இன்றைய தொழில்நுட்ப உலகின் சாம்பியனாக வளம்வரும் கூகுல் நிறுவனம் Googl Earth தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை வழங்கியுள்ளது.
இப்புதிய வசதி நாம் வான்வெளியில் உள்ள நட்சத்திரங்களை பார்வையிடக் கூடியதாக இருக்கும்.
இப்புதிய வசதியை கூகுல் நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.
இதன்போது மக்களின் எதிர்பார்ப்புக்களை கருத்தரிற் கொண்டு இது வடிவமக்கப்பட்டுள்ளது.
உங்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது உங்களின் கணினி வழியாக வேணும் காணும் வசதியளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கூகுல் ஏர்த் எப்லிகேசனை நீங்கள் சிறிதாக்குவதன் மூலம் அதனைச் சுற்றியுள்ள அனைத்து நட்சத்திரங்களையும் மற்றும் பால்வெளியினையும் முப்பரிமாண முறையில் அதாவது 3னு வடிவிலும் கண்டுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்
இதனை செயற்படுத்துவதற்காக பூமியிலிருந்து சுமார் 3000 மைல்கள் தொலைவு வரை தென்படக்கூடிய வகையில் படம் எடுக்கப்பட்டதாக கூகுல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய வசதியின் மூலம் மாணவர்களுக்கு விளக்கமிக்கதான விஞ்ஞான பாடத்தினை கற்பிக்கக்கூடியதாக இருப்பதுடன் வினைத்திறன்மிக்க கற்றல் கற்பித்தலிலலும் ஈடுபடலாம்
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்