இன்றைய கல்வி வீழ்ச்சிக்கான காரணங்கள்


·    



  இன்றைய சூழ்நிலையில் மாணவர்களின் கல்வியானது பெருமளவில் மாற்றத்தை கொண்டுள்ளதை நாம் காணலாம். மாணவர்கள் புத்தக நிலையில் இருந்து தொழிநுட்ப சாதனத்திற்கு மாற்றம் பெற்றுள்ளனர். இந்த நிலை காலத்தின் தேவையாக இருந்த போதிலும் புத்தக பைக்கற்றுக்கள் எத்தனயோ அறிஞர்களையும் வித்துவான்களையும் கல்விமான்களையும் உருவாக்கி இருப்பதை நாம் மறக்க கூடாது. அந்த வகையில் இன்றைய மாணவர்களிடம் பல்வேறுப்பட்ட விடயங்களில் இடர்படுகின்றமையை நாம் காணலாம்.

கற்பதில் ஊக்கமின்மை
ஞாபக மறதி
சிந்திக்கும் திறன் குறைவு
ஆக்கத்திறனில் ஈடுபடாமை
தனிமையை விரும்புதல்
மைதான விளையாட்டை மறத்தல்

போன்ற  உதாரணங்களை நாம் சுட்டிக் காட்டலாம். இவ்வாறான நிலைகளினால் என்னத்தான் கஷ்டப்பட்டு ஆசிரியர்கள் கற்பித்தாலும் கல்வியின் பெறுபேறு பாதகமான ஒரு தன்மையையே காணப்படுகிறது. மற்றும் இன்றைய கல்வவி சூழ்நிலையில் அனேகமான வெளிக்காரணிகள் பெறுமளவு இந்த கல்வி வீழ்ச்சிக்கு காரணமாக திகழ்கிறது. இவ்வாறான கல்வி வீழ்ச்சி நிலைக்கு காரணங்களை தொகுத்து ஆராயப்பட்டதில் கீழ்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளுதல் முக்கியமாகும்.

கல்வி வீழ்ச்சிக்கான காரணங்கள்

1. கண்டிப்பு  அற்ற பிள்ளை வளர்ப்பு
2. சின்னத்திறைக்கு அடிமையாகி போன பெற்றோர்
3. சுதந்திரமான (வடிக்கட்டல்கள்) இல்லாத இணையப்பாவனை
4. திட்டமிட்டு ஏற்படுத்தப்ட்ட போதை பாவனை
5. சட்டத்தை மதிக்காத பொலிசார்
6. இளவயது திருமணங்கள்
7. பயனற்ற விளையாட்டுக்கள்
8. பணம் சம்பாதிப்பவரின் பகட்டு வாழ்வுக் காட்சி
9. தனியார் கல்வி மோகம் அதிகரித்தல்
10.இளவயது சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதல்

Post a Comment

0 Comments