அறிமுகம்
தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சி கற்பித்தல் கற்றல் செயன்முறையில் 'தொடர்ந்துசெல்வாக்குச் செலுத்தியுள்ளது. தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்ட கற்பித்தல் மற்றும் கற்றல் என்பது பாடவிடய உள்ளடக்கம், கற்பித்தல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு இடையிலான இடைவினைகளின் பேறாகும். புதிய தொழில்நுட்பங்கள் கற்பித்தல் மற்றும் கற்றல் சூழ்நிலைகளில் கவனத்தின் மையமாக மாறும்போது, பொருத்தமான கல்வி அணுகுமுறைகளும் கண்டறியப்பட வேண்டும். ஆசிரியர்கள் என்றவகையில், புதிய தொழில்நுட்பங்கள் கற்பித்தல் மற்றும் கற்றல் தரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதை உறுதிசெய்வதாக இருக்கவேண்டும். இந்த அமர்வு கல்வித்தொழில்நுட்பம், அதன் முக்கியத்துவம், புதிய போக்குகள் மற்றும் கல்வித்தொழில்நுட்பத்தை கற்பித்தல் கற்றல் செயல்பாட்டில் ஒருங்கிணைப்பதில் ஆசிரியர்களின் வகிபாகம் பற்றிய ஆழமான நோக்கை உருவாக்கிக் கொள்ள உங்களுக்கு உதவும்.
கல்வியியல் கட்டுரைகள் - Click Here
1.1 கற்பித்தல் மற்றும் கற்றலில் கல்வித்தொழில்நுட்பம் கல்வித்தொழில்நுட்பம் (Educational Tahnalagy = ET) என்பது கல்வித்துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் எண்ணக்கருவாகும். இது தொழில் நுட்பகருவிகள் அல்லது கணினிகள் அல்லது திறன் பலகைகள் (Smart Board) போன்ற கருவிகளை கல்வியில் பயன்படுத்துவதைவிட கூடுதலானதாகும். கல்வித்தொழில்நுட்பம் கருவிகளில் மட்டுமல்லாது, கல்வியில் இந்த கருவிகளைப் பயன்படுத்துவதற்கான செயன்முறைகளிலும் கவனம் செலுத்துகிறது.
கல்வித்தொழில்நுட்பம் பற்றிய சிலவரைவிலக்கணங்களை ஆராய்வோம்.
கல்வித்தொழில்நுட்பம் என்பது மனித கற்றல் செயன்முறையை மேம்படுத்துவதற்கான அமைப்புகள், நுட்பங்கள் மற்றும் உதவிகள் ஆகியவற்றின் வளர்ச்சி பயன்பாடு மற்றும் மதிப்பீடு ஆகும். (பெர்சிவல் மற்றும் எலிங்டன்,1984 120)
கல்வித்தொழில்நுட்பம் என்பது மக்கள், நடைமுறைகள் ,யோசனைகள், சாதனங்கள் மற்றும் அமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருசிக்கலான, ஒருங்கிணைந்த செயன்முறையாகும், இது சிக்கல்களை பகுப்பாய்வு செய்வதற்கும், மனிதகற்றலின் அனைத்து அம்சங்களிலும் தொடர்புடைய அந்த சிக்கல்களுக்கான தீர்வுகளை வகுத்தல், செயல்படுத்துதல், மதிப்பீடு செய்தல் மற்றும் நிர்வகித்தல் என்பன பற்றியதாகும் (AECT, 1977)
கல்வித்தொழில்நுட்பம் என்பது கல்வியோடு தொடர்புப்பட்ட சிக்கல்களின் தீர்வுக்கு பயன்படுத்தப்படும் கற்பித்தல், கற்றல், மேம்பாடு நிர்வாகமற்றும் பிற தொழில்நுட்பங்களின் கலவையாகும். (ஜென்ட்ரி, 1995)
கல்வித்தொழில்நுட்பம் என்பது பொருத்தமான தொழில்நுட்ப செயல்முறைகள் மற்றும் வளங்களை உருவாக்குதல், பயன்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதன் மூலம் கற்றலை எளிதாக்குவதற்கும், செயல்திறனை மேம்படுத்துவதற்குமான ஆய்வு மற்றும் நெறிமுறைசார்ந்த நடைமுறையாகும் (ARCT,2004).
கல்வி உளவியல் - Click Here
1.2 கல்வித்தொழில்நுட்பத்தில் வளர்ந்துவரும் போக்குகள்
வழமையான வகுப்பறை முறைமைகளுக்கு மேலதிக புதுமையான, மேம்பட்ட தொழில்நுட்பங்களை இணைக்க கல்வித்தொழில்நுட்பம் வழி வகுக்கிறது. கல்வித்தொழில்நுட்பத்தில் வளர்ந்துவரும் போக்குகள் டிஜிட்டல் கருவிகள் மற்றும் புதுமையானகற்பித்தல் கற்றல் சூழ்நிலைகளின் அதிகரித்தபயன்பாட்டைக் குறிக்கிறது. கல்வித்தொழில்நுட்பத்தில் வளர்ந்துவரும் போக்குகள் என்ன என்பதைக் கண்டறிய ழேயுள்ள படங்கள் உங்களுக்கு வழிகாட்டும்.
1.3 கல்வித்தொழில்துட்பத்தை ஒருங்கிணைப்பதில் ஆசிரியர்களின் வகிபாகம் தகவல் மைய நூற்றாண்டில் புதிய தொழில்நுட்பத்தைப் பொறுத்தளவில் அறிவுத் தளங்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகிறது. தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பதிறன்கள் 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் கொண்டிருக்க வேண்டிய முக்கிய திறன்களாக மாறியுள்ளன. எனவே வகுப்பறை நடைமுறையில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் புதுமையான முக்கிய பணியை ஆரிரியர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரம்பரிய கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்துவதை விட வகுப்பறைக் கற்பித்தலுடன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன் அதனூடாக மாணவர்களின் கற்றல் மற்றும் சாதனைகளை மேம்படுத்த முடியும். கற்பித்தல் கற்றல் செயல்பாட்டில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது ஆசிரியரின் பாரம்பரியமான வகிபாகத்திலிருந்து அவர்களை வழிகாட்டியாகவும் வசதிப்படுத்துபவராகவும் மாற்றியமைக்கிறது. இந்தாட்டத்தில், மாணவர்களின் வகிபாகங்கள் செயலுக்கமற்ற கற்போரிலிருந்து அவர்களை கற்பித்தல் கற்றல் செயல்பாட்டில் அதிக உயிர்ப்புடைய பங்கேற்பாளர்களாக மாற்றியுள்ளது.
எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெற - Click Here
இந்தப் பின்னணியில் தொழில்நுட்பத்தை வகுப்பறை நடைமுறைகளுடன் ஒருங்கிணைப்பது மாணவர்களின் ஈடுபாட்டை வலுப்படுத்தவும், 21 ஆம் நூற்றாண்டின் கற்றல் திறன்களை வளர்க்கவும் உதவும் ஒரு சிறந்த வழியாகும். இந்த திறன்களை வளர்ப்பதற்கு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் வசதி செய்வதில் திறமையான பயனாளராகவும் எண்ம (digital) ஊடகத்தினை உருவாக்குபவர்களாகவும் இருப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலமும் எதிர்காலத்திற்காக அவர்களைத் தயார்படுத்துவதிலும் ஆசிரியர்கள் குறிப்பிடத்தக்க வகிபங்கைக் நிறைவேற்ற வேண்டியுள்ளது.
எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்
மேலும் செயலட்டைகள் மற்றும் வினாத்தாள்கள் தேவை எனின் கீழ் வரும் link Click செய்யவும்
எமது கல்வி சார் காணொளிகளை காண கீழே உள்ள லிங்கை click செய்யவும்
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்