உருவக அணி




www.asiriyam.com
www.asiriyam.com

அறிமுகம்


உவமை அணியை பொருத்தவரை ஒரு பொருளை போன்றது மற்றையது எனக் கூறுவதற்கு பயன்படுகிறது ஆனால்  உருவக அணியை பொருத்தவரை அதுதான் இது இதுதான் அது என இரண்டிற்கும் வேறுபாடு அற்ற நிலையை     வெளிபடுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது.  உருவக அணி இரண்டினுக்கும் வேற்றுமை இல்லை அவை இரண்டும் ஒன்றே என்ற மனவுணர்வு தோற்றுவிக்கிறது. 

உவமையணி               
 தாமரை போன்ற முகம்
  •     உவமையணியில் உவமானம் முன்னும் உவமேயம் பின்னும்        இருக்கும்
  •    இரண்டினுக்கும் ஒப்புமை காட்ட உவமை உருபுகளான      இடையில் போல, புரைய, அன்ன முதலான உவமை உருபுகளுள் ஒன்றுவரும்
    உருவகம்                     
      கண் ஆகிய மலர்   
     கண்மலர்         
  •  உருவக அணியில் உவமேயம் முன்னும் உவமானம்பின்னும் வரும்.
  •  இவற்றை ஒற்றுமைப் படுத்துவதற்காக 'ஆகிய'என்ற உருபு                         இடையில் வரும்
  •     ஆக' என்ற உருபும் வருவதுண்டு. இவை 'உருவக உருபுகள்' என்று                          கூறப்படும்.இவை மறைந்து வருதலும் உண்டு
மலர்போன்ற கண், மலர்க்கண் - உவமை
மலர் போன்ற கண் என்ற உவமையில் மலரும் கண்ணும் வேறு வேறு எனும் உணர்வு தோன்றுவதையும்

கண் ஆகிய மலர் என்ற உருவகத்தில் கண்ணே மலர், கண்ணும் மலரும் வேறு வேறல்ல என்னும் உணர்வு தோன்றுவதையும் காணலாம்
உவமையாகின்ற பொருளுக்கும் (உவமானம்) உவமிக்கப்படும் (உவமேயம்) பொருளுக்கும் இடையிலான வேறுபாட்டை நீக்கி, அவை இரண்டும் ஒன்றே என்னும் உள்ளுணர்வு தோன்றுமாறு ஒற்றுமைப் படுத்திக் கூறுவது உருவகம் என்னும் அணியாகும். அதாவது உவமேயத்தில் உவமானத்தை ஏற்றிக் கூறுதல்.


உருவக அணியின் வகைகள்

உருவக அணி மொத்தம் பதினைந்து வகைப்படும் என தண்டியலங்காரம் காட்டுகிறது. (தண்டி. 37)

  1. தொகை உருவகம்                               
  2. சமாதான உருவகம் 
  3. உருவக உருவகம்    
  4. விரி உருவகம்     
  5. தொகைவிரி உருவகம் 
  6. இயைபு உருவகம் 
  7. இயைபு இல் உருவகம் 
  8. அவயவ உருவகம்   
  9. வியனிலை உருவகம் 
  10. சிறப்பு உருவகம் 
  11. முற்று உருவகம்
  12. விரூபக உருவகம் 
  13. அவயவி உருவகம்
  14. ஏகாங்க உருவகம் 
  15. அநேகாங்க உருவகம்

Post a Comment

2 Comments

  1. பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் இந்த துறை சார்ந்தவர்களுக்கும் மிகவும் பயனுள்ள பதிவு.

    ReplyDelete
    Replies
    1. உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு எமது நன்றிகள்

      Delete

உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்