உடனடியாக uninstall செய்ய வேண்டிய அண்ட்ரோய்ட் ஆப்கள்








     தொலைபேசிகளுக்கு ஆபத்து தரக்கூடிய 9 ஆப்களை உடனடியாக கூகுள் பிளே வில் இருந்த நீக்கியுள்ளது.அண்ட்ரோய்ட் மேம்படுத்தல் செயற்றினை அடிப்படையாக கொண்டு மொத்தமாக 470000 க்கு அதிகமாக தரவிறக்கம் செய்து பாவிக்கப்பட்ட 9 ஆப்களை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது.

    இந்த ஆப்கள் பயனர்களின் இரகசிய தகவல்களை திருடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதாவது முகநூல் மற்றும் கூகுள் தகவல்களையே திருடப்படுவதாக கண்டயிறப்பட்டள்ளது.. சைபர் செக்யூர்ட்டியில் நிபணத்துவம் பெற்ற ஜப்பானிய நிறுவனமே இதனை முதல் முதலாக அறிந்து வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிறுவனம் அண்ட்ரோய்ட் பயனர்களை பாதிக்கும்  மல்வேயார் களை பற்றி ஒரு போஸ்டரை வெளியிட்டது. இதன் மூலமே இது அறியப்பட்டுள்ளது. 
ஸபீட் மற்றும் சூப்பர் க்லீன் என்ற போலியான பெயர்களில் மூலம் நமது தகவல்கள் திருடப் படுவதாக கூறப்படுகிறது. இந்த ஆப்களை பயன்படுத்தும் போது  3000 வகையான  மல்வேயார்களை பதிவிறக்க வழிவகைச் செய்கிறது. எனவே தெரிந்தோ தெரியாமலோ கீழ் கூறப்பட்ட 9 ஆப்களை ஏதேனும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தாளும் உடனடியாக அன்இன்ஸ்டோல் செய்வதே சிறப்பாகும்.

uninstall செய்ய வேண்டிய அண்ட்ரோய்ட் ஆப்கள்
  1. Shoot Clean-Junk Cleaner,Phone Booster,CPU Cooler
  2. Super Clean Lite- Booster, Clean&CPU Cooler
  3. Super Clean-Phone Booster,Junk Cleaner&CPU Cooler
  4. Quick Games-H5 Game Center
  5. Rocket Cleaner
  6. Rocket Cleaner Lite
  7. Speed Clean-Phone Booster,Junk Cleaner&App Manager
  8. LinkWorldVPN
  9. H5 Gamebox

Post a Comment

0 Comments