சங்ககாலம்

அறிமுகம் : கி.பி 1 – 3நூற்றாண்டுவரை, பொற்காலம், 
  • இயற்கைநெறிக்காலம் என அழைக்கப்படல்
  • சேர, சோழர், பாண்டியர் ஆட்சி
  • முச்சங்கங்கள் அமைத்து தமிழ் வளர்த்த காலம்
  • காதல் வீரம் இலக்கியங்களின் கரு பொருளாக அமைந்த காலம்


சங்காலத்தில் எதிர்ப்பர்க்கப்படும் வினாக்கள்
1. சங்ககாலம் ஒரு பொற்காலம் ஆராய்க.
2. சங்ககாலம் ஒரு இயற்கை நெறி காலம் விளக்குக.
3. சங்ககால இலக்கியங்களை வகைப்படுத்தி அவை கூறும் பொருள்   
    மரபினை தெளிவுருத்துக.
4. சங்ககால இலக்கிய பண்புகளை துலக்குக.
5. சங்ககால இலக்கியங்களின் பண்புகளை துலக்குக.
6. சங்ககால ஆற்றுபடை இலக்கியம் பற்றி யாது கூறுவீர்.
7. சங்ககாலத்தின் தொடர்ச்சியே சங்கமருவிய காலம் ஆராய்க.
8. சங்ககாலம் அடுத்து வந்த காலத்திற்கு எவ்வாறு உதவியது?
9. சங்ககாலத்திற்கும் சங்க மருவிய காலத்திற்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.
நிலம்                    அமைப்பு                           கடவுள்         தொழில்                  அகவொழுக்கம்          புறவொழுக்கம்
குறிஞ்சி    (மலையும் மலை சார்ந்த இடம்)  முருகன்     வேட்டையாடுதல்        காத்தல் புணர்தல்           வெட்சி
                                                                                             திணைபுலம்                                                                       
               
முல்லை   (காடும் காடு சார்ந்த இடம்)        திருமால்     மந்தை மேய்த்தல்         இருத்தல்                       வஞ்சி

மருதம்    (வயலும் வயல் சார்ந்த இடம்)      இந்திரன்      விவசாயம்                   ஊடல்                          உழிஞை  

நெய்தல்   (கடலும் கடல் சார்ந்த இடம்)        வருணன்     மீன் பிடித்தல்              இரங்கல்                       தும்பை
                                                                                                கருவாடு
பாலை   (மணலும் மணல் சார்ந்த இடம்)   கொற்றவை    சூரையாடுதல்           பிரிதல்/உடன்போதல்     வாகை




சங்ககால இலக்கிய வகைப்பாடு:
• சங்க கால இலக்கியங்கள் பதினென் மேல் கணக்கு நூல்கள் எனப்படும். இது எட்டுத்தொகை பத்துப்பாட்டு என வகைப்படுத்தப்படும்.
•  இவ் எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் அகத்திணை, புறத்திணை சார்ந்ததாக அமைகின்றது.

எட்டுத்தொகை நூல்கள்                                       
                           அகத்திணை நூல்கள் 


  1. அகநானூறு                                                 
  2. நற்றினைநானூறு                                        
  3. குறுந்தொகை                                              
  4. கலித்தொகை
  5. ஐங்குறுநூறு
                          புறத்தினை நூல்கள்                              
  6. பதிற்று பத்து                                               
  7. பரிபாடல்                                                     
  8. புறநானுறு                                                                                                                                                                                                                                                                                                                                                                                                பத்துபாட்டு நூல்கள்

அகத்திணை நூல்கள்
1. குறிஞ்சுபாட்டு
2. முல்லைப்பாட்டு
3. பட்டினப்பாலை
                              புறத்தினை நூல்கள்
4. திருமுருகாற்றுபடை
5. பொருநர்ஆற்றுபடை
பெருனராற்றுபடை  
7. சிறுபனாற்றுபடை
8. மதுரை காஞ்சி  
9. மலைபடுகடாம்
10. நெடுநல்வாடை

இலக்கிய பண்புகள்
  1.  அகத்திணை பண்புகள்
  2.  புறத்திணை பண்புகள்
  3.  தனித்துவமான பண்புகள்

  அகத்திணை பண்புகள்
1. மக்களின் வாழ்க்கை, ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் (அக புற)
2. ஒருவரை பெயர் சுட்டிக் கூறாமை
3. அன்பின் ஐந்திணை கையாளப்படல்
4. கைக்கிளை பெருந்திணை காதல் ஒழுக்கங்கள் முக்கியத்துவம் பெருதல்
 கைக்களை : ஒருதலை காதல் பருவம் எய்தாத பெண்மீது பருவம் எய்திய ஆடவர் கொள்ளும் காதல். அவள் பற்றி பலவராக கூறி இன்புறுதல்
 பெருந்திணை : பொருந்தாக்காமம்  ஒருவன் ஒருத்தியிடம் மிக்க காமஸ்தனாகி அவளை அடைய முயற்சிப்பதோடு முடியாத போது மடலேருதலட, வரைபாயுதல் என்பவற்றில் ஈடுப்படல்.
5. கற்பொழுக்கம் களவொழுக்கம் முக்கியத்துவம் பெற்றமை
6. உள்ளுரை உவமை கையாளப்படுதல்
7. இறைச்சிப்பொருள் கையாளப்படுதல்
8. முதல், கரு, உரி முக்கியத்துவம் பெற்றமை
9. பாத்திர கூற்றுக்களாக அமைந்துள்ளமை
10. பல்வேறு பாவினங்கள் கையாளப்பட்டமை
11. நாடக பாங்கு காணப்படுதல்
12. இயற்கையோடு பின்னி பினைதல்
13. சுருங்கிய சொல்லில் விரிவான பொருளை தரல்

புறத்திணை இலக்கிய பண்புகள்
1. புறவொழுக்கங்களை பாடியமை
2. காஞ்சித்திணை பாடாண்திணை முக்கியத்துவம் பெற்றமை
 காஞ்சிதிணை : ஆண்பாற் காஞ்சி, பெண்பாற் காஞ்சி
 பாடான்திணை : பாடப்படும் ஆண்மகனது ஒழுகலாறு
3. பேர் சுட்டி பாடல்கள் பாடப்பட்டமை
4. அறிவுரை கூறும் பாடல்கள் தோற்றம் பெற்றமை
5. உலக நிலையமைக் கருத்துக்கள் வழியுருத்தப்பட்டது.
6. மன்னர்களது புகழ் பாடியமை
7. ஆற்றுபடுத்தல் இலக்கியங்கள் தோற்றம் பெற்றமை

சங்க காலம் ஒரு இயற்கை நெறி காலமாகும்.
  • மக்கள் இயற்கை மீது கொண்ட ஈடுபாடு
  • மன்னர்கள் இயற்கை மீது கொண்ட ஈடுபாடு
  • புலவர்கள் இயற்கை மீது கொண்ட ஈடுபாடு, அணி பயன்பாடு
  • முதல், கரு, உரி அனைத்தும் இயற்கையோடு இணைந்தது.
  • மக்கள் இயற்கை மீது கொண்ட ஈடுபாடு                                               சங்ககால மக்கள் தம் வாழ்க்கையை இயற்கைக்கு ஏற்றதாகவே மாற்றினார்களே தவிர தனக்கு ஏற்ற வகையில் இயற்கையை மாற்ற வில்லை ( உதாரணம் மலை,காடு,…) 
  • சங்ககால மக்கள் இலை தலைகளையும், கொடிகளையும் கொண்டு தம்மை அழங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் ( வெட்சி,வஞ்சி….)உணர்வுகள் - காதல், வீரம் 
  • நிலையாமை கருத்து – உடல், செல்வம்,  நிலையில்லாதது “ யாதும் உரே யாவரம் கேளிர்…”, “உண்டாலம்ம இவ்வுலகம்….” 
அரசர் இயற்கை மீது கொண் ஈடுபாடு
  •  மயிலுக்கு போர்வை கொடுத்த பேகன்
  •  முல்லைக்கு தேர் கொடுத்த பாரி
  • போருக்கு போகும் போது பூக்களை சூடியமை
புலவர் ஈடுபாடு
  • குழந்தை மனம் படைந்த புலவர்கள் இயற்கையை கண்டதும் குதூகளித்தனர். அத்தகைய இயற்கையை தமது கருத்துக்களை தெளிவுப்படுத்த பயன்படுத்தினர்.
  • தலைவன், தலைவியின் இடையே ஏற்படும் காதல் உணர்வுகளை இயற்கையை அடையாலமாகக் கொண்டு விளக்கியமை குறிப்பிடத்தக்கது.
  • இதற்கு ஆசிரியர்கள் பயன்படுத்திய அணிவகைகள் சிறந்த உதாரணமாகும்.
  • உதாரணம் “ கருங்கால் வேம்பில்….” என தொடங்கும் பாடலில் அத்திப்பழத்தை உவமையாகக் கூறி தலைவியின் உள்ள நிலைமையை வெளிப்படுத்தல்
  • உள்ளுரை உவமைகளை கையாளும் போதும் இயற்கை பயன்படுத்தியமை – உதரணம் புனவன்றுடவை… எனும் பாடலில் மயிலை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்படுத்தப்பட்டுள்ளது.
  • சங்ககால எட்டுத்தொகை பத்து பாட்டு அனைத்துமே இயற்கைகையை அடிப்படையாபகக் கொண்டு கருத்துக்களை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.

கரு - பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருள்கள் - மரம், பூ, பறவை, தெய்வம். நண்டு. …..
உரி – ஐந்திணக்கும் உள்ள காதல ஒழுக்கங்கள்
      ஆற்றுபடை இலக்கியங்களின் பொருள் மரபு
        ஆற்றுபடை இலக்கியங்களை குறிப்பிடுதல்
        தொல்காப்பியம் - கூத்தோர் முதலியோர் தம் வள்ளளிடம் அல்லது      
     மன்னனிடம் பெற்ற செல்வத்தை கூறி எதிர்வருவோர் அந்த மன்னனிடம் பெருள் பெறலாம் என்று கூறுவதே ஆற்றுபடை
 உதாரணம் “பாணன் சூடிய பசும் பொற்றாமறை……” பேகன் மன்னனின் கொடை
பாரி மன்னனின் கொடை தன்மை – விரகொய்ய சென்ற மக்கள்….
மன்னனின் புகழ் பாடுவதற்றாக   
  •  பாரி மன்னன் கொடை வழங்க ஆரம்பித்தால் மழை போல கொடுத்துக் கொண்டே இருப்பான்
  • அவனை போர் செய்து வெல்ல முடியாது நீயும் உன் மனைவியரும் ஆடினீர் பாடிநீர் என்றால் அவனே மாலையையும் நாட்டையும் கொடுப்பான்
நாட்டுவளம், அரசசிறப்பு, கொடை சிறப்பு
  • நாட்டுவளம் - அளிதோ தானே பாரியது பறம்மே – (பலா,மூங்கில் நெல், தேன், இராசவள்ளி)
  • அரச சிறப்பு - மூவ்வேந்தரும் ஒன்றினைந்தாலும் பாரி மன்னனை வெல்ல முடியாது.
கூத்தோர் முதலோரின் வறுமையை விளக்குதல்
  • பாணன் சூடிய பசும்பொற்றாமரை….. கூத்தரின் வறுமை பேசப்படுகின்றது.
நல்லுரையுட்டுவதன் பொருட்டு
  • மன்னனுக்கும் மக்களுக்கும் நல்லறிவூட்டும் பாடல்களாய் அமைந்தது. யாதும் ஊரே யாவரும் கேளீர்….
  • அறங்களை எடுத்துகாட்டி மன்னது கடமை விளக்குதல் - “நலியிரு முன்னீரு ஏனியாக….” வேன்கொற்றக்குடை வெயில் மறைக்கவன்று என்றும் சோழமன்னர் போர் புரிய முனையும் போது கோவூர் கிழார் பாடியது.
  • உண்டாலம்ம இவ்வுலகு என தொடங்கும் பாடலில் 
  • அமிர்தமாயினும் தனித்து உண்ணமாட்டார்கள், கோபம் கொள்ளாதவர்கள், மற்றவர் அஞ்சி இருப்பதை போல தாமும் அஞ்சியிரார், புகழின் பொருட்டு உயிரையும் கொடுப்பர். பிறருக்காக  வாழும் தன்மை கொண்டவர்கள்.
சங்க காலம் சங்க மருவிய காலத்திற்கு எவ்வாறு உதவியது
  •  அறத்தை கொடுத்து உதவியது
  •  புறத்தை கொடுத்து உதவியது
  •  அணிபயன்பாடு
  •  திணையைக் கொடுத்துதவியது
  •  செய்யுள் முறையை கொடுத்து உதவியது
  •  பாக்களை கொடுத்துதவியது
  •  நாடகப்பாங்கை கொடுத்துதவியது
  •  ஆற்றுபடுத்தல் இலக்கிய முறையை கொடுத்தது
  •  பதிக வடிவத்தை கொடுத்துதவியது
சங்க காலம் பல்லவர் காலத்திற்கு எவ்வாறு உதவியது
  • நாயகன் நாயகி பாவத்தை கொடுத்தது
  • அகத்தையும் புறத்தையும் கொடுத்தது
  • தூதுமுறையை கொடுத்தது
  • இயற்கை வர்ணனணை முறையைக் கொடுத்தது
  • கைக்கிளை பெருந்திணையை கொடுத்தது
  • மடல் கோவை போன்ற இலக்கியங்கள் உருவாக காரணமாகியது
  • பாவினங்களை கொடுத்து உதவியது
  • நாடக பாங்கு
  • அணிபயன்பாடு
  • கடவுள் வழிபாடு
மன்னர் புகழ் பாடும் இயல்பு பிற்காலத்தில் எவ்வாறு வளர்ச்சியடைந்தது
      » களவழி நாட்பது, பரணி பிரபந்தம், கோவை முதலியவற்றில்  
          மன்னனது போர்திறன், வெற்றி என்பன பாடப்பட்டது.
       » மன்னரது கொடைத்தன்மைப்பற்றி கலம்பகம், உலா என்பவற்றில் 
          பாடப்பட்டது.
       » மன்னரின் ஆட்சி சிறப்பு உலா கோவை என்பவற்றில் பாடப்பட்டது
       » மன்னரின் அரசியல் திறன் பரனி, கோவை, உலா என்பவற்றில்  
          பாடப்பட்டது.

Post a Comment

1 Comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்