இன்றைய காலக்கட்டத்தில் அதிகமான மக்கள் ஒன்லைன் மூலமே தனது அன்றாட கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் தனது கொடுக்கல் வாங்கல்களையும் சிலர் இதன் மூலமே மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இதற்கு எல்லாம் முட்டுக்கட்டை போடும் முகமாக ஒரு செய்தி வருகின்றது.
அதாவது சைபர் செக்கியூர்ட்டி ஆய்வு நிறுவனம் ஆனது fortinet எனும் அவசரமான எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது
.
அதாவது ட்ரோஜன் எனப்படும் ஒரு வகையான வைரஸ் தற்பொழுது உலகம் முழுவதும் வலம்வந்து கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் ஆனது ஒன்லைன் மூலம் வங்கிச் சேவையை பயன்படுத்தும் போது கடவுச் சொற்களை திருடும் விதமாகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயனாளி ஒருவர் தனது வங்கியாள் கொடுக்கப்பட்ட கடவுச்சொல்லை பயன்படுத்தும் போது அதனை மீண்டும் இரண்டாவது தடவையாகவும் கேட்க வைக்கிறது. இவ்வாறு இரண்டாவது தடவையாக நாம் கடவுச்சொல்லை வழங்கும்போது அதனை சாதுர்யமாக ஹெக் செய்து திருடிக்கொள்கிறது.
metemorfo எனும் குறித்த ட்ரோஜன் மல்வேர் எனும் வைரஸ் ஆனது கடவுச்சொல்லை மாத்திரம் அன்றி தனிப்பட்ட தகவல்களையும் திருடிகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை உலகம் முழுவதும் அமெரிக்கா கனடா சிலி பெரு ஈகுவடோர் பிரேஸில் மற்றும் மெக்ஸிக்கோ ஆகிய இடங்களில் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்