இலங்கையும் பிரித்தானியரும்




 நாமும் மக்களும் இன, மத, பேதங்களின்றி அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக இலங்கை பிரஜைகள் என்ற அந்தஸ்த்துடன் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். இன்று எமது இலங்கையை பொருத்தவரையில் பல உலக நாடுகளின் மத்தியில் அபிவிருத்தி அடைந்துவரும் நடுத்தர வர்க்கமுடைய நாடாக விளங்குவதோடு, பல நாடுகளுடன் நெருங்கிய தொடர்புடையதாக காணப்படுகின்றது. அந்த வகையில் எமது நாட்டின் இன்றைய சமூக பொருளாதார, அரசியல் மாற்றங்கள் அனைத்துக்கும் அடிதளமிட்ட அல்லது வித்திட்ட ஒரு காலமாக எமது இலங்கையை ஆட்சி செய்த அன்னியரின் ஆட்சிக்காலத்துக்குள் பிரித்தானியர் காலமானது முக்கியமான ஒன்றாக விளங்குகின்றது. அதனடிப்படையில் இதன் முக்கியத்துவத்தை அறிந்துக்கொள்வதற்கு நாம் அதனை சமுக, பொருளாதார, அரசியல் ரீதியான மாற்றங்களுக்கு எவ்வாறு பிரித்தானியர் காலமானது வித்திட்டுள்ளது என்பதனை இனி கீழே வேறு வேறாக ஆராய்ந்து செல்லாம்.



சமூகரீதியான மாற்றங்கள்

   சமூக ரீதியான மாற்றங்கள் எனும் போது இலங்கையை பொருத்தவரையில் இது பல்லினம் வாழுகின்ற ஒரு நாடாகும் அதாவது சிங்களவர், தமிழர், முஸ்லீம் பேகர் முதலியோர் வாழுகின்றனர். இத்தகையோர் வாழுகின்ற நாட்டில் பிரித்தானியரது செல்வாக்கானது பல வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும், அந்த வகையில் நாம் இன்று சமூக ரீதியாக பார்க்கும் போது எமது இலங்கை சமூகமானது பல்வேறு வகையில் மாற்றத்துக்குள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும் அதனடிப்படையில் அவை நன்மை பயப்பனவாகவும், சில சந்தர்ப்பங்களில் தீமை பயப்பனவாகவும் அமைந்துள்ளது அதற்கும் பிரித்தானியர் காலம் வித்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அந்தவகையில சமூக அடையாளம் என்பது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சமாக காணப்படுகின்றது. அவ் சமூக அடையாளத்துக்குள் நாம் மதம், மொழி, கலாச்சார ஆடை, அலங்காரம் மதுபாவனை முதலிய பல்வேறு அம்சங்களை குறிப்பிடலாம் இவற்றில் சாதக பாதக அம்சங்களும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிட்டு கூறத்தக்கது.

      இன்று எமது இலங்கையில் கல்வி நிலையை நோக்கும் போது எழுத்தறிவு மற்றும் வாசிப்புத் திறன் என்பன உயர் மட்டத்தில் காணப்படுகின்றமை வரவேற்கத்தக்க விடயமாகும். ஆரம்ப காலத்தை பொருத்தவரையில் கல்வி கற்றோர் வீதம் என்பது மிகமிக குறைவான அளவாகவே காணப்பட்டர் அதாவது குறிபிட்ட சில பேர் மட்டுமே கல்வி அறிவுடையோராக காணப்பட்டனர்.  ஆனால் இன்று எமது இலங்கையை நோக்கும் போது ஆசிய நாடுகளில் இலங்கையின் கல்வி அறிவானது மிகவும் உயர் மட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆரம்ப காலங்களில் தமது தாய் மொழியிலயே விருத்தியடையாதவர்களாக காணப்பட்டனர். இன்று எமது நாட்டில் வாழுகின்ற பல்லின மக்களும் பலமொழி பேசக்கூடியவர்களாகவும் எழுத, வாசிக்க கூடியவர்களாகவும் இருக்கின்றனர். அத்தோடு இன்று எல்லா  கல்வி நிருவனங்களை பார்க்கும் போது முக்கியமான ஒரு விடயம் புலப்படுவதனைக் கானலாம் அதாவது ஆங்கில கல்வியின் முக்கியத்துவம் இன்று பரவலாக அதிகரித்து காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 

         இன்று இலங்கையில் உயர் பதவிகளை பெற்றுக் கொள்ளுவதற்கு நல்லதொரு தொழில் பெற்றுக் கொள்வதற்கு மிக பிரதானமான தகுதியாக ஆங்கில அறிவு என்பது காணப்படுகின்றது. மேலும் இன்று எத்தனையோ பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலம் கல்வி போதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நிலையானது சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்துவதோடு சுதேசிய மொழியில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதாவது இன்று நகர்புறங்களை பார்க்கும் போது பாலர் பாடசாலை தொடக்கம் பட்டப்படிப்புவரை ஆங்கில மொழிமூலத்தை பின் தொடர்கிறார்கள் எனவே தாய் மொழி மெது மெதுவாக அழிவு பாதையை நோக்கி செல்வது குறிப்பிடத்தக்கது. இன்று வெளி நாடுகளின் பாட விதானங்கள் கூட  இலங்கையில் கற்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ் ஆங்கில கல்வி அறிமுகத்தை தந்தது பிரித்தானிய காலமாகும். அதாவது பிரித்தானிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்தில் கல்வி நடவடிக்கையின் பொருட்டு கீழ்வரும் சில விடயங்களை மேற் கொண்டனர்.

       ஒல்லாந்தர் கல்வி நடவடிக்கையை பின்பற்றினர் அத்தோடு கிருஸ்த்தவ சமய சூழலிலான மேற்கத்தேய முறையிலான கல்வியை வழங்க தீர்மானித்தனர். ஆனாலும் அரசாங்கத்திற்கு தேவையான எழுது விளைஞர்களை கிராமத் தலைவர்களையும் பயிற்றுவிப்பதற்கு இங்குள்ள கனவான்களின் பிள்ளைகளுக்காகவும் “கொழும்பு அகடமி” எனும் தாபனத்தை உருவாக்கினர். மேலும் 1812ல் பிரவுன்றிக் ஆளுனர் இலங்கைக்கு வந்த பின்னர் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் பொருட்டு கீழ்ரும் மிசனரிகளை உருவாக்கி அதன் ஊடாக கல்வியை வழங்கியதோடு ஆங்கில கல்வி, கிருஸ்த்தவ மதம் என்பவற்றை இலங்கையில் பரவச் செய்தனர். இன்று அதன் வளர்ச்சி உச்சக்கட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து மிசனரி சங்கம், லண்டன் மிசனரி சங்கம், பப்டிஸ் இயக்கம், வெஸ்லியன் மெதடிஸ்ற் இயக்கம், அமெரிக்க மிசனரி இயக்கம் முதலியன குறிப்பிடத்தக்கது

            முதலிய பல மிசனரிகளை உருவாக்கி கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனாலும் 1931ம் ஆண்டு கோல்புறுக் குழுவினரின் கல்வி நடவடிக்கை எனும்போது இவர்கள் பாடசாலை நிர்வாக ஆணைகுழு உருவாக்கி பாடசாலைகளை மேற்பார்வை செய்தனர், அத்தோடு ஆங்கில கல்வியை கட்டாயமாக்கல், அங்கில பாடசாலைகளை உருவாக்கல், ஆங்கில கல்வியை கற்பிக்கவென கொழும்பில்  வித்தியாலயம் ஒன்றை உருவாக்கினர் இன்னும் பல்வேறு விடயங்களை இவர்களும் மேற் கொண்டிருந்தனர் இத்தகைய அடிப்படையில் கல்வி ரீதியான பல விடயங்களுக்கு பிரித்தானியர் காலம் வித்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது அதன் வளர்ச்சியே இன்று நாம் பல் மொழியில் கற்கக்கூடிய ஒரு வாய்பை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கை மக்களிடையே காணப்பட்ட பாரம்பரிய கலாச்சார முறையிலும் மாற்றங்கள் ஏற்பட இவ் பிரித்தானியர் காலம் வித்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களின் ஆட்சி காலத்தை தொடர்ந்தே மேற்கத்தேய கலாசாரம் என்பது எமது நாட்டிலும் செல்வாக்கு செலுத்தத் தொடங்கியது. இன்று நமது இளைய தலைமுறையை பொருத்தவரையில் ஆடை அலங்காரத்தை நோக்கும் போது அவர்கள் தமது  கலாசார ஆடைகளை விட மேற்கத்தைய மோகத்தில் காணப்படுவதைக் காணலாம் எடுத்துக்காட்டாக அவர்களின் நடை உடை, பாவனையில் நாம் அவற்றை அறிந்தக்கொள்ளக்கூடியதாய் இருக்கின்றது.  அது மட்டுமன்றி அவர்களின் உணவு பழக்கவழக்கங்கள் கூட மாற்றமடைந்து காணப்படுகின்றது இதற்கும் பிரித்தானிய கால தாக்கம் முக்கியத்துவம் பெருகின்றது. 
          மேலும் 1911ம் அண்டின் பின்னர் ஆங்கில அரசாங்கம் வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்கு மதுபானச் சாலைகளை அதிகமாக திறக்க அனுமதியளித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அந்தவகையில் இன்று எமது நாட்டிலும் போதை பொருள் பாவனை என்பதும் சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும் எமது நாட்டு மக்களால் பனங்கல் என்பதனை மாத்திரமே போதை பொருளாக அருந்தினர் அனால் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை தொடர்ந்தே புதிய வகையான போதை பொருட்கள் எமது நாட்டை நோக்கி வருகைத்தர காரணமாயிற்று.  இன்று மது பாவனையோடு வேறு பல போதை தரும் பொருட்களும் அதாவது கஞ்ஞா, அபின், ஹெரோயின் போன்ற பயங்கரமான போதை பொருட்கள் பயன்படுத்துமளவுக்கு உயர்ந்தள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் புகைத்தலும் உயர்வடைந்துள்ள நிலையை நாம் காணலாம். ஆரம்ப காலத்தில் புiகையிலையில் சுருட்டு செய்து அருந்தியவர்கள் இன்று சிகரட், கோர்லிப், பிடி இன்னும் பல பொருட்களை புகைத்தலுக்காக பயன்படுத்துகின்றனர்.

   மேலும் எமது நாட்டில் கிருஸ்த்துவ மதமும் இன்று முக்கிய இடம் வகிக்கின்றது.  இன்று சுதேசிய மதங்களை போல இன்றும் அவை அரச ரீதியில் செல்வாக்கு பெற்று திகழ்கின்றன அதனடிப்படையில் இவ் கத்தோலிக்க மிசனரிகளை நிருவி அதனுடாக ஆங்கில கல்வி மற்றும் கிருஸ்த்தவ மத போதனைகளை நடத்தி கிருஸ்த்தவ மதத்தை நிலைபெறச் செய்ததும் பிரித்தானிய காலமாகும். இன்றும் கத்தோலிக்க மதத்தின் ஒரு பிரிவாக பெந்தகோஸ் என அழைக்கப்படும் மதப்பிரிவில் இத்தகைய போதனைகள் இடம்பெருவதோடு ஆரம்ப காலத்தை போல மதமாற்ற நிகழ்வுகளும் ஆங்காங்கே இடம்பெற்று வருதைக் காணலாம். 

      ஊடகத்துறை வளர்ச்சி என்பது இன்று எமது நாட்டிலும் உயர் மட்டத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயம்.  இத்தகைய ஊடகத்துறை வளர்ச்சிக்கும் வித்திட்ட பெருமை பிரித்தானிய காலத்தை சார்ந்ததாக காணப்படுகின்றது. எடுத்துக்காட்டாக  இவர்களது ஆட்சிக்கால்திலயே சுதேசத்தை பாதுகாக்கும் வகையில் பிரித்தானியருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பல பத்திரிகைகள் தோற்றம் பெற்றன. 1864ம் ஆண்டுகளில் லக்மினி, கிரண, லக்மினி பஹன, அருணோதய என்பனவும், 1866ம் ஆண்டுகளில் ஞானார்த்த பிரதீபாய என்ற பத்திரிகை இன்றும் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 1880 சரசவி சந்தோய, 1902 “சிங்கள ஜாதிய” என்ற பத்திரகை பியதாஸ சிரிசேன என்பவரால் வெளியிடப்பட்டது. 1909 தினமின பத்திரிகை 1888 இந்து சாதனம், 1930 வீரகேசரி, 1931 தினகரன் மேலும் முஸ்லீம் நேசன், ஞான தீபம்  போன்ற பல பத்திரிகைகள் தமது மதம், மொழி, கலாசரம் என்பவற்றை பாதுகாக்கவும் கண்டனங்களை செய்யவும் தோற்றம் பெற்றன. அதன் பிரதிபளிப்பு தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்று இன்று மொழியிலும் பத்திரிகைகள் வெளியாகி மக்களின் கைகளில் சென்றடைவதைக் காணலாம். இன்று பத்திரிகைகளின் வளர்ச்சியானது சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் தேவைக்கேற்ப வெளிவருவதைக் காணலாம். வீரகேசரி, வாரமலர், தினகரன், தினமுரசு, விஜய், லங்காதீப, டெய்லி நிவ்ஸ், டெய்லி மிரர், சன்டே ஒப்சேவர் முதலியவற்றை குறிப்பிடலாம். 

      பிரித்தானியர்  காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தபாற்சேவை, வங்கி சேவை, தந்தி சேவை என்பனவும் இன்று பாரிய வளர்ச்சியடைந்திருக்கின்றமை காணக்கூடியதாய் உள்ளது. உதாரணமாக தபாற் சேவைக்கு அரச நிருவனங்கள் செயற்படுவதோடு தனியார் நிருவனங்களும் செயற்படுகின்றன. அவ்வாறே வங்கி சேவையும் இன்று எத்தனையோ வகையான வங்கி சேவை வளர்ச்சியடைந்து காணப்படுகின்றது உதாரணமாக மக்கள் வங்கி, கொமர்சல் வங்கி, எச்.என்பி என். எஸ்பி இலங்கை வங்கி பான் எசியா வங்கி, செலான் வங்கி, சமூர்த்திவங்கி, சம்பத் வங்கி, எச். எஸ் பிஸி….. முதலிய சிலவற்றை குறிப்பிடலாம். இத்தகைய அடிப்படையில் கலாசார ரீதியான விடயங்களை நாம் நோக்கக்கூடியதாய் உள்ளது.

அரசியல் மாற்றம்
     எமது நாடு தற்போது சிறந்ததொரு அரசியல் கலாசாரத்தை கொண்ட ஒரு நாடாக விளங்குவதோடு அரசியல் ரீதியாக பல்வேறு நாடுகளுடன் தொடர்புடையதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும் இன்று எமது நாடு அரசியல் ரீதியாக ஓர் உயர்ந்த இடத்தில் இருக்கின்றதென்றால் அதற்கு பிரதான காரணம் பிரித்தானிய ஆட்சி என்றால் மிகையாகாது. எமது நாடு அந்நியரின் ஆட்சிக்கு உட்பட்ட காலத்திலிருந்து எம்மை பலர் ஆட்சி செய்தனர் என்றாலும் சுதேசிகள் அரசியல் ரீதியாக  பங்குபற்றுதல் என்பது குறைவாகவே இருந்துவந்தள்ளது. எனினும் பிரித்தானிய ஆட்சிகாலமானது இதற்கு மாறுபட்ட வகையில் இலங்கையருக்கும் ஓரளவேனும் அரசியல் ரீதியான பங்குபற்றுதலை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று நாம் நமது சுதேசிகளால் ஆக்கப்பட்ட ஒரு அரசியல் திட்டத்தை கொண்டும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய பாராளுமன்றம் மற்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்போரை உள்ளடக்கிய ஒரு நிருவாகத்தின் கீழ் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். இன்று மக்களின் தேவை என்பது பரந்துபட்டவகையில் விரிந்து செல்கின்ற நிலைமையை காணலாம்.  இன்றைய அரசியல், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஒரு சேமநல அரசாக செயற்படுகின்ற நிலையை காணலாம். இத்தற்கான அரசியல் ரீதியான அறிவு, ஞானம் என்பவற்றை பெற்றுக்கொள்ள வழிசமைத்தவர்களாக அல்லது வித்திட்டவர்களாக நாம் பிரித்தானியரை குறிப்பிட்டால் அது மிகையாகாது
     
     இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் ஆங்கிலம் கற்ற ஒரு மத்தியதர வர்க்கம் உருவானது.  ஆங்கிலம் கற்ற இவ் மத்தியதர வர்க்கத்தினர் தாரண்மை வாதக் கொள்கைகள் பற்றிய அறிவும் தெளிவும் ஏற்படலாயிற்று இதன் விளைவாக இலங்கையில் தேசிய இயக்கம் வளர்ச்சி பெறுவதில் செல்வாக்கு செலுத்தியது. தாம் பெற்ற கல்விக்கு ஒப்பாக சமூக பொருளாதார, அரசியல் துறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட அரசியல் துறையில் பிரவேசிக்கும் சந்தர்ப்பம் சுதேசிய மக்களுக்கு கிடைக்கவில்லை. எனவே சுதேசிகள் இவ் அரசியலில் அங்கத்துவம் பெறுவதற்கு முயற்சிக்கத்தொடங்கினர் குறிப்பாக மத்தியதர வர்க்கத்தினர். எனவே இவர்களும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தேசிய காங்கிரஸ்சோடு இணைந்து கொள்ள தொடங்கினர். மேலும் இவ் மத்தியதர வர்க்கத்தினர் தேசியத்துவத்தை வளர்க்கவே, அல்லது ஆங்கிலேயரை வெளியேற்றவோ  தேவையாக இருக்கவில்லை இவர்களுக்கு அரசியல் சீர் திருத்தங்கள் ஊடாக அரசியலில் சம்மந்தப்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள முனைந்தனர். அதற்கமைய சட்டவாக்க கழகத்தை விஸ்த்தரிப்பதன் ஊடாக தானும் அங்கத்துவம் பெற முயற்சித்தனர். 1870ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கீழ் நாட்டு வர்த்தக பயிர் செய்கை சங்கத்தின் தலைமைத்துவ பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். அவ்வாறே  இக்காலத்தில் ஆரம்பிக்கப்ட்ட யாழ்ப்பான சங்கம், சிலாப சங்கம் என்பனவும் போராட்டங்களை நடாத்தியது. 1910ம் ஆண்டு அரசியல் சீர்த்திருத்தம் ஒன்றை பெற்றுத்தந்தாலும் அதில் சுதேசிகள் திருப்தியடையவில்லை. தொடர்ந்து 1915ம் அண்டில் இடம்பெற்ற சிங்கள முஸ்லிம் இனகலவரத்த்தை சாதகமாகக் கொண்டு கிளர்ச்சி செய்த பல மக்கியஸ்த்தர்களை பிரித்தானிய அரசு தூக்கிலிட்டது. இதனால் ஏகாதிபத்திய வாதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து சுதந்திரமடைய வேண்டும் ஏன்ற எண்ணம் சுதேசிகளிடையே  பலமடைந்தது. எனவே இதனைத் தொடர்ந்து தேசிய தலைவர்களிடையே ஒற்றுமை நிலவியது. இக்காலத்தில் சிங்கள தமிழரிடையே ஒற்றுமை ஏற்பட பிரித்தாணியரின் செயல் காரணமாயிற்று. இதன் பிரதிபலிப்பாக 1919ம் ஆண்டு தேசிய சங்கம் நிறவப்படட்டது. இதன் தலைவராக தமிழரான சேர்.பொன் அருணாசலம் தெரிவு செய்யப்பட்டார். 1921ம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள தமிழ் தலைமைகளிடையே முரன்பாடு ஏற்பட்டு பிரிந்து செயற்படலாயினர். 

        இதனை தொடர்ந்து, 1922ல் தோற்றம் பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மிக முக்கியமானது குணசிங்க அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம் நாட்டின் சுதந்திரம் மற்றும் சர்வசன வாக்குரிமை என்பதாகும். இதனைத் தொடர்ந்தே முக்கியமாக சுதேசியரின் அரசியல் ரீதியான மாற்றமானது மிக மிக முக்கியமானதாக மாறிய காலமாகும்.  காரணம் சர்வஜன வாக்குரிமை தொடர்பான கருத்து முக்கியத்துவம் பெற்றது இக்காலத்திலேயே ஆகும். காரணம் மனிங் டிவன்சர் சீர் திருத்தத்தில் படித்த, மத்தியத்தர, குறிப்பிட்ட வயதிற்கு மேல், ஆண்களுக்கு மட்டுமே வாக்குறுமை வழங்கப்பட்டிருந்தது. இந் நிலையானது மக்கள் தொகையில் 4 வீதமானோரே அரசியலில் பங்குபற்ற வாய்பளித்தது. எனவே தான் 1931 டொனமூர் குழு முன்னிலையில் சர்வஜன வாக்குரிமை தொடர்பாக சிபாரிசு செய்யப்ட்டது. பல எதிர்ப்புக்கள் ஏற்பட்டாலும் கூட டொனமூர் குழுவானது சர்வஜன வாக்குரிமை வழங்கிய நிலையானது இலங்கை அரசியல் வரலாற்றில் பாரியதொரு திருப்பு முனையாக அமைந்தது.  இவ் சர்வசன வாக்குரிமை வழங்கியது தொடக்கம் படித்த மற்றும் படிக்காத பாமர மக்கள் வரை அனைவரும் அரசியலில் பங்கெடுக்க தொடங்கினர்.  அத்தோடு பாமர மக்களின் தேவையை நிறைவேற்றவேண்டிய கட்டாயப்பாடு அரசியல் வாதிகளுக்கு நேர்ந்தது. இன்று தேர்தல் காலங்களை பார்க்கும் போது அனைத்து வேட்பாளர்களும் மக்களது தேவைகளை நிறைவேற்றி அதன்வழி வாக்குகளை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்ற நிலையை காணலாம். இதற்கு அடித்தளமிட்ட ஒரு அம்சமாக 1931 டொனமூர் அரசியல் திட்டத்தை குறிப்பிடலாம். மேலும் இவ் அரசியல் திட்டத்திலையே எமது நாட்டவர்கள் அரசியல் ரீதியான பயிற்சி, அனுபவம் என்பவற்றை பெருவதற்கு ஆரம்பித்த பாலமாகும். இன்று பாராளுமன்றத்தில் துறைசார்ந்த வல்லுணர்கள், அரசியல் சாணக்கியர்கள், அனுபவஸ்த்தர்கள் என்று பலர் காணப்பட்டாலும் ஆரம்ப காலங்களில் எமது நாட்டவர் ஆட்சி செய்வது தொடர்பான அறிவோ அனுபவமே திறமையோ கொண்டிருக்கவில்லை எனவே அதற்கான ஆரம்ப பள்ளிக்கூடமாக அல்லது பயிற்சிகளமாக டொனமூர் சிபாரிசுகள் காணப்பட்டது இதில் காணபட்ட நிருவாகக் குழு முறைமை இத்தகைய நிலையை ஏற்படுத்தித்தந்தமை குறிப்பிடத்தக்கவிடயமாகும். 

   அதனைத்தொடர்ந்து வந்த சோல்பரி குழுவின் சிபாரிசுகளும் ஏற்பாடுகளும் நமது  இன்றைய அரசியலில் தாக்கம் செலுத்தியுள்ள நிலையை காணலாம். 1948ம் ஆண்டு எமது நாட்டிற்கு சுதந்திரம் வழங்கினாலும் தொடர்ந்தும் பிரித்தானியாவின் ஆதிக்கம் இலங்கையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எடுத்துகாட்டாக கோமறைக்கழகம், தேசாதிபதி அதிகாரம், வெஸ்மினிஸ்டர் முறை இப்படி பலவற்றை குறிப்பிடலாம். மேலும் இன்றும் சிறுபான்மை நலன் பற்றி அரசியல் வாதிகள் சிந்திப்பதற்கும் இக்காலமும் மிக முக்கியமானது. குறிப்பாக இக்காலத்திலையே சிறுபான்மையினருக்கு அதிகமான காப்பிடுகள் வழங்கப்பட்டன. இந்த நிலை இன்றும் சிறுபான்மை நலன் கருதி பல ஏற்பாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்றும் காணப்படுகின்ற பாராளுமன்ற அமைப்பினைக்கூட கற்றுதந்தது பிரித்தானியாவாகும். 

     சோல்பரி யாப்பின் ஊடாகவும் அரசியல் ரீதியான அறிவு அனுபவம் என்பவற்றை பெற்று கொண்ட பிறகு சுதேசிகளால் உருவாக்கப்பட்ட ஒரு சுதந்திரமான யாப்பை உருவாக்க இலங்கையர் முயற்சித்ததன் பயனாக 1972ம் ஆண்டின் முதலாம் குடியரசு அரசியல் யாப்பு என்பது தோற்றம் பெற்றது என்றாலும் கூட அது 1947ம் ஆண்டு யாப்பை தழுவியதாகவே இருந்தமை குறிப்பிடத்தக்கது. சில அம்சங்கள் மட்டும் பெயர்மாற்றம் செய்யப்பட்டிருந்தது. உதாரணமாக 1947 தேசாதிபதி 1972 ஜநாதிபதி என பெயர் மாற்றம் அதிகார்கள் ஒரே வகையாக இருந்தமை குறிப்பிடதக்கது. என்றாலும் சுதேசியர் சுயமாக யாப்பொன்றை தமக்கென வரையும் அளவுக்கு வளர்ச்சியடைய பிரித்தானிய நிருவாக செயற்பாடு மிக பிரதான காரணமாகும். மேலும் 1972ம் ஆண்டு யாப்பு வரையிலான காணப்ட்ட எளிய பொரும்பான்மை தேர்தல் முறையும்கூட அவர்களின் பிரதிபளிப்பாகவே அமைந்திருந்தது. 

       அதனைத் தொடர்ந்து மேலும் அரசியல் ரீதியான வளர்ச்சி காரணமாக மேலும் ஒரு திருத்தத்துடனான அரசியல் யாப்பை 1978ம் ஆண்டு இரண்டாம் சோசலிச குடியரசு யாப்பை சுதேசியர் உருவாக்கி அமுல்படுத்தினர். இவ் அரசியல் யாப்பை பொருத்தவரையில் பல்வேறு புதிய ஏற்பாடுகளை கொண்டதாக அமைந்திருந்தமை விசேட அம்சமாகும் எடுத்துக்காட்டாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, மனித உரிமை, ஒம்புட்ஸ்மன், விகிதசம பிரதிநிதித்துவம் முதலிய பல்வேறு விடயங்களை அறிமுகப்படுத்தியது. இவ் அரசியல் யாப்பின் பிரகாரம் ஆசியாவிலையே சனாதிபதி அதிகாரம் படைத்தவரக காணப்படுகின்றனர். சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு ஆட்சிக்கு வந்த எமது நாட்டு சுதேசிய ஜனாதிபதிகளில் குறிப்பாக இன்று காணப்படுகின்ற கௌரவ மஹித்ரிபால  சிறிசேன அவர்கள் தெற்காசிய நாடுகளின் ஒருங்கிணைப்பான சார்க் நாட்டுகளின் அமைப்பிற்கு தலைமைத்தாங்கினர். அது மட்டுமன்றி பல நாடுகளுக்கு விஜயம் செய்து பல நாட்டு தலைவர்களுடன் தமது உறவை பேணுவதோடு நாட்டின் பொருளாதாரம்,அரசியல்,கலாசார ரீதியான பரஸ்பர உறவை வளர்ப்பதை காணக்கூடியதாய் உள்ளது. இத்தகைய அடிப்படையில் இன்று பல்வேறு வகையான அரசியல் ரீதியான செயற்பாடுகள் வளர்ச்சியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொருளாதாரம்
   இலங்கை பொருளாதாரம் தொடர்பாக நோக்கும் போதுகூட பிரித்தானியரின் தாக்கத்ததை இன்னும் கானக்கூடிய நிலையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். எமது நாட்டை பலர் ஆட்சி செய்திருந்தாலும் பொருளாதார ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்திய பெறுமை பிரித்தானியரையே சாரும். அதன் அடிப்படையில் அவர்களின் பங்களிப்பின் பிரதிபளிப்பு  எவ்வாறு நடைமுறையில் காணப்படுகின்றது என்பதை இனி கீழே விரிவாக நோக்கலாம். 

      இன்று எமது நாடானது சந்தை பொருளாரதாரம் எனும் நிலைக்கு விரிவடைந்து காணப்படுகின்றது. அதாவது ஆரம்பத்தில் தன்னிறைவு  பொருளாதாரத்தில் மட்டும் தங்கியிருந்த இலங்கை நாளடைவில் ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரத்தை நோக்கி விரிவடைய தொடங்கின.  இன்று இதன் நிலப்பாட்டை பார்க்கும் போது இலங்கைக்கு தேவையான உணவு பொருள்களில் இருந்து தேவையான அத்தியவசிய பொருட்கள் கூட இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது.  உள்ளுரi; சந்தைகளில் விற்கப்படுகின்ற நிலையைக் காணலாம். மேலும் எமது நாட்டில் அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு இல்லை அதற்கான உள்ளீடுகள் இல்லை எனவே  இவற்றை கூட நாம் இன்று பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பொருற்களை உற்பத்தி செய்து அவற்றை உள்ளுர் சந்தைகளிலும் வெளிநாட்டு சந்தைகளிலும் விற்பதைக் காணலாம்.

      அத்துடன் முக்கியமாக பிரித்தானியர் ஆரம்பத்தில் எமது நாட்டில் இருந்த பொருட்களை சுரன்டி தமது நாட்டிற்கு எடுத்து சென்றனர் உதாரணமாக கொக்கோ,கோப்பி,ஏலம்,கருவா,மா,யானை,தந்தம், வாசனைத்திரவியங்கள் முதலியன குறிப்பிடத்தக்கன. மேலும் தமது நாட்டிற்கு தேவையான பொருட்களை இங்கு உற்பத்தி செய்து அதனையும் தமது நாட்டிற்கு கொண்டு சென்றனர் அதன் அடிப்படையிலையே பெருந்தோட்ட பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் விவசாயத்தில் மட்டும் தங்கியிருந்த எமது நாடு ஏனைய பொருளாதார பெருந்தோட்ட பயிர்களை அறிமுகம் செய்தமையால் பொருளாதார ரீதியாக ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. இவர்களின் காலத்திலையே இலங்கை விவசாய துறையிலிருந்து கைத்தொழில் துறைக்கு மாற்றமடைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தேயிலை பயிர் செய்கையை அறிமுகப்படுத்திய போதே இன்றும் மலையகத்தில் வாழும் தமிழர்கள் தொழிலாளியாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர். இன்று இவர்கள் இலங்கை பிரஜைகளாக தமது அந்தஸ்த்தினை அரசியல் யாப்பு ரீதியாக பெற்று தமது வாழ்விடத்தை உருதிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

      இன்று எமது ஏற்றுமதி  பொருள்களில் தேயிலையும் மிக பிரதானமான பயிர் எனவே அதனை அறிமுகப்படுத்தியவர்கள் பரித்தானியர்  மேலும் அதில் தொழில் புரிவதற்கு வரவழைக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்களும் பிரித்தானியரின் செயற்பாடே என்பதும் சுட்டிக்காட்டத்தக்க அம்சமாகும்.
மேலும் இன்று எமது நாடானது பல்வேறுபட்டவகையில் உலக நாடுகளுடன் தொடர்பை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தனக்கென உலக சந்தையில் ஒரு தனி இடம்பிடித்துள்ளது எடுத்துக்காட்டாக சிலோன் தேயிலைக்கு முக்கிய இடமுண்டு. மேலும் எமது நாட்டில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பல துறைகளில் முதலீட்டை மேற்கொண்டு வருகின்றனர். அதன் விளைவாக அந்நிய செலவாணி  மற்றும் வெளிநாட்டு நாணயங்களின் புலக்கம் என்பன இலங்கையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் மிக முக்கியமாக நாணயம்  என்பதனை இலங்கையில் அறிமுகப்படுத்தியவர்கள் பிரித்தானியர்களே இன்றும் நாணய வடிவங்கள் மாற்று வடிவம் பெற்று  பயன்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

   அதனைத் தொடர்ந்து பார்க்கும் போது பொருளாதார அபிவிருத்திக்கு போக்குவரத்து உட்க்கட்டமைப்பு மற்றும் நீர் அமைப்பு மிக பிரதானமானது. இவற்றைக்கூட ஏற்படுத்தித் தந்தவர்கள் பிரித்தானியர்களே இன்றும் காணப்படுகின்ற புகையிரத பாதைகள், ஏனைய பாதைகள், துறைமுகங்ககள், கப்பல்போக்குவரத்து, விமான போக்குவரத்து முதலிய அனைத்தும் பிரித்தானியரின் கொடையாகவே காணப்படுகின்றது. அதே போன்று பயிர் செய்கையின் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட நீர் தேக்கங்கள் இன்றும அவை பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது அவை இன்றும் பயன்படுத்துவதற்கு புணர்நிர்மானம் செய்து பயன்படுத்திய பெருமையும் பிரித்தானியரையே சாரும் எடுத்துக்காட்டாக கீழ்வரும் உதாரணங்களை குறிப்பிடலாம்.
     1885-1860 வரையிலான காலப்பகுதியில் பிரித்தானிய ஆளுநரான ஹென்றிவோட் கிழக்கு மாகாணத்தில்  இறக்காமம்  குளத்தையும்  அம்பாரை குளத்தையும், தென் மாகானத்தில் கிரம, ஊருபொக்க குளங்களையும், மாத்தளை,ஊவா பிரதேசங்களில் சிரிய குளங்களையும், கால்வாய்களையும் புனரநிர்மானம் செய்தார். 1866 இல் ஹெர்கியூலிஸ் ரொபின்சன் திஸ்சமாராம குளத்தை திருத்தியமைத்தார். 1872 இல் வில்லியம் கிரகெரி கந்தளாய் குளத்தை  திருத்தியமைத்தார் அத்தோடு கலாவாவியிலிருந்து அநூராதபுரம் வரை நீரைக் கொண்டு செல்வதற்காக தாதுசேன மன்னனால் வெட்டப்பட்ட யோதகால்வாயின் ஒரு பகுதியைப் புணரமைத்தார். 1883-1890  ஆத்தர் கோடன் கலாவாவியை புணரமைத்து. கிரகறி ஆளுநரால்  ஆரம்பிக்கப்ட்ட கலாவாவியை திருத்தியமைக்கும் பணியை பூரணப்படுத்தினர் ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் சிறிய நீர்பாசனத் திட்டங்கள் பலவற்றையும் திருத்தியமைத்தார். 1896 இல்  வெஸ்ட் ரிஜ்வே  வட மாகாணத்தில்  யோதவாவி, நச்சதுவ வாவி என்பவற்றை புணரமைத்தார்.  ஹென்றி ஆத்தர் பிளேக்  நுவர வாவியை புணரமைத்தார். மெக்கலம் மினிப்பே கால்வாயை புணரமைத்தார். இப்படி பட்டியல் நீண்டுக் கொண்டே போகின்ற நிலமையைக் காணலாம். 

   மேலும்  இன்று தொழில்நூட்பம் என்பது மனிதனுக்கு சவால் தரக்கூடிய ஒரு விடயமாகக் காணப்படுகிள்றது அத்தகைய தொழில்நுட்பமானது இலங்கையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய தொழிநுட்ப வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டவர்கள் பிரித்தானியரே தேயிலை ஆலைகளை உருவாக்கிய போது அதற்கான தெழிநுட்ப உபகரணங்களை அறிமுகப்படுத்திளார்கள் அத்தோடு கொழுந்து மூட்டைகளை கொண்டு செல்வதற்கு கேபிள் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் பிரித்தானியரே இன்று தேயிலை தொழிற்சாலைகளை பார்க்கும் போது அதி நவீன உபகரணங்கள் கொண்டு செயற்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் குறிப்பாக எல்லா நிருவனங்களிலும் ஏதோ ஒருவகையான தொழிநுட்பத்தை பயன்படுத்துகின்ற நிலமையைக் காணக்கூடியதாய் உள்ளது.

   அதனைத் தொடர்ந்து மாக்ஸிய பொருளாதார முறைமை அதாவது முதலாளி தொழிலாளி என்ற ஏற்றத்தாழ்வு இன்றும் எமது சமூகத்தில் காணப்படுகின்ற நிலமைக்கூட பிரித்தானியர் விளைவானதாகவே காணப்படுகின்றது.   இவ்வாறாக பிரித்தானியரின் நமது நாட்டில் வருகை பாரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்

          

Post a Comment

0 Comments