• 1658 யாழ்ப்பாணம் ஒல்லாந்தாரால் கைப்பற்றப்பட்டது
• நில அளவை சீர்த்திருத்தங்களை கொண்டுவந்தனர்.
• நிதி பரிபாலனத்தில் தேசவழமை சட்டத்தை கொணர்ந்தமை
• நீதி உரோம டச்சு சட்டத்தை அமுல் செய்தமை
• போர்த்துகேயரைவிட நிர்வாகத்திறன், சமய பொரை, சமய இலக்கியம், இலக்கிய சுதந்திரம் முதலியன சிறந்து விளங்கிய காலம்
• புரடஸ்தாந்து மதத்தை பரப்புதல்
•போர்த்துகீசர் ஒல்லாந்தர் காலத்தை ஒரு கால கட்டமாக நோக்குதல் வேண்டும். பேராசிரியர் க.சிவதம்பி “ஒருங்கு சேர வைத்து நோக்கும் பொழுது ஈழத்திலக்கிய வளர்ச்சியில் முக்கிய பண்புகள் சில துலக்கமாகத் தெரிவதைக் காணலாம்.

ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்
1. இந்துசமய இலக்கியங்கள்
2. கிறிஸ்தவ மத இலக்கியங்கள்
1. இந்துசமய இலக்கியங்கள்
2. கிறிஸ்தவ மத இலக்கியங்கள்
இலக்கிய வடிவங்கள்
1. பள்ளு
2. கேவை
3. அம்மானை
4. தூது
5. காதல்
6. குறவஞ்சி
7. ஊஞ்சல்
8. அந்ததி
9. புராணம்
10. சோதிடம்,வைத்தியம்
11. நாடகம்
1. பள்ளு
2. கேவை
3. அம்மானை
4. தூது
5. காதல்
6. குறவஞ்சி
7. ஊஞ்சல்
8. அந்ததி
9. புராணம்
10. சோதிடம்,வைத்தியம்
11. நாடகம்
1. பள்ளு இலக்கியங்கள்
- பறாளை விநாயகள் பள்ளு
- தண்டிகை கணகராயன் பள்ளு
பறாளை விநாயகள் பள்ளு
- நல்லூர் சின்னத்தம்பி புலவர் பாடியது
- பாட்டுடைத்தலைவர் விநாயகர்
- யாழ்ப்பாண சுழிப்புரத்தில் உள்ள பறாளை எனும் இடத்தில் வீற்றிருக்கும் விநாயனரை பற்றியது
- 130 செய்யுள்கள். சிந்து, விருத்தம், கலிப்பா என்பவற்றால் ஆனது
- மூத்தப்பள்ளி, இளைய பள்ளி,பள்ளன்,பண்னைக்காரன் என்போரை உள்ளடக்கியது.
- மூத்தப்பள்ளி, பள்ளன், பண்னைக்காரன் ஈழமண்டலத்தை சேந்தவர்களாகவும், இளைய பள்ளி சோழமண்டலத்தை சேர்ந்தவர்களாக குறிப்பிடப்படல்.
- பண்னையில் வேலை செய்பவர்கள் பண்னைக்காரன் வரும் போது எழுந்து அவனை வணங்கும் செய்திகளும் கூறப்பட்டுள்ளது.
- இலங்கை வரலாற்றில் கதிரைமலைபள்ளுக்கு அடுத்து முக்கியமான பள்ளு இலக்கியமாக இது விளங்குகின்றது.
தண்டிகை கணகராயன் பள்ளு
- மா.வை. சின்னக்குட்டி புலவர் பாடியது ஈழத்து பிரபந்தங்களுள் தனிமனிதனை பாடிய முதல் பள்ளு இதுவாகும்
- 1789ல் இது பாடப்பட்டது
- யாழ்ப்பாண தெள்ளிப்பளையில் நிலப்பிரபுத்துவராக விளங்கிய கனகராய முதலியாரை பாட்டுடைத் தலைவராக கொண்டது.
- பாட்டுடைத் தலைவரின் பெயராலயே அழைக்கப்படாமல் அவருடைய முன்னோரின் பெயராலயே அழைக்கப்பட்டல்.
- இந்நூல் கணகராயன் பற்றியும் அவரது உறவினர்கள் பற்றியும் அதிகம் பேசுவதால் பொதுவாக அவர்களின் முன்னோரின் பெயராலயே அழைக்கப்படுகின்றது.
- ஞானப்பள்ளுவை விட இலக்கிய சுவை மிக்கது.
2. கோவை
• கரவைவேலன் கோவை
• இலங்கையின் முதலாவது கோவை இலக்கியம் ஆகும்
• நல்லூர் சின்னத்தம்பி புலவரால் பாடப்பட்டது
• யாழ்ப்பாண கரவெட்டி ஊரைச் சேர்ந்த வேலாயுத பிள்ளை (வேலாயுத முதலியார்) அவர்களை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது.
• கட்டளை கழித்துறையால் ஆனது
• 425 பாடல்கள் தற்போது 127 பாடல்கள் மட்டுமே காணப்படுகின்றது.
• முதலியார் கோவை பிரபந்தத்திற்கு ஒவ்வொரு செய்யுளுக்கும் ஒவ்வொரு பவுன் பதித்த தேங்காய் பரிசாக வழங்கப்பட்டது.

- கஞ்சன் அம்மானை
- வியாக்கிரபதபிரசங்கம்
- தேவபிரசாதனையின் கதை
- வியாகுல பிரசங்கம்
- தலைவியை பெண்கள் அம்மானை ஆடுமாறு குறிப்பிடுவது
- பேச்சுவழக்கு சொற்களும் எளிமையான நடையையும் கொண்டது
- ஒரே விடயத்தை மீண்டும் மீண்டும் மக்கள் விளங்கிக் கொள்ளும் பொருட்டு குறிப்பிடுவது
- விருத்தம் கட்டளைகலித்துறை ஆகியவற்றால் ஆனது.
- சோழர் ஆட்சின் பின்னர் தனி இலக்கியமாக உருவாகியது.
4. காதல்
உலா என்ற இலக்கியத்தில் இருந்து பவனிக்காதலும், பவனிக்காதலில் இருந்துகாதல் இலக்கியமும் தோற்றம் பெற்றது
உலா என்ற இலக்கியத்தில் இருந்து பவனிக்காதலும், பவனிக்காதலில் இருந்துகாதல் இலக்கியமும் தோற்றம் பெற்றது
வெறுகல் சித்திரவேலாயுத காதல்
- திருகோணமலை தம்பலகாமத்தை சேர்ந்த வீரகோன் முதலியார் பாடியது
- வெறுகள் சித்திரவேலாயுத சுவாமிகள் மீது பாடியது
- 421 கன்னிகளை கொண்டது
• சித்திரவேலாயுதர் உலாபோதல்
• அவரைகண்டு பெண் ஒருத்தி மயங்குதல்
• அவர் அவளை பூஞ்சோலையில் சந்தித்தல்
• அப்பெண்ணுக்கு குறத்தி குறி சொல்லுதல்
• அவள் கிளியை தூது அனுப்புதல்
• வேலாயுதர் அதற்கு மாலையை அனுப்புதல்
• அப்பெண் அம்மாலையை அணிதல்
இந்நூலில் கண்டி நகரை ஆண்ட இராஜசிங்க மன்னனின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது
5. தூது

- குருநாதர் சுவாமி பிள்ளைவிடுதூது
- பஞ்சவிடுதூது
குருநாதர் சுவாமி பிள்ளைவிடு தூது
- வரத பண்டிதர் இயற்றியது
- காங்கேசன்துறை கன்னியவன் என்ற இடத்தில் எழுந்தருளியுள்ள குரு நாதர் சுவாமியை போற்றி பாடியது
- கலிப்பாவால் ஆனது
- தலைவி ஒருத்தி தனக்கு குரு நாதர் மீது ஏற்பட்ட காதலை எடுத்துரைப்பதாக இந்நூல் விளங்குகின்றது.
- தன் காதலின் பொருட்டு கிளியை தூது அனுப்புவதாக இது அமைகின்றது.
பஞ்சவிடுதூது
- சின்னத்தம்பி புலவர் பாடியது
- பாட்டுடைத் தலைவர் கைலாய நாதர் (இலங்காதரி)
- சந்திர மோகினி என்ற பெண் கைலாய நாதர் மீது காதல் கொண்ட வரலாரை குறிப்பிடுகிறது.
- வெண்ணிலா, தென்றல், கிளி, அன்னம், முதலியவற்றையும் தோழியையும் தூதுவராக பயன்படுத்தியுள்ளதை காணலாம்.
- அவளை திருமணம் செய்வதாக செய்தி அனுப்புதல் தொடர்பான தகவல் உள்ளடங்குகின்றது
- சமய சார்பு, வரலாற்று தன்மை, பாராம்பரிய வழிபாட்டு நம்பிக்கை உடையதாக இந்நூல் காணப்படுகின்றது.
- இந்நூல் இனுவை இழந்தாரின் கோயிலில் விடிய விடிய பராயணம் செய்யப்படுகின்றது.
- இந்நூல் தூது இலக்கியங்களில் இருந்து வேறுபட்டதமாக காணப்படுகின்றது.
- கலிவெண்பாவுக்கு பதிலாக அகவல், கலிப்பா என்பவற்றை பயன்படுத்தியுள்ளனர்
- ஒரு பொருளுக்கு பதிலாக பல பொருளை தூதாக அனுப்புதல்
- தூதாக அஃறினை பொருளை அனுப்புவது வழக்கம் இங்கு உயர்திணை பொருளையும் அனுப்பியுள்ளனர்
- காதல் இலக்கிய்களில் தலைவன் பெயர் மட்டுமே குறிப்பிடப்படும் இங்கு தலைவியின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. (சந்திரமோகினி)
- தூது சென்ற பின்பு விருப்பத்தை தெரிவிக்க மாலை அனுப்புவது வழக்கம் ஆனால் இந்நூலில் “தலைவியை மணப்பதாக கூறு” எனும் செய்தி மட்டுமே தோழியிடம் அனுப்பப் படுகின்றது.
6. குறவஞ்சி
- மருதப்ப குறவஞ்சி
- சந்திரசேகர குறவஞ்சி
- கதிரைமலை குறவஞ்சி
- காரை குறவஞ்சி
7. புராணம்
- சிவராத்திர புராணம் - வரதர் பண்டிதர்
- ஏகாதாசிபுராணம் - வரதர் பண்டிதர்
- பிள்ளையார் கதை - வரதர் பண்டிதர்
- யோசப்புபுராணம் - கூழங்கை தம்பிரான்
- அருள்வேதப்புராணம் - யாகஸ் சேரமே கொன்ஸ் அல்வேஸ்
சிவராத்திரி புராணம்
• சிவராத்திரி வரலாற்றை கூறுவது
•அதன் மகிமையையும், அதனை அனூ~;டிக்கும் முறையையும் குறிப்பிடுகின்றது
•இவ்விரதத்தால் பயனடைந்தோர் வரலாற்றை குறிப்பிடுகின்றது. (சிவகுமாரன், கவ்மினி, அக்குடான், கண்ணூடதாபாதன், விபரிசன்,குபேரன், சாலிகோக்கிரன்)

• 9 சருக்கங்களையும், 691 செய்யுள்களையும் கொண்டது.
ஏகாதாசி புராணம்
திருமாலுக்குறிய ஏகாதாசி விரதம் பற்றிய வரலாற்றை குறிப்பிடுகின்றது
விரத நிர்ணயம், அதன் மகிமை, அனுஸ்டித்து பலனடைந்தோர் பற்றிய தகவல்களை கூறுகிறது.
உருக்கு மாங்கதன், பீமன் போன்றோரின் வரலாறு கூறப்படுகின்றது.
விரதத்திற்கான கால நிர்ணயம் கூறப்படுகின்றது.
3சருக்கங்களும் 158 செய்யுள்களும் உடையது
1. காலநிர்ணய சர்க்கம்
2. உருக்கு மாங்கத சருக்கம்
3. விமேகாதசி சருக்கம்
பிள்ளையார் கதை
- ஆசிரியர் வரத பண்டிதர்
- விநாயகர் விரத மகிமை பற்றி கூறுதல்
- விநாயகரின் தோற்றம் வரலாறு பற்றி கூறுதல்
- அனுடித்து மகிமை பெற்றோரின் வரலாறு\விரதத்திற்கான கால நிர்ணயம்
- அகவற்பாவால் ஆனது
- பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா - பிள்ளையார் புராணம் படலமுறையையும், பிள்ளையார் கதை பராயண முறையையும் உடையது.
8. அந்தாதி
- மறைசைஅந்தாதி
- கல்வளை அந்தாதி
- புலியூர் அந்தாதி
மறைசைஅந்தாதி
- சின்னத்தம்பி புலவர் பாடியது
- திருமறைக்காடு எனப்படும் வேகாரணியத்த்தில் கோவில் கொண்ட
- வேதாரணி ஈஸ்வரரை பாட்டுடைத் தலைவராக கொண்டது
- திருமறைகாடரை புகழ்ந்து அவரை வணங்கி மக்கள் ஈடேற்றம்
- அடையளாம் என்பதை விளக்குவது
- கலித்துறை யாப்பில் பாடப்பட்டது
- அகப்பொருள்துறை தழுவி தலைவி, தலைவன், தோழி, ஆகியோரின்
- கூற்றுக்களால் அமைந்த பாட்டுக்களை உடையது.
கல்வளை அந்தாதி
- பாடியவர் சின்னத்தம்பி புலவர்
- யாழ்ப்பாணத்தில் கல்வளை எனும் இடத்தில் கோயில் கொண்டிருக்கும் விநாயகர் மீது பாடப்பட்டது.
- விநாயகரது பெருமை, அவரை துதிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
- கட்டளை கலித்துறையில் பாடப்பட்டுள்ளது
- யமகம் எனும் சொல் அணி பயன்படுத்தப்பட்டுள்ளது.
- அகப்பொருளில் அமைந்த செய்யுள்களைக் கொண்டது. தலைவன், தலைவி, செவிலித்தாய் கூற்றுக்காளக காணப்படுகின்றது.
- கல்வளை அந்தாதி சின்னத்தம்பி புலவரின் வித்துவச் செருக்கை காட்டுவதாய் அமைகின்றது.
9. சோதிட,வைத்திய நூல்கள்
- சந்தான தீபிகை (சோதிடம்)
- அமுதாகரம் (வைத்தியம்)
சந்தான தீபிகை (கி.பி 1713)
- யாழ்பாண அராலியை சேர்ந்த இராமலிங்க முனிவரால் எழுதப்பட்டது.
- வடமொழி சந்தானதீபிகையின் தமிழ் மொழிப்பெயர்ப்பாகும்.
- சந்தான விருத்தி தொடர்பாக சோதிட அம்சங்களை இது விளக்குகின்றது.
- இவ் ஆசிரியரே இலங்கையில் வாக்கிய பஞ்சங்கத்தை முதன் முதலில் கி.பி 1667ம் ஆண்டு அறிமுகம் செய்தார்.
அமுதாகரம்
- இலங்கையில் சித்த மருத்துவம் தொடர்பாக தோன்றிய முதலாது இலக்கியம் இதுவாகும்.
- வரத பண்டிதரால் எழுதப்பட்டது.
- விஜந்துக்கள் தீண்டினால் செய்ய வேண்டிய மருத்து முறைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்நூல் எழுந்த காலத்தில் இருந்தே சித்த மருத்துவம் இலங்கையில் மக்களிடையே பரவலாயிற்று
புலியூர் அந்தாதி
- புலியூர் என்பது சிதம்பரத்தின் மற்றுமொரு பெயர் ஆகும்
- மாதக்கல் மயில்வாகனப்புலவர் பாடியது
- பாட்டுடைத்தலைவன் சிதம்பர சிவபெருமான்
- சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை குறிப்பிடுவதாக உள்ளது.
- 100 செய்யுள் கட்டளை கலித்துறையில் ஆனது.
- அகப்பொருள் சார்ந்த செய்யுள் அமைப்பு
- யமகம் எனும் சொல்லணி பயன்படுத்தப்பட்டுள்ளது “மணக்கும் சரதத்,மணக்கும் சரர்நம்…”
வேறு சில இலக்கியங்கள்
1) கணபதி ஐயர் - வசட்டுநகர் பிட்டிவயற் பத்திரகாளியம்மை ஊஞ்சல்
2) இணுவை சின்னத்தம்பி புலவர் -சிவகாமியம்மை துதி
3)கூழங்கை தம்பிரான் - நல்லைக் கலிவெண்பா, சித்திவிநாயகர் கலி வெண்பா, சித்திவிநாயகர் திருவிரட்டை மணிமாலை
4)பிராஞ்சிசுப் பிள்ளை – பிள்ளை கவி, தசவாக்கிய விளக்கப்பதிகம், திருவாசகம், கீர்ததனை திரட்டு, பச்சாதத்தாபப் பதிகம், இரட்சகப் பதிகம்,
5) வரதபண்டிதர் - கணேச விற்கோட்ட விநாயகர் ஊஞ்சல்6) லோறஞ்சுப் புலவர் - கிறிஸ்தவ கீதங்கள்

நல்லூர் சின்னத்தம்பி புலவர்
• 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த முக்கியமானதொரு இலக்கியஙவாதியாவர்.
• ஒல்லாந்தர் காலத்தில் கச்சேரி முதலியாராக செயற்பட்டார்
• தேசவழமை சட்டம் உருவாக்கப்பட்டபோது அதற்கு உதவினார்
• பல்லவராயரின் இளைய மைந்தர்
•இயற்பெயர் செதுங்க மாபான முதலி – சின்னத்தம்பி புலவர் என அழைக்கப்படுகின்றார்
•சொல்வளமும், வித்துவச்செருக்குமுடைய குடும்ப பிண்ணனியில் பிறந்தவர். எனினும் கல்வியை தொடரவில்லை
• சிறு வயதில் குறும்பு தனமும் ஊர் சுற்றித்திரியும் இயல்பும் கொண்டவர்.
• இளமையில் கவிபாடும் தன்மை உடையவர்
•பல்லவராயன் மீது மதிப்பு கொண்ட தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவர் அவரது வீட்டை தேடி வந்த போது சின்னத்தம்பி புலவர் கவி மூலம் வீட்டை அடையாலப்படுத்தினார். “பொன் பூச் சொரியும் பொலிந்த செழுந்….”எனும் பாடல் மூலம் வழி காட்டினார்.
•தந்தையார் பாடிய ஒரு செய்யுளின் இருதி இரு வரிகளை பாடி முடித்துள்ளார்
•கணேசையர் எனும் நில பிரபு இவருடைய கவித்திறனை கண்டு பண்டாரக்குளம் எனும் வயல் நிலத்தை சன்மானமாக வழங்கியுள்ளார்
• இதற்கு நன்றி கூறும் வகையில் “நச்சு படவரவின் நடனம் புரிதிம்ம….” என தொடங்கும் பாடல் ஊடாக ஐயரானவர் காளிங்கன் என்ற பாம்பின் தலையில் நடனமாடிய கண்ணனோடு ஒப்பிடத்தக்கவர் என்கின்றார்.

•இவரது படைப்புக்கள் - கல்வளை அந்தாதி, மறைசையந்தாதி, கரவைவேலன்; கோவை, பராளை விநாயகர் பள்ளு, நாலுமந்திரி கும்மி நூல்.
மாதகல் மயில்வாகனப்புலவர்
மாதகல் மயில்வாகனப்புலவர்
- யாழ்ப்பாண மாதகல் கிராமத்தில் பிறந்தவர்
- தந்தை பெயர் சுப்பிரமணியம்
- கிள்ளைவிடு தூது பாடிய மாதகல் சிற்றம்பல புலவரான தனது மாமாவிடம் இளமை கல்வியை கற்றார்.
- தமிழ் நாட்டில் இருந்து இலங்கை வந்து தமது தமிழ் அறிவை மேலும் வளர்த்துக்கொண்டார்.
- வாழ்ந்நத காலம் - 18 நடுபகுதி, 18பின், 19 முன் என பலவாரு கூறப்படுகின்றது.
- இவரது படைப்புக்கள் - புலியூர் அந்தாதி, ஞானலங்காரரூப நாடகம், காசியாத்திரை விளக்கம், யாழ்ப்பாணவைபவமாலை (உரைநடை)
போரத்துகீச ஒல்லாந்தர் காலத்து இலக்கிய பண்புகள்
1. இலக்கியத்தில் ஒரு புதிய போக்கு காணப்பட்டது
2. ஒல்லாந்தர் காலத்தில் மதச்சுதந்திரம் அதிகமாக காணப்பட்டது
3. சிந்தனை சுதந்திரம் அதிகமாக காணப்பட்டது
4. அதிகளவான இலக்கியவாதிகள் தோற்றம் பெற்றமை
5. பொதுமக்கள் சார்பான இலக்கியங்கள் ரேதாற்றம் பெற்றமை
6. இலக்கிய கலங்கள் விரிவடைதல்
7. நாடகத்தின் எல்லை விரிவடைதல்
8. உரைநடை வளர்ச்சிக்கான ஆரம்ப முயற்சிகள் இடம்பெற்றமை

0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்