்கின்றனர். அனைத்தும் இயற்கையானது இயற்கைக்கு அப்பால் எதுவுமில்லை என்கின்றனர். அனைத்துக் காரணங்களும் விளைவுகளும் இயற்கைச் சட்டங்களுக்குட்பட்டதாகவே உள்ளன என அவர்கள் கருதுகின்றனர்.
இலட்சியவாதிகள் ஆத்மாவுக்குரியனவாகக் (Idealists) பௌதிகவதீதவியல் அம்சங்களை (Spiritual) காட்டுகின்றனர். ஆத்மீக உலகம் பௌதிகஉலகை இயக்குகின்றது. பௌதிகவாதிகளின்(Materialists) நம்பிக்கைப்படி அனைத்தும் சடப் பொருட்களால் (Matter)அமைக்கப்பட்டுள்ளன. நாம் காணும் உலகிற்கு வெளியே உலகங்கள் இல்லையென அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். மனிதன், உயிரினங்கள், மரஞ்செடி கொடிகள் அனைத்தையும் பொருட்கள் என்ற வகையில் தொகுத்துள்ளனர்.
தத்துவ நோக்கு
பௌதிகவதீதவியல்- Metaphysics
ஒருமை வாதம் - Monism 02. இருமை வாதம் - Dualism
சடப் பொருள் வாதம் -Materialism
இலட்சியவாதம் - Idealism
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்