அறிமுகம்
அரசன் அல்லது ஆட்சியாளன் மக்களை ஆட்சி செய்த காலம் முடிந்து மக்கள் தங்களை தாங்களாகவே ஆட்சி செய்யும் காலத்தின் தோற்றுவாயில் இருக்கும் நாம் இன்று ஜனநாயக சோசலிஸ ஆட்சியினுடாக சிறந்த ஆட்சியை ஏற்படுத்தலாம். மற்றும் சமஸ்டி ஆட்சி, ஒற்றையாட்சியினுடாக சிறந்த ஆட்சியை ஏற்படுத்தலாம். அங்கே மக்களின் பங்குபற்றல் அதிகமாக இருக்கும் என்ற பலகருத்துக்கள் நம்மிடையே புரையோடிக்கொண்டிக்கும் இவ்வேளையில் இவ் உள்ளுராட்சி முறையினுடாகவே மக்களை தீர்மானம் எடுத்தல் மற்றும் ஆட்சி அரசியலில் பங்குபற்றும் அளவினை அதிகரிக்கலாம். உள்ளுராட்சி முறையினுடாகவே இன்று பல நடைமுறை அரசுகளில் மக்கள் பங்குபற்றல் அதிகமாகக் காணப்படுகின்றது என்பதையும் இவ் கட்டுரையில் ஆராய முன்வந்துள்ளேன். இதனை பின்வரும் விடையங்களை ஆராய்வதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
அரசன் அல்லது ஆட்சியாளன் மக்களை ஆட்சி செய்த காலம் முடிந்து மக்கள் தங்களை தாங்களாகவே ஆட்சி செய்யும் காலத்தின் தோற்றுவாயில் இருக்கும் நாம் இன்று ஜனநாயக சோசலிஸ ஆட்சியினுடாக சிறந்த ஆட்சியை ஏற்படுத்தலாம். மற்றும் சமஸ்டி ஆட்சி, ஒற்றையாட்சியினுடாக சிறந்த ஆட்சியை ஏற்படுத்தலாம். அங்கே மக்களின் பங்குபற்றல் அதிகமாக இருக்கும் என்ற பலகருத்துக்கள் நம்மிடையே புரையோடிக்கொண்டிக்கும் இவ்வேளையில் இவ் உள்ளுராட்சி முறையினுடாகவே மக்களை தீர்மானம் எடுத்தல் மற்றும் ஆட்சி அரசியலில் பங்குபற்றும் அளவினை அதிகரிக்கலாம். உள்ளுராட்சி முறையினுடாகவே இன்று பல நடைமுறை அரசுகளில் மக்கள் பங்குபற்றல் அதிகமாகக் காணப்படுகின்றது என்பதையும் இவ் கட்டுரையில் ஆராய முன்வந்துள்ளேன். இதனை பின்வரும் விடையங்களை ஆராய்வதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
- உள்ளுராட்சி முறை என்றால் என்ன?
- அதன் போக்கு அறிஞர்களின் கருத்துக்கள்
- உள்ளுர் ஆட்சியில் மக்களின் பங்குபற்றல் எந்த எந்த விடயத்தில் காணப்படுகின்றது என ஆராய்தலும் தீர்மானம் எடுத்தல் செயன்முறையில் உள்ளுராட்சி முறையில் மக்கள் பங்குபற்றலும்
- தீர்மானம் எடுத்தல் செயன்முறையில் உள்ளுராட்சி முறையில் மக்கள் பங்குபற்றலை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்
- நடைமுறை அரசுகளில் தீர்மானம் எடுத்தல் செயன்முறையில் உள்ளுராட்சி முறையில் மக்கள் பங்குபற்றல்
• உள்ளுராட்சி முறை என்றால் என்ன? அதன் போக்கு
உள்ளுராட்சி முறை என்பது ஆட்சியரசியலில் அடிநிலை மக்களைப் பங்கு பற்றச் செய்வதோடு மத்திய அரசின் மத்தியப்படுத்தப்பட்ட, ஒரு முகப்பட்ட செயற்பாட்டை தூரமாக்குவதுடன் தீர்மானம் எடுத்தல், அமுல்படுத்தல், அரசாங்க செயற்பாட்டினை மேற்பார்வை செய்தல் என்பவற்றை மக்களுக்கு கூடியளவு பகிர்ந்தளிப்பதாகும். இது கூடியளவு மத்திய ஆட்சியை விட நன்மையைப் பெற்றுத்தருகின்றது. மத்திய ஆட்சியில் இருந்து அதிகாரமும் சரி கொள்கை அமுலாக்கமும் மேலிருந்து கீழ் நோக்கி அதாவது மத்திய அரசால் கொள்கைகள் தீர்மானிக்கப்பட்டு மாகாண பிரதேச உள்ளுராட்சிகளுக்கு நடைமுறைப்படுத்துவதற்காக அனுப்பபடுகின்றது. இதில் மக்களின் விருப்பு பங்களிப்பு இருக்காது அதே நேரம் உள்ளுராட்சி முறையில் கொள்கைகள் தீர்மானங்கள் திட்டங்கள் மக்களின் பங்கு பற்றுதலுடன் விருப்புடன் கீழிருந்து மேலாகச் செல்கின்றது இங்கு ஆட்சியாளர்களின் விருப்பை விட மக்களின் விருப்பே முக்கியமாக நோக்கப்படுகின்றது. இவ்வாறான அமைப்பாகவே உள்ளுராட்சி காணப்படுகின்றது.
புதிய பரிணாமம்
உலக மயமாக்களின் காரணமாக தனிமனிதன் தான் இருந்த இடத்தில் இருந்தே அரசியல் பொருளாதாரம் சமுக விடயங்களில் பங்கு பற்றக்கூடியவாறு காணப்படுகின்றது. இது குறித்த அரசுக்குள் தொடங்கி அயல் பிராந்திய அரசுகள் என பிராந்திய ரீதியில் மக்களின் பங்கு பற்றலை அதிகரிக்கச் செய்கின்றது. இதன் பயனாக சாதாரண அரசுகளில் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள வெளிவிவகாரம் கூட இன்று உள்ளுராட்சி அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவை தமது எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் சுயமாக கொள்கை உருவாக்கம் அமுலாக்கத்தில் இயங்கச் செய்கின்றது.
நவீன அணுகுமுறை
உள்ளுர் சமூகங்களின் பங்களிப்பு இன்றி ஜனநாயகமானது பூரணத்தவமடையாது. ஆட்புல எல்லையின் விஸ்தரிப்புக்கும் ஆளுமைக்கும் உறுதியான உள்ளுர் சுயாட்சியை அவசியமாக்குகின்றது. இது பிரஜைகளுக்கும் ஆட்சியாளருக்கும் இடையிலான உறவினை நெருக்கப்படுத்துகின்றது. மேலும் இது உள்ளுர் அலுவல்களில் மக்களினுடைய பங்களிப்பினை வினைத்திறனாகவும் ஆழமாகவும் செல்லச் செய்கின்றது.சுருங்கக் கூறின் “மக்கள் சமூகத்தின் நேரடியான பங்களிப்பு இல்லாமல் ஜனநாயகமாது பூரணத்தவமடையாது”
உள்ளுர் சமூகங்களின் பங்களிப்பு இன்றி ஜனநாயகமானது பூரணத்தவமடையாது. ஆட்புல எல்லையின் விஸ்தரிப்புக்கும் ஆளுமைக்கும் உறுதியான உள்ளுர் சுயாட்சியை அவசியமாக்குகின்றது. இது பிரஜைகளுக்கும் ஆட்சியாளருக்கும் இடையிலான உறவினை நெருக்கப்படுத்துகின்றது. மேலும் இது உள்ளுர் அலுவல்களில் மக்களினுடைய பங்களிப்பினை வினைத்திறனாகவும் ஆழமாகவும் செல்லச் செய்கின்றது.சுருங்கக் கூறின் “மக்கள் சமூகத்தின் நேரடியான பங்களிப்பு இல்லாமல் ஜனநாயகமாது பூரணத்தவமடையாது”
• அறிஞர்களின் கருத்துக்கள்
J.S Millஇன் கருத்தின் படி ஜனநாயகம் என்பது மக்களின் பிரதிநிதிகளை நேரடியாகப் பங்குபற்றச்செய்கின்றது. அதே நேரம் உள்ளுராட்சியானது மக்களை ஆட்சி அரசியலில் பங்குபற்றச் செய்கின்றது.
பேராசிரியர் டைசியின் கருத்தின் படி உள்ளுராட்சியின் மக்களின் பங்களிப்பானது மத்திய அரசின் சர்வதிகாரத்தை குறைவடையச் செய்கின்றது.
உள்ளுர் ஆட்சியில் மக்களின் பங்குபற்றல் எந்த எந்த விடயத்தில் என ஆராய்தலும்.தீர்மானம் எடுத்தல் செயன்முறையில் உள்ளுராட்சி முறையில் மக்கள் பங்குபற்றலும்
மக்களின் பங்குபற்றல் என்ற எண்ணக்கருவானது பொக்குவில் என்பவர் தனது ஜனநாயகக் கருத்துக்களில் கூறியுள்ளார். இவர் குறிப்பிடும் போது மக்கள் ஒரு அரசியல் செயன்முறையில் பல்வேறு விதமாக தமது பங்குபற்றலை செலுத்தலாம். அந்தவகையில் மக்கள் ஒரு அரசியல் செயன்முறையில் தேர்தலில் வாக்களித்தல், போட்டியிடல், அரசியல் தொடர்பான கூட்டத்தில் பங்குபற்றல், அரசியல் தொடர்பான கருத்துக்களை வாசித்தல், பொது நோக்கத்திற்காக ஒன்று கூடல், தமது அரசியல் கருத்துக்களை எழுத்து பேச்சு செயற்பாட்டின் மூலம் வெளிக்கெண்டு வருதல், உள்ளுர் அரசியல் அலுவல்களில் அதிகளவில் செல்வாக்குச் செலுத்துதல், மக்களுக்கு அரசியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அரசாங்க உத்தியோகத்தர்களாக தொழிற்படுதல், போன்ற பல்வேறு விடயங்களை நாம் நோக்கலாம்.
ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு தமது நேரத்தையும், சக்தியையும், தியாகம் செய்வதன் மூலமும் நல்ல கருத்துக்களைப் பிரேரிப்பதன் மூலமும் அரசாங்க செயன்முறைகளில் எல்லா மக்களுக்கும் தமது நேரடியான பங்களிப்பை வழங்க முடியும் என இந்த பிரஜைகளின் பங்கு பற்றல் என்பது தெளிவு படுத்துகின்றது.மேலும் பிரஜைகள் அரசியல் தொடர்பான விவாதங்களைப் பிரேரிப்பதன் மூலமும் அவற்றைச் சரிவரச் செய்வதன் மூலமும் அதற்கு உறுதியான ஆதரவு வழங்குவதன் மூலமும் மக்கள் அரசியலிலும் தீர்மானம் எடுத்தலிலும் பங்குபற்றலாம். மக்களுக்கு இடையிலான தொடர்பை கருத்துக்களை நேர்மையாகவும் நேருக்கு நேராகவும் பரிமாற்றம் செய்வதற்கு இம் மக்கள் பங்குபற்றல் உதவவும் அதனை விருத்தி செய்யவும் முடியும்.
இம்மக்கள் பங்குபற்றலானது முரண்பாடையுடைய பொதுப் பிரச்சனைகளில் அரசாங்கம் ஒரு பொது முடிவுக்கு வரவும் எப்பொழுதும் ஒரு வெற்றியைத் தரக்கூடிய அடிப்படையில் முடிவுகளைப் பெறுவதற்கும் இயலச் செய்கின்றது. இவ்வாறான செயற்பாடுகள் பிரஜைகளிடையே செயலூக்கத்தினையும் செயலூக்க பிரஜை என்ற தன்மையையும் ஒற்றுமையையும் வளர்க்க முடியும் அது மாத்திரமன்றி அரசியல் செயன்முறைகளில் பங்குபற்றவும் , சமுதாயப் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும் , சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்புக்களை ஏற்கக் கூடிய மக்களை உருவாக்குவதோடு இவ்வாறான ஒரு அரசியல் கலாசாரத்தை வளர்த்தெடுக்கவும் பிரஜைகளின் பங்கு பற்றல் உதவுகின்றது.
உள்ளுராட்சியில் பிரஜைகள் எத்தகைய பங்கினை வகிக்கின்றனர் என்பதனை நோக்கின். அவை பிரஜைகள் தம்முடைய உரிமை, கடமைகளின் அடிப்படையில் பங்கெடுப்பதைக் காணலாம். அவற்றை நோக்கின். (உள்ளுராட்சி நிறுவனங்கள், 2007, பக்: 52)
- உள்ளுராட்சி நிறுவனத்தின் நிதிச் செயற்பாடுகளைக் கண்காணித்தல், அல்லது மக்களின் கணக்காய்வு.
- தகவல்களை அறிவதற்குறிய உரிமைகள்
- உள்ளுராட்சி நிறுவனத்தின் கொள்கைகளை வகுப்பதற்கான செயற்பாட்டில் பங்கேற்றல்
- தெருக்களையும், வீதிகளையும் புணரமைக்கும் போது ஆபத்து ஏற்படக்கூடிய வகையில் உள்ளுராட்சி நிறுவனங்களின் அலுவலர்கள், அல்லது சொந்தக்காரர்கள் செயற்படாத வகையில் தடுக்கும் உரிமை (நகர சபைக் கட்டளை சட்டத்தின் 100ஆவது உறுப்புரையின் கூற்று)
- உள்ளுராட்சி நிறுவனத்தின் கடமைகளைச் செய்கையில் சில தனி நபர்களுக்குத் தனிபட்ட முறையில் ஏற்படும் நட்டங்களுக்கு நட்ட ஈடு வழங்குதல்.
- ஒரு சேவையை இழக்கும் போது பயனுறுதி வாய்ந்த மாற்று நடவடிக்கை பெறும் உரிமை.
- இத்தகைய உரிமைகளை தொடர்ந்து பிரஜைகளின் கடமைகள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
- தமது கட்டிடங்களையும், காணிகளையும் துப்பரவாக வைத்திருப்பதன் மூலம் பிரதேசத்தின் அழகை பேணுதல்.
- பொது மக்களின் வளங்கள் வேறு விடயங்களுக்கு பயன்படுத்தாமை
- பொது மக்களின் வளங்களுக்குத் தீமை விளைவிக்காமை,அது பற்றிய அறிவூட்டல்.
- நீர் மரங்களுக்கும் தெருக்களுக்கும் தீங்கு விளைவிக்காமை
- தமது தனிப்பட்ட ஆதனங்களைத் துப்பரவு செய்யும் போது பொது சொத்துக்களுக்கு தீங்கு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருந்தால் அது பற்றி உள்ளுராட்சி நிறுவனத்திற்கு அறிவித்தல் அவற்றை புணரமைக்க தாம் நடவடிக்கை மேற்கொள்ளல்
- மாடுகள், பன்றிகள் போன்ற தனக்கு தனிப்படட முறையில் சொந்தமான விலங்குகளை பொது மக்களின் வாழ்விற்கு இடையூறு ஏற்படாத வகையில் பராமரித்தல்.
- தெரு ஓரங்களில் பாய்களையோ, உடைகளையோ, அல்லது அத்தகைய பொருட்களையோ தொங்கவிடாமை.
- தெருக்களில் ஏனையோருக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தி வைத்தல்.
- தமது காணிகள், வீடுகள் மலசல கூடங்கள். குப்பைகள் என்பவற்றைப் பிறருக்கு இடையூறு எற்படுத்தும் வகையில் அல்லது சுகாதாரத்தைப் பாதிக்கக்கூடிய வகையில் பராமரிக்காமை.
உள்ளுராட்சியில் பங்கேற்பதன் ஊடாக ஒத்துழைப்பு வழங்கள் மூலம் பல கடமைகளை அடையளாம் காண முடியும்.
தீர்மானம் எடுத்தல் செயன்முறையில் உள்ளுராட்சி முறையில் மக்கள் பங்குபற்றலை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்
சர்வதேச மற்றும் பல்பக்க பிராந்திய இருபக்க நன்கொடைகள் உதவிகள் போன்ற பல எற்பாடுகளை உலக வங்கி சாவதேச நாணயநிதியம் ஆசிய அபிவிருத்தி வங்கி ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புக்களால் வழங்கப்படுகின்ற அரசியல் பன்முகவாக்க நிதிகளைக் குறிப்பிடலாம். அபிவிருத்தி கொள்கையாக்கம் செய்பவர்கள், அரசியல் சமூகவியல் கோற்பாட்டாளர்கள், அரசியல் அபிவித்திக் கொற்பாட்டாளர்கள் என்பவர்களின் கருத்துக்கள் என்பன உள்ளுராட்சி முறையில் மக்கள் பங்குபற்றலை அதிகரிக்க வேண்டும். எனக்கூறுகின்றனர்.
நடைமுறை அரசுகளில் தீர்மானம் எடுத்தல் செயன்முறையில் உள்ளுராட்சி முறையில் மக்கள் பங்குபற்றல்
பொதுவாக உலக நாடுகளில் உள்ளுராட்சி சபைக்கான ஏற்பாடும் அதிகாரம் என்பன 3rd tiers இன் அடிப்டையிலேயே வழங்கப்படுகின்றது ஆனால் இலங்கையில் மட்டும் 2rd tiers இல் வழங்கப்பட்டுள்ளது. இந்தவகையில் நாடுகளிடையே காணப்பம் உள்ளுராட்சி முறையையும் தீர்மானம் எடுத்தலில் மக்கள் பங்குபற்றலையும் நோக்கின்.
ஜேர்மனியில் : பிராந்திய அரசுடன் தொடர்பற்ற தனித்து இயங்கக் கூடிய வகையில் உள்ளுராட்சி நடைமுறையில் உள்ளது. இங்கு உள்ளுராட்சி மக்களின் நேரடி பங்கபற்றலுக்கு ஏற்ப மூன்று வகையில் காணப்படுகின்றது.
• கிராமிய உள்ளுராட்சி அரசாங்கம்
• நகர உள்ளுராட்சி அரசாங்கம்
• metro polinan உள்ளுராட்சி அரசாங்கம்
இவற்றில் மத்திய அரசின் நேரடி தொடர்பு அற்றவகையில் தன்னிச்சையாக செயற்படும் சபையாகக் காணப்படுகின்றது.
கிராமிய உள்ளுராட்சி அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் நேரடி தலையீடு இன்றி செயற்படுகின்றது.
சுவிட்ஷர்லாந்தில் : (27) இருபத்தி ஏழுபேருக்கு ஒரு உள்ளுராட்சி அரசாங்கம் எனவும் 80 சதவீதமான அரசாங்க உத்தியோகத்தர்கள் இவ் உள்ளுராட்சி அரசாங்கத்திலேயே சேவைபுரிகின்றனர். இதன் அரசியல் உறுப்புரை ஏழு மாகாணங்கள் தமக்கிடையேயான சுயமான நிதிப்பங்கீட்டை உறுதிப்படுத்திதுகின்றது.
சுவிட்ஷர்லாந்தில் : (27) இருபத்தி ஏழுபேருக்கு ஒரு உள்ளுராட்சி அரசாங்கம் எனவும் 80 சதவீதமான அரசாங்க உத்தியோகத்தர்கள் இவ் உள்ளுராட்சி அரசாங்கத்திலேயே சேவைபுரிகின்றனர். இதன் அரசியல் உறுப்புரை ஏழு மாகாணங்கள் தமக்கிடையேயான சுயமான நிதிப்பங்கீட்டை உறுதிப்படுத்திதுகின்றது.
இந்தியாவில் : இங்கு பஞ்சாயத்து சபை எனும் பெயரில் காணப்படுகின்றமை என்பது குறிப்படத்தக்கது. இவ் உள்ளுராட்சி முறையில் 30 சதவீதமான பங்கானது பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதும் 2006 ஆம் ஆண்டு ஒரு மில்லியன் பெண்களை பஞ்சாயத்து சபையினூடாக ஆட்சி அரசியலில் பிரவேசிக்கத் தூண்டியது.
இலங்கையில் : மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் என உள்ளுராட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் மக்களின் பங்கபற்றலை பார்ப்போமாயின் 2006ஆம் ஆண்டு தகவலுக்கு ஏற்ப குறைந்தது (லக்கல) 14202 பேர் மக்களுக்கும் கூடியது (பாணந்துறை) 26500 பேர் மக்களுக்க ஒரு உள்ளுராட்சி அரசாங்கம் (பிரதேச சபைகளுக்கு) என காணப்படுகின்றது.
• விமர்சனம் :
இலங்கையில் உள்ளுராட்சிகள் சட்டரீதியாக நிறுவப்பட்டிருந்தாலும் மக்கள் இன்னும் மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைகள் பற்றிய கருத்துக்களை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இக் கட்டமைப்பு மூலமாக அதிகாரம் பரவலாக்கப்பட்டிருந்தாலும் தொடர்ந்தும் தமது பிரதேசத்தின் பாராளுமன்றத்தின் உறுப்பினரை மையமாக வைத்தே சிந்திக்கின்றனர். பிரதேச சபை உறுப்பினர்கள் அனேகமாக மாகாண சபை உறுப்பினர்களின் நிகழ்ச்சி நிரலையே அமுல்படுத்துகின்றனர். இவ்வாறே மாகாண சபை உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் தேவைக்கேற்ப நடந்துகொள்கின்றனர். எனவே இதன் கீழ் மக்களின் சரியான நிகழ்ச்சி நிரல் செயற்படுத்தப்பட மாட்டாது. இவ்வாறே பெண்களின் பங்குபற்றலானது இந்தியாவில் 30சதவீதமாகக் காணப்பட இலங்கையில் 0.1 சதவீதமாகக் காணப்படுகின்றமை நடைமுறையில் உள்ளுராட்சி முறையில் தீர்மானம் எடுத்தலில் மக்களின் பங்கு பற்றலைக் காண்பது அரிதாகவே உள்ளது. இருந்தபோதிலும் சுவிட்ஷர்லாந்தில் போன்ற நாடுகளில் அதிகாரங்கள் உள்ளுராட்சிக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டு பின்னர் மாகாண தேசிய ரீதியில் பகிரப்பட்டு காணப்படுகின்றமையானது உள்ளுராட்சியில் தீர்மானம் எடுத்தலில் மக்களுக்கும் பங்கு உள்ளது என சுட்டிக்காட்டுகின்றது.
• முடிவு
தீர்மானம் எடுத்தல் செயன்முறையில் உள்ளுராட்சி முறையில் எவ்வாறு மக்கள் பங்குபற்றலை உச்சப்படுத்த முடியும் என்பதை பலரும் பல்வேறுவிதமான கோணங்களில் ஆராய்தாலும் அது உள்ளுராட்சி தொடர்பாக மக்களுக்கு அறிவினையூட்டி மக்களுக்கான அதிகாரங்கள் அரசியல் யாப்பு ரீதியாக காணப்பட்டாலே தீர்மானம் எடுத்தல் செயன்முறையில் உள்ளுராட்சி முறையில் மக்கள் பங்குபற்றலை உச்சப்படுத்த முடியும். அவ்வாறன்றி நடைமுறையில் காணமுடியாது. எனவே அதிகாரங்கள் மற்றும் கொள்கை தீர்மானங்கள் கீழிருந்து மேல் வாரியாக செல்ல வேண்டும் அவ்வாறு அமைந்தால் தான் மக்கள் பங்குபற்றலை அதிகரிக்கச் செய்யலாம் அவ்வாறன்றி அதிகாரம் கொள்கை தீமானங்கள் மத்திய அரசில் இருந்து மேலிருந்து கீழ் நோக்கி வந்தால் அது அமுல்படுத்துவதிலும் வெளியீட்டிலும் சிறந்த பலனைத் தராது. தொகுத்து நோக்குமிடத்து எனைய ஆட்சி முறைகளுடன் ஒப்பிடுகையில் உள்ளுரர்டசி முறையில் தீர்மானம் எடுத்தலில் மக்கள் பங்குபற்றுதலும் மக்களுக்கான அதிகாரமும் அதிகமாகக் காணப்படுகின்றமை புலப்படுகின்றது.
• உசாத்துணைகள்
- சந்தானம். கஇ (1967) இ“மக்கள் ஆட்சி”இ தமிழ் வெளியீட்டுக்கழகம் தமிழ் நாடு அரசாங்கம்
- வாடியா. ஏ. ஆர்இ(1966)இ“குடியாட்சியும் சமூதாயமும்”இ கலைவாணி புத்தகசாலை திநகர் சென்னை.
லயனல் குருகேஇ (2008)இ“அன்றும் இன்றும்”இ கொழும்பு: சமூகப்பங்களிப்பு நிகழ்சித்திட்டப் பிரிவு மாற்றுக் கொள்கைக்கான நிலையம். - உப்புல் அபேவாத்தனஇ(2007) இ உள்ளுராட்சி நிறுவனங்கள் சமூகப்பங்களிப்பு நிகழ்சித்திட்டப் பிரிவு மாற்றுக் கொள்கைக்கான நிலையம் 273ஃ1யுஇ கொழும்பு- 10.
- முத்துக்குமாரன். சஇ (1999)இ“நாட்டுமக்களும் நல்லாட்சியும்”இ திருநெல்வெலி சைவ சித்தாந்த நுட்பதிப்புக் கழகம.; சென்னை – 18.
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்