அணிகள்

எதுகை
செய்யுள் அல்லது வாக்கியங்களில் இரண்டாவது எழுத்து ஒன்றிவருமாக
இருந்தால் அது எதுகை எனப்படும்.  இருசீர்களின் இரண்டாம் எழுத்து
ஒன்றித்து வருவது எதுகை எனக் கூறலாம்

       ஓர்ட்டிலே பொன்னும்  ஓர் தட்டிலே நெல்லும் ஒக்க விற்கும்

       கார் ட்டிய  பஞ்ச காலத்திலே  தங்கள் காரியப்  பேர்
 ஆர் ட்டினும் தட்டு வராமலே அன்ன தானத்துக்கு
 மார்ட்டிய துரை மால் சீதக் காதி வரோதயன்

                            'கல்லானாலும் கனவன்
                             புல்லானாலும் புருஷன்'

                            'புலிக்கு பிறந்தவன்
                                  எலி ஆகுமா'

                              'பரணியில் சிறந்தவன்
                                தரணி ஆவான்'

                             'அவரை விதைச்சா
                           துவரையா முளைக்கும்'

                                'கொன்றால் பாவம்
                                தின்றால் போச்சி'

மோனை
செய்யுள் அல்லது வாக்கியங்களில் முதலாவது எழுத்து ஒன்றித்து வருமாக இருந்தால் அது மோனை எனப்படும்
     விதியை நோவார தம் நண்பரை தூற்றுவார்
     வெகுளி பொங்கி பகைவரை நிந்திப்பார்
     திகள் செய்வார், பொய் சாஸ்த்திரம் பேசுவார்.
     சாதகங்கள் புரட்டுவார் பொம்மை சேர்…



'அடுமேய்க்கிறவனை கட்டினாலும் கட்டலாம்
ஆக்கித்தின்றவனை கட்டிக்க கூடாது'



      'திருடனோட சேர்ந்தா
   திருட்டுப் புத்திதான் வரும்'


      'பாவம் ஒரு பக்கம்
        பழி ஒரு பக்கம்'

இயைபு
செய்யுள் அல்லது வாக்கியங்களில் கடைசி எழுத்து ஒன்றித்து வருமாக இருந்தால் அது எதுகை எனப்படும்
     விதியை நோவார தம் நண்பரை தூற்றுவார்
    வெகுளி பொங்கி பகைவரை நிந்திப்பார்
    சதிகள் செய்வார், பொய் சாஸ்த்திரம் பேசுவார்.
    சாதகங்கள் புரட்டுவார் பொம்மை சேர்

'கல்விக்கு புள்ள சாக்கு
கவுன்டருக்கு ஊர் சாக்க'


'மாடு மேய்க்காம கெட்டது
கவுன்டருக்கு ஊர் சாக்கு'

  சிலேடை
ஒரு செய்யுள் அல்லது சொல் அல்லது வாக்கியம் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பொருளை உணர்ததுமாயின் அது சிலேடை எனப்படும்.
      ஆடிக் குடத்து அடையும் ஆடும் போதே இரையும்
      மூடித் திறக்கின் முகம் காட்டும் - ஓடி மண்டை
      பற்றி பரபர எனும் பாரில் பிண்ணாக்கும் உண்டாம்
      உள்ளிடும் பாம்பு எள்எனவே ஓது

  • அறிவில்லாதவன் 
  • புத்தியில்லாதவன் 
இயல்பு நவிற்சி அணி- தன்மை நவிற்சி
எவ்வகை பொருளையும் அல்லது எச்செயலையும் உண்மையான முறையில் உள்ளதை உள்ளவாறு விளக்குவது.
• தன்னையே மறந்து நின்றான்
• அவன் 50 இடியப்பங்களை மட்டுமே உண்டான்

• அவள் அழகானவள்.



உவமை அணி
  • தெரிந்த ஒரு பொருளைக் கொண்டு தெரியாத மற்றுமொரு பொருளுக்கு ஒப்பிட்டு விளக்குவது.
  • சொல்ல எடுத்துக்கொண்ட பொருளை ஒரு பொருளுடனோ அல்லது பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு, தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபுபடுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமையை புலப்படுத்துவது.
  • இதில் உவமானம், உவமேயம், பொதுத்தன்மை, உவமை உறுபு என்பன விளக்கப்படும்.

உவமானம் - தெரிந்த பொருள்
 உவமேயம் - தெரியாத பொருள் அல்லது விளக்க முற்படும் பொருள்

(தெரிந்த பொருள் முன்னாடியும், தெரியாத பொருள் பின்பும் வரும்)


 சில இடங்களில் உவமை உருபு வெளிப்பட்டும் சில இடங்களில் மறைந்தும் வரும்.
1. போல – கிளிபோல பேசினாள்
2. புரைய – வேய் புரை தோள்
3. ஒப்ப – தாயொப்ப பேசும் மகள்
4. உறழ – மறவு உறழ் தடக்கை
5. அன்ன – மலரன்ன சேவடி
 போலப் புரைய ஒப்ப உறழ மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத் துருபே.
உதாரணங்கள்
    மழைக்கை
 புலிமறவன்
 குரங்குமனம்
 குத்துப்பல்
 பவளவாய்
 கயல்விழி
உருவக அணி
உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும்  வேறுபாடு தோன்றாமல் (அதுதான் இது என உறுதிப்டுத்தி கூறுவது) இரண்டும் ஒன்;று உன கூறுதல்
இங்கு உவமானம் - விளக்க எடுத்துக் கொண்ட பொருள், உவமேயம் - தெரிந்த பொருள்
 உவமை அணி- மதிமுகம்
• உருவக அணி- முகமதி

• உவமை அணி- வேல் போன்ற விழி
• உருவக அணி- விழிவேல்

முகதாமரை
கண்மலர்

தற்குறிப்பேற்றம்
இயல்பாக நடக்கும் ஒரு விடயத்திற்கு புலவன் அல்லது கவிஞன் தனது கருத்தை ஏற்றி சொல்லுதல் ( தன் - குறிப்பு - ஏற்றம்)

சிலப்பதிகாரம் - “போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட” 
விளக்கம்
கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வரும் வேளையிலையே மதுரையில் கோவலன் கொள்ளப்படுவான் என்று அக்கொடிகள் எச்சரிப்பதாக கவிஞர் தன் கற்பனையால் குறிப்பேற்றி கூறுவார்.


தையல் துயர்க்குத் தறியாத தம் சிறகால்
கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை
வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல்
கூவினவே கோழிக் குலம் (நளவெண்பா)

நள தமயந்தியை நீங்கி காட்டில் தனியே விட்டுச் சென்ற போது காலை வேளையில் வழமைப்போல கோழிகளும் இயல்பாக கூவுகின்றன. இதனை புகழேந்தி தமயந்தியின் துயரத்தைக் கண்டே சூரியனை விரைவாக வரும்படி கூவுகின்றன என தற்குறிப்பேற்றுகிறான்.

உயர்வு நவிற்சி
  • ஒரு பொருளை அளவுக்கு அதிகமாக உயர்வு படுத்திக் கூறுதல். அல்லது உள்ளதை மிகைப்படுத்தி கூறுவது உயர்வு நவிற்சி எனப்படும்
  • கோட்டை சுவர்கள் வானை தொடுமளவிற்கு உயரமாக இருந்தன
  • தமயந்தி சூடியதாலயே ஆபரணங்களுக்கு அழகு ஏற்பட்டது
  • நாயினுங் கடையோனாகிய எனக்கு அருள்தருவாய்



Post a Comment

0 Comments