தேசத்தை கட்டியெழுப்புவதில் தெற்காசிய நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினை

            
இன்று எல்லா நாடுகளும் ஏதோ ஒரு வகையில் ஒரு குடையின் கீழ் வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்பாடாகியுள்ளது. அதனடிப்படையில் இதற்கான அடிதளத்தை இட்டது யாதெனில் உலகமயமாக்கமே என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு நாடும் எதோ ஒரு வகையில் இன்னொரு நாடோடு அரசியல், பொருளாதாரம், கலாசரம், மதம், மொழி முதலிய பல்வேறுபட்ட விடயங்கலாள் தொடர்புபட்டு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் இவ் உலக நாடுகள் தம்மை புவியியல் ரீதியாக பல கண்டங்களாக பிரித்து அவை தமது அடையாளங்களை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடதக்க விடயமாகும். இத்தகைய அம்சங்கள் பிரித்த நோக்குவதற்கு முன்பாக இவற்றையெல்லாம் ஏற்படுத்த காரணமாக இருந்த வியாபாரத்தின் பொருட்டு இடம்பெற்ற நாடுகான் பயணிகளே அதன் ஒரு பகுதியாகவே பிற்காலத்தில் உலகமயமாக்கம் பரவலாயிற்று.  இத்தகைய உலகமயமாக்கலினால் எவ்வளவோ சாதக பாதக விடயங்களும் ஏற்பட்டவண்ணமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய உலகமயமாக்கம் தமது மதம், மொழி, பொருளாதாரம், அரசியில், விழுமியம், மரபுகள். வழுக்காருகள்  என்று தமது நாடு அல்லது தேசத்திற்கு உரித்தான விடயங்களை இவ் உலகமயமாக்கல் செயற்பாடுகளிலும் இருந்து பாதுகாத்து  தமது தேசியத்தை கட்டியெழுப்புவதிலும் அதனை வழுப்படுத்துவதிலும் பல்வேறு கொள்கைகளையும் திட்டங்களையும் ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

     எனினும் அத்தகைய செயற்பாடுகளுக்கு பங்கம் எற்படக்கூடியவகையில் பல செயற்பாடுகள் தொடர்ந்து ஏற்பட்டவண்ணமாகவே இருக்கின்றது. அதனடிப்படையில் நாடுகான் பயணங்களின் விளைவாக கண்டுபிடிக்கபட்ட நாடுகள் எனும் வரிசையில் தெற்காசிய நாடுகளை பொருத்தவரையில் இலங்கை இந்தியா, நேபாளம், பங்களாதேஸ், பூட்டான். அப்கானிஸ்தான் முதலிய நாடுகளை தனித்தனியே ஒரு தேசமாக கருதாமல் அனைத்தையும் ஒரு தேசமாக கருதி தெற்காசிய  நாடுகளின் தேசத்தை கட்டியெழுப்பவதில் உள்ள பிரச்சினைகள் என்ன எனும் தலைப்பில் இக்கட்டுரையை ஆராய்ந்து செல்வது நோக்கத்தக்கது.

   அந்தவகையில் தெற்காசிய நாடுகளில் அதாவது இலங்கை இந்தியா நேபாளம், பங்களாதேஸ், பூட்டான், முதலிய நாடுகளை ஒன்றிணைத்து தேசத்தை கட்டியெழுப்பவதில் செல்வாக்கு செலுத்தும் சில முக்கிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நாம் இக்கட்டுரையை ஆராய்ந்து செல்வோமானால் அது சாலச்சிறந்ததாக அமையும் அதனடிப்படையில் கீழ்வரும் விடயங்களினூடாக தேசத்தை கட்டியெழுப்புவதில் உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து செல்லாம்.

  •  அரச உருவாக்கத்தில் காலனித்துவ ஆட்சியின் தாக்கம்                                        
  •  சுதந்திரத்திற்கு பின்னரான கொள்கைகள் அவற்றைதீர்ப்பதில்                    எற்படுத்திய தாக்கம்                                                                                                
  •  அதனுடைய பரினாமத்தில்எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய
          சாத்தியமான போக்குகள்
           மேல் கூறப்பட்ட தலைப்புகளை அடிப்படையாகக் கொண்டு தெற்காசிய நாடுகளை தனித்தனியே நோக்காமல் அவை அனைத்தையும் பூகோல ரீதியாக ஒரு தேசமாகக் கொண்டு அதன் வாயிலாக ஒரு பொதுவான தேசத்தை கட்டியெழுப்பும் போது ஏற்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து செல்வோம்.

அரச உருவாக்கத்தில் காலனித்துவ ஆட்சியின் தாக்கம்
          காலனித்துவ ஆட்சி எனும் போது ஆரம்ப கால வரலாறுகளை  சற்று திருப்பி பாரத்தோமானால் எல்லா நாடுகளும் ஏதோ ஒரு வகையில் நாடுகான் பயணங்களின் வாயிலாக கண்டுபிடிக்கப்பட்டவையாக இருப்பதை காணலாம். அதாவது தமது பொருளாதாரம், அரசியல் ஸ்த்தீரதன்மையை விஸ்தரிப்பதன் பொருட்டு இவ் நாடுகான் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதன் அதன்வழி தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இலங்கை இந்தியா போன்ற நாடுகளும் கண்டுப்பிடிக்கப்ட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்ட நாடுகளில் பிரித்தானியர், ஆங்கிலேயர், ஒல்லாந்தர் போர்த்துகேயர் போன்றோர் தமது அதிகாரங்களை பிரயோகித்து அவற்றை தமது காலனித்துவ நாடுகளாக மாற்றிக்கொண்டு தமது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அதாவது தெற்காசிய நாடுகளில் காணப்பட்ட வளங்கள் அனைத்தையும் பொருளாதரத்தின் ஊடாக சுரண்டி தமது நாட்டிற்கு எடுத்து செல்லும் தன்மை உடையதாக அவர்களுடைய கொள்கைகள் காணப்பட்டன¸  அதற்கு ஏற்ற வகையில் அவர்களில் கல்விக்கொள்கை. மதக்கொள்கை என்பனவும் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் காலனித்துவ ஆட்சியின்போது பிரித்தாணியரால் கொண்டுவரப்பட்ட கொள்கைகள் அவர்கள் சார்புடையதாக இருந்தாலும் அவை தேசத்தை கட்டியெழுப்பவதிலும், அபிவிருத்தியை மேற்கொள்ளுவதிலும் பெரும் பங்களிப்பை செலுத்துவதாக அமைந்தது. அந்தவகையில் சுதந்திரத்திற்கு முன் தெற்காசிய நாடுகளில் கொண்டுவரப்பட்ட பல கொள்கைகளை பற்றி கீழே நோக்கி செல்லலாம்


    அங்கிலேயர் தமது மதத்தை பரப்ப மிசனரிகளை உருவாக்கி அதனூடாக கல்வியை வழங்கி மக்களை தமது மதத்திற்கு திசை திருப்பினர்¸ உதாரணமாக இலங்கையில் லண்டன் மிசனிரி 1804ம் ஆண்டும், அமெரிக்க மிசனரி 1816ம் ஆண்டும், பப்ளிஸ் மிசனிரிகளும் உருவாக்கப்பட்டன. இதனை தடுப்பதற்காக உள்நாட்டில் காணப்பட்ட சுதேசிய இனத்தவர்கள் தமது மதத்தை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டனர். எடுத்துகாட்டாக பெளத்த மதத்தவரர் தமது மதத்தை பாதுகாக்க 1841ம் ஆண்டு வனராஜ சித்தாந்த தேரர் தலைமையில் ரத்மலானையில் பரமத சைத்திய பிரிவினா அமைக்கப்பட்டது. தொடர்ந்து 1873ம் ஆண்டு இக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரரால் மாலிகாவத்ததை வித்தியோதய பிரிவினா உருவாக்கப்பட்டது. மேலும் பொளத்தத்தை வழியுருத்தும் லக்மின பாஹன எனும் பத்திரிகை வெளியாகியது.அவ்வாறே இந்துமதத்தை பாதுகாக்கும் பொருட்டு ஆறுமுகநாவலர் 1853ம் ஆண்டு சைவபரிபாலன என்ற கல்வி சபையையும், 1879ம் ஆண்டு தமிழ் மொழி மூலமான சைவபிரகாச வித்தியாகாலையையும்  உருவாக்கினார். 

      தொடர்ந்து இஸ்லாமிய மத பாதுகாப்பின் பொருட்டு அறிஞர் சித்திலெப்பை 1832ம் ஆண்டு மச்சார எனும் இஸ்லாமிய பாடசாலையை உருவாக்கினார், 1882ம் ஆண்டு மருதானை சாஹிர பாடசாலையை உருவாக்கினார், மேலும் முஸ்லீம் நேசன் ஞானதீபம் மதலிய பத்திரிகைகைளையும் வெளியிட்டார். மேலும் மேல் நட்டவரின் பழக்கங்களில் இரு  ந்து தம்நாட்டவரை காப்பதற்காக வேண்டி மது ஒழிப்பு இயக்கத்தை உருவாக்கி அதில் டி.எஸ் சேனானாயக்கா, அனாகரிக தர்மபால முதலிய தலைவர்கள் பங்ககொண்டு தொடர்ந்தும் கிளர்ச்சி செய்தனர் இதன் விளைவாக 1912ம் ஆண்டு மே மாதம் மதுவரி சட்டம் அமலுக்கு வந்தது. 

    அதனைத் தொடர்ந்து காலனித்துவத்தில் அரசியல் ரீதியாக பல்வேறு கொள்கைகைள அறிமுகப்படுத்தப்பட்டதன் எடுத்துக்காட்டாக பாராளுமன்ற முறையை தெற்காசிய நாடுகளில் அறிமுகம் செய்தனர். அதாவது எல்லா நாடுகளுக்கும் தலைவராக மகாரணியர் காணப்பட்டாலும் அதற்கு கீழ் இருந்து நிருவாகத்தை மேற்கொள்ளும் பொருட்டு தெற்காசிய நாடுகளில்  இம்முறையை ஏற்படுத்தினர் உதாரணமாக நிருவகிக்கும் பொருட்டு தலைமைப் பொறுப்புக்கள் பிரித்தானியாவில் இருந்து அனுப்பபட்ட பிரபுக்கள் கைவசம் காணப்பட்டது உதாரணமாக இந்தியாவை காரண் வாலிஸ் பிரபு, காணிங் பிரபு, டல் வெளசி பிரபு ரிப்பன் பிரபு முதலியோர் ஆட்சி செய்தமையை குறிப்பிடலாம். இவர்களின் கொள்கைகள் அரசியலிலும் செல்வாக்கு செலுத்தியது. உதாரணமாக இந்தியாவில் தல சுய ஆட்சி கொள்கையை ரிப்பன் பிரபு காலத்தில் உருவாக்கப்பட்டமை அதாவது இச்சட்டத்தின் ஊடாக நகராட்சி மன்றம், பஞ்சாயத்து, முதலிய சபைகள் உருவாக்கபட்டு அரசியல்வாதிகளுக்கு பயிற்சிக்காலமாக மாற்றியமை. இலங்கையில் 1912ம் அண்டு பாராளுமன்ற முறை அறிமுகம், அதில் சுதேசிகள் பங்குகொடுத்தல். அதனைத்தொடர்ந்து 1833 கோல்பறுக் கமரன் சீர்திருத்தத்தின் ஊடாக பிரதேசவாரி பிரதிநிதித்துவம், சட்டவாக்க கழகம், சட்டநிருபன சபை என்பவற்றை உருவாக்கியதோடு அவற்றில் இன ரீதியான பிரதிநிதித்துவமானது வழங்கப்பட்டது.  இது உள்நாட்டில் மக்களிடையே பிளவை எற்படுத்தக்கூடியதாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து வந்த டொனமூர், அரசியல் திட்டக் கொள்கையில் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டது பெரும் வரவேற்கத்தக்க ஒன்றாக மாறியது இதனால் ஆண் பெண் , மற்றும் படித்த படிக்காத அனைவரும் அரசியலில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது அத்தோடு அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்பட்டது. மேலும் எம் நாட்டு தலைவர்களுக்கு அரசியல் பயற்சி களமாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது. இதன்போது உருவாக்கப்ட்ட நிர்வாக குழுவில் முக்கிய பொறுப்புக்களில் பிரித்தானியரே இருந்தமை குழப்பத்திற்கு காரணமாக அமைந்தது. உதாரணமாக நீதி, நிதி முதலியறவற்றிற்கு பொறுப்பாக பிரித்தானியர் காணப்பட்டமை. மேலும் பல கட்சிமுறை தோன்றவும் காரணமாக அமைந்தது இத்தகைய பல கட்சி தோற்றமானது நாட்டில்  ஏதோ ஒரு வகையில் சுதேசியரின் மத்தியில் தொடர்ந்து பிரச்சினையை எற்படுத்துவதாக உள்ளதை காணலம்.

   தெற்காசிய காலனித்துத்தின் பொருளாதார கொள்கையை நோக்கும் போது பலதொழில் முறைகளை அறிமுகம் செய்தனர் உதாரணமாக பெருந்தோட்டத்துறையை அறிமுகம் செய்து அதில் இலங்கையரை ஈடுப்பட செய்தமை, தேயிலை றப்பர், கொக்கோ, கோப்பி முதலிய பயிர்கள் இவர்களாலையே அறிமுகம் செய்யப்பட்டது இவ் வளங்களை பயன்படுத்தி வருமானத்தை தமது நாட்டிற்கு எடுத்து செல்லக்கூடிய நிலைiயையும் நாம் காணக்கூடியதாக இருந்தது மேலும் ஏற்றுமதி பொருட்களான கொக்கோ கொப்பி காரம்பு¸ முத்து மாணிக்கம், தந்தம் என்பன எடுத்துசெல்லப்பட்டது. மேலும் இக்காலப்பகுதியை பார்க்கும் போது இரட்டை பொருளாதர முறை காணப்பட்டது குறிப்பிடத்தக்கது அதாவது அரசாங்கமும் கிழக்கிந்திய வர்த்தக கம்பனியும் இனைந்தே வரத்;தகத்தில் ஈடுப்பட்டனர். மேலும் இவர்களது பொருளாதார கொள்கைகளில் பிரதானமாக வீதிகளை அமைத்தல், குளங்களை எற்படுத்தல் மற்றும் புணரமைத்தல் என்பனவும் முக்கியமானவை. குளங்களை புணரமைத்தலுக்கு  எடுத்துக்காட்டாக 1885-1860 வரையிலான காலப்பகுதியில் பிரித்தானிய ஆளுநரான ஹென்றிவோட் கிழக்கு மாகாணத்தில்  இறக்காமம்  குளத்தையும்  அம்பாரை குளத்தையும், தென் மாகாணத்தில் கிராம, ஊருபொக்க குளங்களையும் புணரமைத்தார். மேலும் பாதை புணர் நிர்மானம் பொருட்டு கொள்கைகள் உருவாக்கப்பட்டு வெளிப்டுத்தப்பட்டன உதாரணமாக இந்தியாவில்  1856 ம் அண்டு காலப்பகுதியில டால் வெளசி பிரபவின்; உருவாக்கப்பட்ட பாதை கொள்கையை குறிப்பிடலாம். மேலும் பொருளாதாரம் மேம்பாட்டின் பொருட்டு தொழிற்சாலை சட்டமும் கொண்டுவரப்பட்டது இதில் வேலை நேரம், ஊதிய அளவு. மற்றும் ஏழு வயதிற்கு குறைந்தோர் தொழிற்சாலையில வேலை செய்யக்கூடாது போன்ற நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. மேலும் கட்டடங்கள் பாலங்கள் கட்டுவதற்கு பல இலாக்களை கொண்டு வந்தனர். மேலும் விவசாயத்தை விஸ்தரிப்பதற்கு  விவசாய கூட்டுறவு சங்கம், பயிர்களுக்கு செலவீனத்தை குறைத்தல் மற்றும் பூசா எனுமிடத்தில் விவசாய ஆராய்சி கூடம் என்பவற்றை கார்கிங் பிரபு உருவாக்கியமையும் குறிப்பிட்டு கூறக்கூடிய ஒரு விடயமாகும். மேலும் சில குடியமர்வுகளை ஏற்படுத்தினர். இதன்போது பல பிரச்சினைகள் எழுந்தது. உதாரணமாக மலைநாட்டு பிரதேசங்களிலும், நீலகிரி பிரதேசங்களிலும் குடியிருப்புக்களை நிருவியமை அப்பிரதேச மக்கள் தமது மொழி காலாசாரம், பழக்கவழக்கம், பண்பாடு, அடையாளம் இல்லாது போய்விடும் என கிளர்ச்சி செய்தமை. மேலும் ரிப்பன் பிரபு அறிமுகம் செய்த இறக்குமதி வறி தள்ளுபடி கொள்கையானது தெற்காசிய மக்களின் சுய உற்பத்தி கொள்கைக்கு பாதகமான ஒரு விடயமாக அமைந்தது.
     அதனைத்தொடர்ந்து நிர்வாகம் தொடர்பான கொள்கைகளை பார்க்கம் போது பாராளுமன்றத்தில் சட்டத்துறை நிர்வாகத்துறை நீதித்ததுறை என வகுக்கப்படும் அவற்றுக்கான பணிகள் தலைவர்கள் எவ்வாறு அமைய வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டமையும் முக்கிய அம்சமாகும் மேலும் காலனித்துவ நாட்டில் தமது பிரதிநிதிகளாக தொழிற்பட்ட அனைத்து உறுப்பினர்களையும் சிவில் வேவையாளராக கருதியதோடு அவர்களை தெரிவு செய்வதிலும் பல கொள்கைகளை கடைபிடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது, உதாரணமாக சிவில் சேவையாளர்களுக்கு உயர் சம்பளத்தை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது இவர்களே நாட்டின் சட்டத்தையும் ஒழங்கையும் பேணக்குடியவர்களாக காணப்பட்டனர், மேலும் உயர் நீதி சேவையில் ஈடுப்படல் இப்படியான உயர் பதவிகளை வகிக்க கூடிய தன்மை ஏற்பட்டது. எனவே இத்தகைய உயர் செயற்பாட்டடில் பிரித்தானிய பிரதிநிதிகளே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தமையால் சுதேசிய மக்களிடையே முரண்பாடு ஏற்படவும் காரணமாக அமைந்தது. 

     மேலும் தமது இலகுக்காக வேண்டி ஆட்சி பிரதேசங்களை பிர்த்தாலும் மக்கள் குழப்பத்தை எற்படுத்தினர் உதாரணமாக 1905ம் அண்டு வங்காள தேசத்தை கிழக்கு வங்காளம், ஆசாம் பிரதேசத்தை ஒரு பிரிவுhகவம் மேற்கு வங்காளத்தை ஒரு பிரிவாகவும் பிரித்தனர் இது தமக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் எனறு மக்கள் தொடர்ந்து கிளர்ச்சி செய்ததன் விளைவாக 1911ம் ஆண்டு இக் கொள்கை ரத்து செய்யப்பட்டது. மேலும் நிர்வாகத்தில் நீதி சம்மந்தமான விடயங்களில் தொடர்ந்து மக்கள் பிரச்சினை ஏற்படுத்தினர் காரணம் நீதி சம்மந்தமான முடிவுகள் பெரும்பாலும் மேற்கத்தையவர்களாலேயெ எடுக்கப்பட்டது எனவே இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு கானிங் பிரபு நீதி வழங்கும் நிருவனத்தில் 1/3 பங்கினர் சுதேசிகலாக இருத்தல் வேண்டும் எனும் கொள்கையை கொண்டுவந்தர்.

     அதனைத்தொடர்ந்து சமூக ரீதியான கொள்கைள் எற்படுத்திய தாக்கத்தை பார்க்கும் போது தெற்காசிய நாடுகளில் மிசனரிகள் வாயிலாக கிருஸ்தவ மதம் பரப்பப்பட்டமையால் சதேசிய மதங்கள் பாதிக்கப்பட்டது. அவ்வாறே சுதேசிய மொழிகளுக்கான அச்சுருத்தலும் ஏற்படலாயின. காரணம் பாடசாலைகள், பல்கலைகழகங்களை அமைத்ததோடு அவற்றில் ஆங்கிலத்தை கட்டாயக் கல்வியாக வழியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக டாலட் வெளசி பிரபுவான் கல்விக்கொள்கையை குறிப்பிடலாம். அத்தோடு இவரின் கருத்தான விதவைகள் திருமணம் செய்யலாம் என்ற கொள்கையானது தெற்காசிய நாடுகளின் கலாசாரத்துக்கு முரணானதாக அமைகிறது. நடை, உடை பாவனை என்பன தெற்காசிய கொள்கைக்கு முரணாக மாறியது உதாரணமாக தெற்காசிய மக்களிடையே கூட்டுக்குடம்ப முறை காணப்பட்டது ஆனால் அந்தமுறை காலனித்தவ ஆட்சியால் மாற்றமடைந்து தனி குடும்பமாக மாற்றமடைந்தது. அதுமட்டுமன்றி திருமண முறையில் விவாகரத்து, பலதார திருமணம் போன்ற முறைகள் அறிமகப்படுத்தப்பட்டன இத்தகைய செயற்பாடுகள் தமது தேசத்தின் எழுச்சிக்கு தடையாக இருப்பதாக மக்கள் கருதினர்.

      மேலும் காலனித்துவ ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் பெரிதும் சுதேசிய மக்களின் அடையாளங்களுக்கு அச்சருத்தலாக விளங்கியமையால் அவர்கள் எதோ ஒரு வகையில் தமது எதிர்ப்பினை தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. அதாவது அரசியல், பொருளாதாரர, காலசார,  இன, மத, மொழி ரீதியான செயற்பாடுகளில் தெற்காசிய மக்கள் தமது தமது அடையாளத்தை நிலைநாட்டவே எத்தனித்தனர் அதற்கு தடைகள் வரும் போது எத்தகைய கொள்கையாயினும் அதனை எதிர்க்கும் தன்மையுடையதாக மாறியமை குறிப்பிடத்தக்கது இத்தகைய நிலைமையானது சுதந்திரத்திற்கு முன்னும் அல்லலு காலனித்துவ ஆட்சியின்போதும் கொண்டுவரப்பட்ட கொள்கைகள் தேசியத்தை கட்டியெழுப்புவதில் தாக்கத்தை உண்டுப்பன்னுவதாக அமைகின்றன.

சுதந்திரத்திற்கு பின்னரான கொள்கைகள் அவற்றை தீர்ப்பதில் எற்படுத்திய தாக்கம்
       காலனித்துவத்தின் பின் கொண்டுவரப்பட்ட கொள்கைகள் தேசியத்தை கட்டியெழுப்புவதில் எற்படுத்திய செல்வாக்கு எனும் போது தெற்காசிய நாடுகள் ஆங்கிலேயரின் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற பின் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகளை நாம் பார்க்கலாம் தெற்காசிய நாடுகளில் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டிரந்தாலும் கூட அவர்களின் வடுக்கள் பலநூற்றாண்டகாலமாக அந் நாடுகளில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதாவது அவர்களின் செயற்பாடுகள் கொள்கைள், திட்டங்கள் என்பன அவர்கள் போன பின்னும் தொடர்ந்து கடைபிடிக்கப்ட்ட ஒரு நிலைமையையே நாம் தெற்காசிய நாடுகளில் காணலாம். மேலே கூறப்பட்டது போன்று தேசியத்தை கட்டியெழுப்பவதில் கொள்கை உருவாக்கத்தின் போது சுதேசியர் தம் கொள்கைகைள உருவாக்கும் போது பிரித்தானியரின் கொள்கைக்கு எற்றவகையில் தமது கொள்கைகளை மெருகூட்டிக்கொண்டே செல்லக்கூடிய தன்மை காணக்கூடியதாய் இருந்தது. அதாவது அரசியல்,பொருளாதாரர, காலாசார, மதம்,மொழி, விழுமியம் தமது அடையாளம் முதலிய விடயங்களில் கவனம் செலுத்தும் போது அவர்களுடைய செயற்பாட்டில் ஏதோ ஒரு வகையில் காலனித்தவ ஆட்சியின் தொடர்ச்சி காணப்படுவதை நாம் உணரக்கூடியதாய் உள்ளது.

  அந்தவகையில் காலனித்துவத்திற்கு பின் அரசியல் ரீதியான கொள்கைகள் எவ்வாறு தேசியத்தை கட்டியெழுப்பவதில் தாக்கம் செலுத்துகிறது எனும் போது யாப்பருவாக்கம், கட்சிகளின் வளர்ச்சி, புதிய கல்வி, மத, பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதினூடாக நாம் அறியக்கூடியதாய் உள்ளது. அதாவது தெற்காசிய நாடுகளை பொருத்தவரையில் யாப்புருவாக்கத்தின் போது பொது கொள்கைகளை உருவாக்குவதை காணலாம் இங்கு இனம், மதம், மொழி சார்பாக இல்லாமல் பொதுவாக மக்கள் என்ற ரீதியில் கொள்கைகள் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் சில நாட்கள் தமது தனித்தவத்தை காட்டுவதற்காக தம் இனம் மதம் சார்பான விடயங்களுக்கு யாப்பிலயே முக்கிய ஸ்தானபம் வழங்கப்பட வேண்டும் என்பதை வழியுறுத்தி நிற்கின்றன. எடுத்துக்காட்டாக தெற்காசிய நாடுகளில் ஒன்றான இலங்கையை நோக்கும் போது சுதந்திரத்தின் பின் 1948 பிரஜாவுரிமை, சட்டம், 1956 தனி சிங்கள மொழி சட்டம் என்பன குறிப்பிடத்தக்கன. இதில் தனி சிங்கள மொழி சட்டமானது உருவாக்கப்பட்டதால் இலங்கை கீழ் கொண்டுவரபட்ட சிறுபான்மை காப்பீடு நல்லொதொரு உதாரணம் காரணம் இது ஒரு விசேட எற்பாடாகும் அதாவது எற்கனவே வரையப்பட்ட யாப்பின்படி சிறுபான்மை இனத்தவருக்கு எவ்வித அதிகாரமும் இல்லாத நிலையில் இருந்ததால் அதனை நிவர்த்தி செய்யும் நோக்கிலையே சிறுபான்மை காப்பீட்டு முறை எற்படுத்தப்பட்டது. எனினும் அதன் பிரயோகம் வெற்றித் தருவதாக அமையவில்லை. மேலும் சிங்கள மொழியையும் பௌத்த மதத்தையும் பாதுகாத்தல் தலையாய கடமை என்ற எற்பாடானது ஏனைய மதம், மொழி புறக்கணிக்கப்படகூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது எனவே இத்தகைய எற்பாடு தொடர்ந்தும் தேசியத்தை கட்டியெழுப்பவதில் மக்களிடையே வளர்க்கவேண்டிய ஒற்றுமையை சீர் குழைத்தது. மேலும் புதிய புதிய கட்சிகள் தம் இனம் மதம், மொழி சார்பாக உருவாக்கப்படும்போது அவை வெளியிடும் கொள்கைகளும், விஞ்ஞாபனங்களும் தேசியத்தைகட்டியெழுப்பவதற்கு தடையாக உள்ளது. உதாரணமாக s . w  பண்டாரணாயக்கா தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் போது “தம்மை வெற்றிபெற வைத்தால் தான் ஆட்சிக்கு வந்ததும் சிங்கள் மொழியை அரச கரும மொழியாக மாற்றுவேன” என கூறிய சம்பவத்தை நினைவுபடுத்தலாம். அவ்வாறே  இந்தியாவில் தனி தெழுங்கானா தேசம் கோரி போராட்டம் நடத்திய சம்பவங்களையும் நாம் நினைவுப்படுத்திக் கொள்ளலாம் அத்தோடு பெங்காளி மொழி பேசக்கூடிய மக்கள் தமக்கென தனித்துவமான ஒரு ஆட்சி பிரதேசம் தேவை என குறிப்பிடல். இவ்வாறான கொள்கைகள் தொடர்ந்தும் அரசியல் ரீதியாக தேசியத்தை கட்டியெழுப்பவதில் தாக்கத்தை உண்டுபன்னுவதாக உள்ளது. தெற்காசிய நாடுகளை பொருத்தவரையில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்கலாதேஸ் முதலிய நாடுகளில் யுத்தம் நடப்பதையும் மக்கள் போர் கொடி தூக்குவதையும் அவ்வப்பொது ஆலயங்களும் மசூதிகளும் பள்ளிவாசல்களும் உடைக்கப்படுவதும் ரத்த ஆறு ஒடுவதையும் நாம் பார்க்கும் போது அதற்கு காரணம் ஒவ்வொரு இனத்தவரும் தன்னை வேறுபடுத்தி காட்ட முயற்சிப்பதும் அதனை யாப்பின் ஊடான  உறுதிப்படுத்த முனைவதும் அகும்.

       மேலும் ஆரம்ப காலங்களில் வகுக்கப்பட்ட கொள்கைகள் காலப்போக்கில் எற்றதாக இல்லாத தன்மையை காணலாம் உதாரணமாக இந்திய அரசியல் கொள்கையில் பஞ்ச சீல கொள்கையை பார்க்கும் போது அதில் குறிப்பிட்ட விடயம் பிற நாடுகளின் விவகாரங்களில் தலையிடாதிருத்தல், நாடுகள் மீது ஆக்கிரமிப்பு செய்யாதிருத்தல் முதலிய விடயங்கள் கூறப்பட்டாலும் இன்று அவை முரணானனதாக இருக்கின்றன பிராந்;தியங்களுக்கிடையே நல்லுரவை வளர்க்க வேண்டிய இந்திய அதன் ஆதிக்கத்தை வெளிக்காட்ட எத்தனிக்கிறது. பஞ்சசீல கொள்கைக்கமைய பார்த்தால் பாக்கிஸ்தானுடன் மோதலில் ஈடுபட கூடாது, இலங்கை விவகாரத்தில் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் உதவி செய்திருக்க கூடாது. இதற்கெல்லாம் மாறுதல் உடையதாக சுதந்திரத்தின் பின் இந்தியா மாற்றமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டொக்டர் அம்பெத்காதரால் உருவாக்கபட்ட அரசியல் யாப்பானது மத்திய அரசு, மானில அரசு என பிரிக்கபட்டு மத்திய அரசுக்கான அதிகாரம்,மாநில அரசுக்கான அதிகாரம் பொது அதிகாரம் என அதிகாரங்கள் வகுத்தொதுக்கப்பட்டள்ளது இதில்  அதிகாரத்தின் போது சில பிரச்சினைகள் மத்திய அரசுக்கும் மானில அரசுக்கும் இடையில் பிரச்சினையை தோற்றுவிப்பதாக அமைகின்றது. 
  
  இந்திய ஏனைய தெற்காசிய நாடுகளுக்கு எடுத்துகாட்டாக விளங்கவேண்டியது அனால் இந்தியாவில் பலதரபட்ட கட்சிகளின் செயற்பாட்டால் இந்திய மாநிலங்கள் சுயாட்சி பிரதேசத்தை கேட்டு நிற்பதைக் காணலாம். தொடர்ந்து பாகிஸ்தானின் நிலைப்பாட்டை நோக்கும் போது பாகிஸ்தான் உருவாக்கத்தில் தீவிர முயற்சியில் ஈடுப்பட்ட உருது பேசும் மக்கள் அரசியல் மற்றும் எனைய விடயங்ளில் கால் பதிக்க தொடங்கினர். ஆனால் பஞ்சாபிகள் தம்மை மேலாதிக்கம் உடையவர்களாக கருதினர் எனவே முக்கிய சில பதவிகளில் இருந்து முஹர்ஜியர் வெளியேற்றப்பட்டனர் இந்த நிலைமையானது இரு சாராரிடமும் முரண்பாட்டை தோற்றுவித்தது. இதன் விளைவாக கராச்சி மற்றும் ஹைதராபத், சிந்திய ஆகிய இடங்களில்  இரு சாராருக்கும் சண்டை எற்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொள்ளப்பட்டனர்.
     அதனைத் தொடர்ந்து பொருளாதாரக் கொள்கைகயை அடிப்படையாகக் கொண்டு தேசியத்தை கட்டியெழுப்புவதில் உள்ள சிக்கல்களை பார்ப்போமானால் இன்று ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரத்திற்கு எல்லா நாடுகளும் சுதந்திரத்தின் பின் முக்கியத்துவத்தை கொடுத்திருப்பதைக் காணலாம். இன்று தெற்காசிய நாட்டு மக்கள் உழைப்பதற்காக வெளி நாடுகளை நோக்கியும் பயணம் செய்கின்றனர். மேலும் ஒவ்வொரு நாடும் சோசலிச பொருளாதாரம், சமவுடமை பொருளாதாரம், முதலாளித்துவ பொருளாதாரம், தன்னிரைவு பொருளாதாரம் என தாம் விருப்பு வெருப்பிற்கேற்ப பொருளாதார கொள்கையை காலத்திற்கு காலம் மாற்றிக் கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக இலங்கையில் ஆரம்பத்தில் திறந்த பொருளாதார முறை காணப்பட்டது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்த காலத்தில் திடிரென அதனை நிறுத்தி மூடிய பொருளாதார முறையை எற்படுத்தினார். மேலும் வறுமை ஒழிப்புக்காக வேண்டி பல்வேறு நல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன சமூர்த்தி, மண்ணென்னை பங்கீட்டு திட்டம், அரிசி பங்கீட்டு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது . இவ்வாரு ஆக்கபட்டபோது கூட அதை எத்தகைய நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அடையவில்லை மாறாக பொறும்பான்மையினரே அதன் நன்மையை பெரிதும் அடைந்தனர் இத்தகைய நிலைமைகளும் நாட்டுக்குள் ஒற்றுமை இல்லாமல் போக காரணமாக அமைகின்றது. இத்தகைய கொள்கைகளே ஸ்தீரமற்ற பொருளாதார முறை ஏற்பட காரணமாக அமைகிறது.
       தேசியத்தை கட்டியெழுப்ப ஸ்த்தீரமான பொருளாதார கட்டமைப்பும் மிக முக்கியம் அதில் மாறுதல் எற்படும் போது அரசானது ஆட்டம் கான நேரிடும். மேலும் ஆட்சியானது தொடர்ந்து மாறுவதாலும் குறிப்பிட்டதொரு கொள்கையை தொடர்ந்து அமுல்படுத்த முடியாத நிலை¸ எடுத்தக்காட்டாக இந்தியாவில் கருனாநிதி  இருக்கம் போது ஏற்படுத்தப்பட்ட வீடமைப்பு திட்டம் நிருத்தப்பட்டது. அதே போல் ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் நலன்பேணல் தொடர்பான கொள்கை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் தொடர்ந்து கொண்டு செல்லுதல் என்பன  குறிப்பிட்டுக் கூடியவனவாகும். மேலும் தெற்காசிய நாடுகள் தமக்குள் ஒரு பொருளாதார ரீதியான ஒத்துழைப்புக்கும் அபிவிருத்தியின் பொருட்டும் எற்படுத்தப்பட்டதே சப்தா உடன்படிக்கை அந்த சப்தா உடன்படிக்கைக்கமைய தெற்காசிய நாடுகள் செயற்படுகின்றனவா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாகிஸ்தான் இயற்கையாகவே விவசாய காலநிலையை கொண்டிருந்த போதிலும் தற்போது அதனை கைவிடுத்து  அணு ஆயுத உற்பத்தியை நோக்கி செல்கின்றது இங்கும் தொடர்ச்சியான ஆட்சி மாற்றம் இடம்பெருகின்றமையும் தொடர்ச்சியான அரசியல், பொருளாதார ஸ்த்திரதன்மை இல்லாமல் போவதற்கு காரணமாக அமைகின்றது. மேலும் இந்நாடானது சுதந்திரத்தின் பின் இந்தியாவிடம் இருந்து பிரிந்து சென்றது என்றாலும் பின்பு அந் நாட்டுக்குள்ளேயே நல்ல புரிந்துனர்வு மற்றும் மக்கள் பாரபட்சம் காட்டப்பட்டதால் பாகிஸ்தானது இரண்டாக பிரிக்கப்பட்டு பங்களாதேசாக சென்றமை குறிப்பிடத்தக்கது. 

   பின்பு பங்களாதேசிடம் இருந்து சித்தகோன் பகுதியை சேர்ந்;தவர்கள் தொடர்ந்து தமக்கு சுயாட்சி பிரதேசத்தை கோரி வந்தனர் எனினும் சுதந்திரத்தின் பின்னர் அப்பகுதி வங்காளதேசத்தடன் சேர்க்கப்பட்டது எனவே அப்பகுதியில் வங்காள தேசம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து மக்கள் குடியேரியமையால் தமது அடையாளம் பாதிக்கப்படுவதோடு அழிந்துவிடும் என கருதி தமக்கு சுயாட்சி பிரதேசம் தேவை என கருதிய சித்தகோன் பிரதேச மக்கள் போராட ஆரம்ப்பித்ததோடு ஆவாம் லீக் குழுவோடு போய் சேர்ந்துக்கொண்டது. தொடர்ந்து இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற முஜிபூர் ரகுமான் கருத்து தெரிவிக்கையில் ‘வங்காளதேசத்தில் வாழும் அனைவரும் வங்காளிகள் என கூறினார்” எனவே தமது நோக்கம் நிரைவேராததால் சித்தகோன் மக்கள் சாந்திபாயின் இயக்கத்தோடு சேர்ந்து ஆயுத போராட்டத்திற்கு தயாரானார்கள். இந்த நிலையானது பாகிஸ்தான் அரசானது நல்லதொரு தேசியத்தை கட்டியெழுப்பவதில் தமது கொள்கை உருவாக்கத்தில் இருந்து தவரியுள்ளதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. அடுத்ததாக நேபாளத்தை பொருத்தவரையில் அங்கு அரசியல் ரீதயாக  நோக்கும் போது பெரும்பான்மை மக்கள் இந்து சமயத்தவராக காணப்பட்டபோதிலும் தற்பொது அவர்களுக்குள் இருக்கும் புரிந்தணர்வின் வழி நேபாளம் மதசார்பற்ற நாடாக தமது அரசியல் கொள்கையை மாற்றிக்கொண்டு ஒற்றுமையாக வாழும் நிலையை காணலாம். இங்கு முடியாட்சியே தொடர்ந்து நடந்து வந்தமையை குறிப்பிடலாம்.  எனினும் அவர்களிடையே வளபற்றாக்குறை காரணமாக முரண்பாடுகள் எற்படுவது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர்களிடையே வளபற்றாக்குறை காரணமாக முரண்பாடுகள். ற்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவானது நேபாள அரசுக்கும் மாஓவாதிகளுக்கும் இடையில் இடம்பெறும் போராட்டங்கள் எற்படுவது குறிப்பிடத்தக்கது. இங்கு பிரபுத்துவ வர்க்கம் தொழிலாளி வர்க்கத்திற்கு தேவையானதை உணர்ந்து செயற்படாததனால் பிரச்சனைகள் ஏற்படுகின்றது இதற்கு எதிராகவே 1990களில் ஜனநாய இயக்கம் ஒன்று உருவாகியது. இந்த ஜனநாயகமும் உயர்வர்க்கமும் நடுத்தரவர்க்கமும் சுரண்டலை மேற்கொண்டமையால் அதற்கு எதிராக மஒவாதி இயக்கம் செயற்படலாயின. ஆரம்பத்தில் பேரம் பேசி தமது விருப்பங்களை தெரிவித்தபோதும் அவை வெற்றியளிக்காததால் கடைசியில் ஆயுத போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டனர். இதன் விளைவாக 2006ம் ஆண்டு நவம்பார் மாதம் சமாதான உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் குறிப்பாக தாழ்த்தப்ட்ட பெண்கள், தலித்துக்கள் சிறுவர்கள் உரிமை பேனப்பட வேண்டுமெனவும், கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, தொழில், பாதுகாப்பு, உணவு முதலியவற்றில் பாரபட்சம் காட்டப்படக்கூடாது எனவும்  பல கோரிக்கைகளை ஒப்பந்தத்தில் முன்வைத்தனர். 

    அதனைத்தொடர்ந்து கலாச்சார ரீதியலான கொள்கை அமைப்பானது தேசியத்தை கட்டியெழுப்பவதில் எத்தகைய தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பதை நோக்குவோமாயின் கலாசாரம் என்பது நேரடியாக உள்ளுணர்வோடு தொடர்புடைய ஒரு விடயமாகும். எனவே அதனடிப்படையில் தெற்காசிய நாடுகளிலும் இதன் தாக்கம் என்பது பரவலாக காணப்படுகின்ற நிலையை காணலாம் இன்று பல நாடுகளை பார்க்கும் போது ஒரு நாட்டின் மீவுயர் சட்டமான அரசியல் திட்டத்திலையே அந்நாடானது எத்தகைய மதம் சார்பான நாடு என அடையாளப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.  உதாரணமாக இலங்கையை எடுத்துக் கொண்டால் பௌத்தமதத்தையும் சிங்கள மொழியையும் பேணி  பாதுகாப்பது அரசினது தலையாய கடமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.  அது மட்டுமன்றி நாட்டின் தலைவர் யாராகவிருந்தாலும் அவர் பௌத்த மதம் சார்ந்தவராகவே இருக்க வேண்டும் எனும் எற்பாடும் சுட்டிக்காட்டத்தக்கது. இத்தகைய எற்பாடானது சிறுபான்மை சமூகமான தமிழர் அல்லது முஸ்லிம்களில் இருந்து எவரும் நாட்டின் ஜனாதிபதியாக வர முடியாத நிலையை எடுத்து காட்டுகிறது. எனவே நாட்டின் மீயுயர் சட்டம் என மதிக்கும்  யாப்பு சட்டமே இத்தகைய பிரிவினையை வெளிபடுத்துமாயின் தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாடு எவ்வாறு வெற்றிகொள்ளும் என நாம் யோசிக்க வேண்டியவர்களாக உள்ளோம். 

      அதே போன்று பாகிஸ்தான் ஒரு முஸலீம் நாடாக காணப்படுகின்றமை குறிப்பிட்டு கூறக்கூடியது. அது மட்டுமன்றி தெற்காசிய நாடுகள் அனைத்தும் தனக்கென தனித்துவமான கலாசாரத்தையும் கொண்டிருக்கின்றனர் அவர்களுடைய உணவு பழக்கவழக்கங்கள் திருமணமுறை, ஆடை, அணிகலன்கள் இவை அனைத்துமே தமது அடையாளமாக கருதுகின்றனர். இத்தகைய அம்சங்கள் அழிந்து போய்விடக்கூடாது என்று ஒவ்வொரு இனமும் போராடுவதும் பிரச்சினைகள் எற்பட காரணமாக அமைகிறது. உதாரணமாக இந்திய சேது சமூத்திர திட்டத்தில் இது வரையும் இளுபரி நிலையில் இருப்பதற்கு காரணம் இதுவாகும் முஸ்லீம்கள் அப்பகுதி தமக்குறியது என் கூறவும் இந்துக்கள் அது தமக்குறியது என்று கூறும் நிலையையும் காணலாம். அது மட்டுமல்லாது தமது மத கோட்பாட்டிற்கு அமைவாக சட்டத்திட்டங்களையும் அதனை மீறுவோருக்கு அற்கான தண்டனைகளையும் கூட தெரிவு செய்கின்றார்கள். மேலும் குறிப்பட்ட நாட்டில் எவ்வினம் பெறும்பான்மையினராக இருக்கின்றார்களோ அங்கு அவர்களுக்கு சொந்தமான  சில பிரதேசங்களை புனித பூமியாக மாற்றிக் கொள்கின்றனர்.

அதனுடைய பரிணாமத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான போக்குகள்
   நடைமுறையை பொருத்தவரையில் காலனித்துவ அட்சியின்போது எற்படுத்தப்பட்ட அரசுகளே இன்றும் இருக்கின்றன அவற்றில் ஆங்காங்கே சில மாறுதல்களையும் மெருகூட்டல்களையும் செய்து வந்துள்ளனர். காலணித்துவ ஆட்சியாளர்களின் நோக்கங்களில் ஒன்று என்றுமே இவ் நாடுகளுக்கிடையில் சிறந்த புரிந்துணர்வு ஏற்படாது தொடர்ந்து சண்டையும் சச்சரவுமாக இருக்க வேண்டும் என்பதாகும் அதே நிலையை இன்று நாம் தெற்காசிய நாடுகளில் காணக்கூடியதாய் உள்ளது அதாவது தேசியத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் முதலில் ஒவ்வொரு நாட்டுக்குள்ளேயும் புரிந்துணர்வு, ஒற்றுமை, நம்பிக்கை பரஸ்பர தொடர்பு இருத்தல் வேண்டும். ஆனால் அந்த நிலைமையை நாம் தெற்காசிய நாடுகளில் காணமுடியாத ஒரு துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
 இன்று தெற்காசிய நாடுகளில் பலம் பொருந்திய இந்தியாவை நோக்கும் போது அங்கு உள்ள பிரச்சினைகள் அந்நாட்டின் அரசியல் பொருளாதார ஸ்திரதன்மையை கெடுப்பதாக அமைகின்றது. இந்திய பொருளாதார கொள்கைப்பற்றி அறிஞர் ஹெட்வோர்ட்  தொம்சன் குறிப்பிடுவதாவது “முற்பணம் பெரும் ஒருவன் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியாது”  எனவே தரிசு நிலத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பொருளாதரத்தின் இருக்கநிலைமையை இதன் மூலம் வெளியாட்டுகழிறரர்உள்நாட்டு கலவரங்கள் தனிநாட்டு கோரிக்கை என பல்வேறுபட்ட பிரச்சினைகளையே தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றது இனங்களுக்கிடையே மதபிரச்சினை, ஜாதி பிச்சினை உதாரணமாக அன்மையில் புத்தகாயா குண்டுவெடிப்பை நினைவு கூறலாம், அது மட்டுமன்றி பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டதையும் குறிப்பிடலாம் இவற்றிற்கு பிரதான காரணம் கொள்கை வகுப்பளர்களின் செயற்பாடாகும் தேசியம் கருதி கொள்கைகள் வகுக்கபடாமல் இருத்தல், மருபுறம் பாராளுமன்றத்தில் பெறும்பான்மையானோர் விரும்பும் விடயம் மாத்திரம் கொள்கையாக்கப்படல் இந்த நிலை குறிப்பிட்ட ஒரு தரப்பினரை அதிருப்திக்கு உள்ளாக்குகினற நிலை சுட்டிக்காட்டத்தக்கது. மேலும் இலங்கை போன்ற நாடுகளை பார்க்கும் போது இங்கும் அத்தகைய நிலையையே கணக்கூடியதாய் உள்ளது பெறும்பான்மையினர் சிறுபான்மையினரை பார்க்கும் விதம் மாறுபட்டதாக உள்ளது அதற்கு காரணம் யாப்பிலயே தாங்கள் உயர்ந்தவர்கள் என காட்டப்பட்டமை ஆகும் எடுத்துக்காட்டாக அன்மையில் கிரன்பாஸ் அருகில் நடந்த மசூதி தொடர்பான சம்பவம் சுட்டிக்காட்டத்தக்கது. அதுமட்டுமன்றி மட்டகளப்பு பள்ளிவாசல் உடைத்தமை இப்படியாக பலவிடயங்களை கூறலாம்.
     பாகிஸ்தானை பொருத்தவரையில் தனி முஸ்லீம் நாடு என்ற ரீதியில் காணப்பட்டாலும் தீவிரவததிகளின் செயற்பாடும் அச்சுரத்தலும் தொடர்ந்து அரச கொள்கைகளில் தாக்கத்தை செலுத்தி வருகின்றது. மேலும் அங்கு ஜனநாயக ஆட்சிக்கும் ராணுவ ஆட்சிக்கும் இடையிலான போராட்டம் தொடர்வதாலும் தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டில் பங்களிப்பு செய்ய முடியாத நிலையில் இருக்கின்றது. நேபாளத்தை பொருத்தவரையில்  மக்கள் புரிந்துணர்வோடு வாழக்கூடிய இடமாகையால் மதசார்பற்ற நாடாக மாற்றபட்டமையானது வரவேற்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது எனினும் பொருளாதார ரீதியிலான அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியமை குறிப்பிடத்தக்கது. பங்களாதேசம் தனி நாடாக வளர்ச்சியடைந்து வருகின்ற போது தொடர்ந்து உட்பூசல்கள் நிறைந்த ஒன்றாக இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது அங் பொருளாதாரத்திற்கான வாய்ப்பக் அதிகமாக இருப்பதால் எல்லா இனம் சார்பான பொதுக் கொள்கைகள் உருவாக்கப்படும் சந்தர்பத்தில் நல்லதொரு எதிர்காலத்தை நோக்கிய பயணத்திற்கு வாய்ப்புண்டு.


  மேலும் தெற்காசிய நாடுகளுக்குள் ஏற்படுத்தபட்டுள்ள சப்தா, சார்க் முதலிய ஒப்பந்தங்களின் உள்ளடக்கத்திற்கு ஏற்ப தெற்காசிய நாடுகள் அனைத்தும் தம்மை தயார் செய்ய வேண்டும். காலனித்துவ ஆட்சிக்கு பின் கொண்டுவரபட்ட கொள்கைகள் அனைத்தையும் ஒவ்வொரு நாட்டு மக்களும் தமது தேசியத்தை கட்டியெழுப்பும் பொருட்டு ஆக்கப்பட்டதாக கருதினால் முரண்பாடுகள், போராட்டங்களை தவிர்த்து நல்லதொரு தேசியத்தை கட்டியெழுப்பலாம் எனவே காலனித்துவ ஆட்சியின் போது எமக்கு கற்றுதந்த விடயங்களை உதாரணமாக யாப்புருவாக்கம், நிர்வாகமுறைமை, முகாமைத்துவம், முதலிய பல்வேறு விடயங்கள் துணையாகக் கொள்ள்வதோடு புதியதொரு பயணத்தை நோக்கிய வகையில் தமக்கேற்றவகையில்  கொள்கைகளையும் சட்டங்களையும் உருவாக்கி அதன்வழி பின்பற்றி நடப்போமானால் தேசியத்தை கட்டியெழுப்புவதற்கு இலகுவானதொரு செயற்பாடாக அமையும். மேலும் சுதந்திரத்தின் முன்னும் பின்னும் உருவாக்கப்ட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே தெற்காசிய நாடுகள் தற்போது அபிவிருத்தியை நோக்கி வெற்றிகரமாக செல்வதை நாம் காணக்கூடியதாய் உள்ளது. குறிப்பாக அரசியல் ரீதியாக தெற்காசிய நாட்டிற்கும் அப்பால் சென்று தமது உறவை வழுப்படுத்துகின்றது. அதே நேரம் பொருளாதார ரீதியாக இவ் தெற்காசிய நாடுகள் பல கொள்கைகைள உருவாக்கி அதன்வழி நாட்டினதும் தேசத்தினதும் பொருளாதாரத்தை உயர்த்துகின்ற நிலையைக் காணலாம். உதாரணமாக ஆடைக்கைத்தொழில், வெளிநாட்டு வேலைவாய்பு முதலியவற்றை குறிப்பபிடலாம். இவை யாவும் அரசியல் ரீதியில் தெற்காசியாவில் ஏற்பட்ட அபிவிருத்தியாகவே காணப்படுகின்றது.

    ஒட்டு மொத்தமாக நோக்குமிடத்து தேசியத்தை கட்டியெழுப்பதல் என்பது சமூகநிருவனங்களான அரசியல், பொருளாதார,  கலாசார, குடும்ப சமய, நிரவனங்களை வழுப்படுத்துவதோடு மனித நடத்தைகள், விழுமியங்கள் உள்ளக கட்டமைப்புகளை முதலியவற்றை விருத்திசெய்தல் என்பது வாயிலாக ஒவ்வொரு நாடும் எல்லாவகையிலும் இன, மத, பேதங்கள் இன்றி நாடு என்ற ரீதியில் ஒன்றினைவதோடு மட்டுமல்லாது வெருமனே தனி தனி நாடுகளே தமது தேசம் என கருதாமல் தமது பிராந்தியங்கள் அனைத்தையும் ஒரு தேசமாக கருதுவது போல் தெற்காசியவை ஒரு தேசமாக கருதி தெற்காசிய நாடுகளான இலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஸ், பூட்டான், மாலைதீவு பேன்ற அனைத்து நாடுகளும் ஒன்றினைந்து தமக்கொன ஒரு பொதுவான கொள்கைகைள இன, மத பேதங்களை கடந்ததாக உருவாக்கி  அவை தமது சுய விருப்பு வெருப்பக்கு இடமளிக்காததாக இருந்த போதம் அவற்றை எல்லோரும் எற்று ஒரு தேசமாக மாறி விட்டக்கொடுப்பு, புரிந்தணர்வு, ஒற்றுமை, முதலிய நல்லலெண்ணங்களோடு செயற்பட்டால் தெற்காசியாவை உலகில் ஒரு புதிய சாம்ராஜ்யமாக கட்டியெழுப்பும் முயற்சியில் வெற்றிகரமான பயணத்தை  மேற்கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை.



உசாத்துணைகள் 

நாராயணன்.ஜெ,1964, “இந்திய வரலாறு” தமிழ்நாடு தமிழ் வெளியீட்டுக்கழகம்

லயனல்.கு, 2004, “இலங்கைதேசிய இனத்துவப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்”; 2ம் பதிப்பு இலங்கை மாற்றுகொள்கை நிலையம் கொழும்பு 7

அமிர்தலிங்கம்.அ 2007, “இலங்கை பொருளாதாரம்”; குமரன் புத்தக இல்லம் 

யோதிலிங்கம்.சி.அ. 2000 “இலங்கையில் இனக்குழும அரசியல்”; குமரன் புத்தக இல்லம் கொழும்பு-12


பத்மாவதி.து. 2008 “நவீனகால அரசாங்கம்” பாவை பப்ளிகேசன் வெளியீடு


சங்கரன்.எஸ்.1960 “சுதந்திர நாடுகள்” மல்லலிகை பதிப்பகம், தியாகராய நகரம், சென்னை

நாதன்.எஸ்.கே.எஸ், 2007 “தென்னாசியா” குமரன் புத்தக இல்லம், கொழும்பு

நித்தியானந்தன்.வி 1989, “இலங்கை அரசியல் பொருளாதாரம்”

1948-1956 வர்க்க இனத்துவ நிலைப்பாடு, குமரன் புத்தக இல்லம், யாழ்ப்பாணம



















Post a Comment

1 Comments

  1. நல்ல கட்டுரை எழுத்துப்பிழைகள் உள்ளன . கவனிக்கவும்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்