• மோதல் நிலைமாற்றம்
மேலும் மோதல் நிலைமாற்றத்தின் அடிப்படையில் நோக்கும் போது ஒரு மோதல் தீர்வானது பல்வேறுபட்ட பிரச்சினைகளை தோற்றுவிப்பதாக அமையும் அதாவது குறிப்பிட்ட நோக்கம் கருதிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டாலும் அத்தீர்வுக்கு பின் வேறுசில பிரச்சினைகள் உருவாவதை நாம் காணக்கூடியதாய் உள்ளது. உதாரணமாக மோதலில் ஈடுப்பட்டவர்கள் மனப்பாங்கு, செயற்பாடுகள், நடத்தைகள் முதலிய பல்வேறு வகைகளில் மனித ஆளுமையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். எனவே மோதல் பிரச்சினையோடு ஏற்படும் பக்க விளவகளுக்கும் தீர்வுக்காணும்’ வகையில் செயற்படுதல் கட்டாயமானது. எனவே மோதல் எதிர்நிலை மாற்றத்தை ஏற்படுத்திய எல்லா விடயங்களிலும் நேர் நிலையான மாற்றங்களைளக் கொண்டு வருவதாகும். ஆயினும் இது மோதலின் முன் இருந்த பழைய நிலைக்கு திரும்புதல் என்ற கருத்து உடையது ஆகாது. மாறாக சமூக நீதியையும் ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் உத்தரவுப்படுத்தக்கூடிய புதிய ஒரு நிலைக்குமாறிச் செல்வதாகும். அதனடிப்படையில் இதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளாக
மோதல் தீர்வு அணுகுமுறைகளில் ஏனைய எல்லா நிலைமைகளை விடவும் வித்தியாசமானதொரு அணுகுமுறையாக மோதல் நிலைமாற்றம் காணப்படுகின்றது. அதாவது மோதலானது சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவே மோதல்களின் அடிப்படை காரணங்கள் தீர்க்கப்பட்டால் மட்டும் போதாது அத்தோடு மோதல் தீர்வுக்கான பூரணத்துவமான மாற்றத்தை ஏற்படுத்துனவாக இருக்க வேண்டும் அந்தவகையில் மோதல் தீர்வு அணுகுமுறையுடன் ஒப்பிட்டு பார்க்கையில் மோதல் நிலைமாற்றம் என்பது மிக பரந்துப்பட்ட ஒரு செயன்முறையாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.
- தனிநபர்
- உறவு ரீதியான செயற்பாடுகள்
- கட்டமைப்பு ரீதியான செயற்பாடு
- கலாச்சார ரீதியான நிலைமாற்றங்கள்
மோதல் செயற்பாட்டில் தனிமனித பங்கு என்பது முக்கியமானது காரணம் முதல் முதலில் ஏதோ ஒரு வகையில் தனிமனிதனிடத்திலையே பிரச்சினை அல்லது முரண்பாடு தோற்றம் பெருகின்றது அத்தகைய முரண்பாடே பின் மோதலாக அதுவும் குழுக்களுக்கிடையிலான மோதலாக மாறுகின்றது. அதாவது தனிமனிதனின் உணர்வுகள், எண்ணங்கள், விருப்பங்கள், கௌரவம், போன்ற விடயங்கள் அச்சுருத்தப்படும் போது தனி மனிதனும் முரண்பட எத்தனிக்கின்றான். எனவே இத்தகைய நிலைமையில் ஆரோக்கியமான அபிவிருத்தியைக் கொண்டு வருவதில் தனிமனித நிலைமாற்றம் பாரியதொரு தாக்கத்தை செலுத்தும்.
அதனைத்தொடர்ந்து மோதல் பாதிக்கும் மற்றுமொரு அம்சமாக உறவு என்பது காணப்படுகின்றது. அதாவது மோதல் தரப்பினருக்கிடையே ஒருவருக்கு ஒருவர் தங்கியிருத்தல், ஒருவர் பற்றி மற்றவரின் அபிப்பிராயம், அவர்களுக்கிடையிலான தொடர்பாடல் முறைமைகள் யாவும் தகர்க்கப்பட்டு விடுகின்றன. மோதல் நிலைமாற்றம் மோதலுக்கான அடிப்படை காரணங்கள் மீது கவனம் செலுத்தி சென்று விடுவதால் உறவுகள் மீது கவனம் செலுத்த முடியாமல் போய் விடுகின்றது. எனவே அந்த உறவுகளிடையே விரிசல் எற்படக்கூடிய தன்மையை நாம் உணரக்கூடியதாய் உள்ளது.
அதனைத் தொடர்ந்து கட்டமைப்பு ரீதியான செயற்பாட்டை நோக்கும் போது சமூக நீதி என்பதுடன் தொடர்புடையது. சமூக அநீதியின் காரணமாக மோதல் ஏற்படுகின்ற அதே சமயம் மோதலே சமூக நீதிகளை ஏற்படுத்தக்கூடும். இவை அனைத்தும் நீக்கப்பட்டு அனைத்து தரப்பினர்களுக்கும் நியாயமான நிலை உருவாகுவதையே கட்டமைப்பு நிலைமாற்றம் குறித்து நிற்கின்றது.
நலனை அடிப்படையாகக் கொண்ட சமூக மோதல் தீர்வு
மோதல்களை தீர்ப்பதில் செல்வாக்கு செலுத்தும் மற்றுமொரு காரணியாக இதனை நாம் அடையாளப்படுத்திக் கொள்ளலாம். அதாவது மோதல்களை எவ்வாறு இனங்காணுவது, அதனை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பாக தெளிவுறுத்தும் ஒரு கோட்பாடாக இக் கோட்பாடு அமைகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோட்பாட்டினை பிசர், வில்லியம் யூரி ஆகிய இரு அறிஞர்களால் முன்வைக்கப்ட்டு இன்றுவரையும் பிரபல்யமடைந்து வளர்ந்து வந்துள்ளமையை நாம் காணலாம். அதாவது மனிதன் அல்லது மனிதர்கள் மோதலை முன்னெடுப்பார்களாயின் அம்மோதல் முன்னெடுப்பதற்கான காரணம் காணப்படும். அத்தகைய காரணம் அல்லது நோக்கம் அவர்கள் அடைய விரும்பும் நலனாக அமைவது குறிப்பிடத்தக்கது. இங்கு மோதல் ஏற்படும் போது அம் மோதலை தீர்ப்பதற்கு துணைபுரியும் ஒரு நிறுவனம் மோதலுக்கான நிலைப்பாடுகளை அடையாளம் கண்டாலும் திட்டமிட்ட வகையில் அவர்களின் நலனை அடையாளப்படுத்திக் காணக்கூடிய சந்தர்ப்பம் இல்லாது போகலாம். அதாவது நலன்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தெளிவானவையாகவே அல்லது மோதற் தரப்பினால் சரியாக உணரப்பட்டவையாகவே இருக்குமென கூற முடியாது எனவே தான் நலன் அடிப்படையிலான மோதல் தீர்வுக் கோட்பாட்டின் படி மோதற் தரப்பினரின் நிலைப்பாடுகளில் கவனம் செலுத்துவதை விட அவர்களின் நலன்களில் கவனம் செலுத்தும் போது மோதல் தீர்வினை இலகுவாக
நிலைப்பாடு - ஒருவர் மட்டும் - வெற்றிதீர்வு கடினம்
அடைந்துக் கொள்ளக்கூடிய சந்தர்பபம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை கீழ்வரும் வரைபுகள் உணர்த்தி நிற்கின்றன.
நலன் - இருவரும் வெற்றி - தீர்வு சாத்தியம்
மேலே கட்டபட்ட படங்களில் முதலாவதில் ஒருவர் மட்டும் வெற்றி காண்பதால் மோதல் தீர்வானது மீண்டும் தொடரக்கூடும், ஆனால் இரண்டாம் படத்தில் இரு சாராரின் நலனும் கருத்தில் கொள்ளப்படுவதால் கடைசியில் இருவரும் வெற்றியடையக்கூடிய விதத்தில் சுழல் அமைவதால் சுமூகமான தீர்வு ஏற்பட வாய்புண்டு. மோதல்களுக்காக மட்டுமன்றி மனிதன் தமது அன்றாட வாழ்க்கையில் பேச்சு வார்த்தை என்ற எண்ணக்கருவை நேரடியாகவோ மறைமுகமாகவோ பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நிலைப்பாட்டின் வழி பேச்சுவார்த்தைக்கு போகும் போது சிறியதளவான விட்டுக்கொடுப்பும் தமக்கு தோல்வியாகவே ஒவ்வொரு தரப்பினரும் கருதுகின்றனர் இந்த நிலை நீண்டு செல்லும் மோதலுக்கு வழிவகுக்கின்றது. இத்தகைய செயற்பாட்டின் போது நலன் கருத்தில் கொள்ளப்படாமல் போகும் எனவே தமது நலன்களை இழக்கக்கூடிய சந்தர்பங்களும் உண்டு.
மேலும் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட மோதற் தீர்வின் மற்றுமொரு முக்கிய குறைபாடாக கருதுவது என்னவென்றால் மோதலின் பின் ஒரு தீர்வு கிடைத்தாலும் அது இரு தரப்பினரிடையேயும் உறவில் விரிசலை எற்படுத்தக்கூடிய ஒன்றாக அமையும். காரணம் இவ் அணுகுமுறை பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டும் தமது இலக்கை அடைந்துகொள்ள எத்தனிப்பதாகும். தமது இலக்கை அடையும் பொருட்டு விட்டுக்கொடுப்பக்களை செய்யவேண்டியிருந்தால் அதன் பொருட்டு வேறொரு தொரப்பினரை அதன் நிமித்தம் அழைப்பர் அதாவது ஒரு மூன்றாந்தரப்பினர் அத்தகைய செயற்பட்டில் சமரசத்தில் ஈடுப்படுவர். ஒவ்வொரு தரப்பும் தமது முழு ஆதிக்கத்தை பிரயோக்க முயற்சிப்பதையுமு; அதன் வழி இருதியில் ஏற்படும் இணக்கமானது எட்டப்பட்டாலும் இரு தரப்பினர்க்கு இடையில் உறவானது பாதிக்ககப்படுவதற்கு அல்லது பூரணமாக சிதைவடைவதற்கு வாய்ப்புண்டு.
நலன் அடிப்படையில் போச்சுவாரத்தை நடாத்தும் போது இரு சாராரின் நலன்களும் கருத்தில் கொண்டு இதயச்சக்தியுடன் செயற்படும் தன்மையானது ஒரு நல்ல இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் அதே நேரம் செலவு குறைந்ததாகவும் அமைவதைக் காணலாம். அதுமட்டுமின்றி செலவை குறைப்பதோடு கால வீண்விரயத்தையும் தவிர்க்க்ககூடிய சந்தர்ப்பம் இதில் அதிகமாக உண்டு. நலன் அடிப்படையில் பிரச்சினையை தீர்க்க முற்படும் போது நலன்கள் எவ்விதம் அடயாளம் காணப்படுகின்றது என்பதை நாம் அவதானித்தல் வேண்டும் ஏன்? என்ற கேள்வியை எழுப்புவதினூடாக அதனை நாம் அறிந்துக் கொள்ளலாம். நலன் ரீதியான செயற்பாட்டில் இதுவொரு முக்கிய அம்சமாகும். அதனடிப்படையில் நலன் பேணக்கூடிய நிலை என்று பார்க்கும் போது அது மோதல் தவிர்ப்பில் சாத்தியமான போக்குகளைத் தரக்கூடியதாக இருக்கும். உதாரணமாக சீன, எகிபத்,இஸ்ரேல் இடையே நலன் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை அனைத்து தரப்பினரின் நலன்களையும் காக்கக்கூடிய வகையில் அமைந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. அதாவது இவ்வாறான உடன்படிக்கையின் சாரம்சம் அமைகிறது “சீனாவின் எல்லா பகுதிகளிலும் எகிப்திய கொடி பறக்கும், ஆனால் இஸ்ரேலுக்கு அருகாமையில் எகிப்திய யுத்த தாங்கிகள் எதுவும் இருக்காது” எனகூறப்பட்டது குறிப்பிடத்தக்கது மேலும் தென்னாபிரிக்காவை பொருத்தவரையில் ஆட்சி அதிகாரத்தில் வெள்ளை இனத்தவருக்கும் கருப்பினத்தவருக்கும் இடையில் மோதலும், யுத்தமும் இடம்பெற்றது அதனடிப்படையில் மண்டேலாவிற்கும் டீ.கிளார்க்கிட்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் விவகாரம் அதிகாரம் கருப்பினத்தவருக்கும் கையளிக்கப்பட்டது. அதேசமயம் வெள்ளையர்களின் பொருளாதார கட்டுகாடு அவர்களிடத்திலையே இருக்க வேண்டுமென உத்தரவாதப்படுத்தப்பட்டது. இவ்வாறாக இருசார் நலனும் பூர்த்திசெய்யும் நிலையை நாம் காணக்கூடியதாய் இருந்தது.
இவ் நலன்போனும் செயற்பாட்டின்வழி மோதலை தவிர்பதற்கு முனைதல் என்பது எல்லா சந்தர்பங்ககளிலும் சாதியமானதொன்றாக கருத முடியாது. காரணம் சம்மந்தப்பட்ட இரு தரப்பினர்களில் ஒருவர் விடாபிடியாக நிலைபாட்டை அடிப்படையாகக் கொண்டு வாதிட்டார்கள் மோதலை தவிர்ப்பதற்காண முயற்சி என்பது வீணானதாக சென்றுவிடும். அது மட்டுமன்றி குறித்த ஒரு நலன் மட்டுமே சம்மந்தப்பட்ட தரப்புக்கு காணப்படும் என நாம் தீர்மானித்துவிட முடியாது காரணம் நலன்கள் மாற்றமடையக்கூடியதாக அமைவதும் குறிப்பிடத்தக்கது. எனவே இவ்வாறாக ஒரு மோதலில் பல தரப்பினர் கலந்துக்கொள்ளும் போது பல்வேறுபட்ட நோக்கங்கள் காணப்படுமாயின் அவை அனைத்தையும் சமரச நிலைக்கு கொண்டுவருதல் என்பது சாத்தியமற்றதொன்றாகவே தென்படுகின்றது. இத்தகைய சில குறைப்பாடுகளை உடையதாகவும் இது காணப்படுவது சுட்டிக்காட்டத்தக்கது. எனினும் மோதல் தவிர்ப்பு நடவடிக்கைக்கு இது பெரிதும் உதவக்குடிய ஒரு முறையாகவும் இன்றும் மோதல் தீர்வு கற்கை நெறியில் வளர்ச்சியடைந்து வந்துள்ளமையைக் காணலாம்.
சமாதான கட்டுமான மட்டங்கள்
மோதலில் தவிர்ப்பு கற்கைநெறியில் சமாதானம் தொடர்பான எண்ணக்கருவும் மிக பிரபல்யமான ஒன்றாக உள்ளது அந்தவகையில் மோதலின் பின் குறிப்பிட்ட தரப்பினரிடையே சமாதானத்தை கட்டியெழுப்புதல் என்பது இலகுவானதொரு காரியமன்று. சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும், அதனைக் கட்டியெழுப்புவதற்கும் இடையே வேறுபாடு காணப்படுகின்றது. இத்தகைய நடவடிக்கையின்போது முக்கியமான மூன்று விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் முன்னால் செயலாளர் பூட்ரோஸ் காலி என்பவர் கீழ்வரும் விடயங்களை குறிப்பிடுகின்றார்.
- சமாதானத்தை ஏற்படுத்தல்
- சமாதானம் காத்தல்
- சமாதானத்தை கட்டியெழுப்புதல்
அதனடிப்படையில் சமாதானத்தை ஏற்படுத்தல் என்பது மோதலின் வாயிலாக அதற்கான அடிப்ப்படை பிரச்சினையை இனங்கண்டுக் கொண்டு அதனை நிவர்த்தி செய்வதோடு, அதற்கான நிரந்தரமானதொரு தீர்வை மேற்கொள்ள எடுக்கும் ஒரு செயன்முறையாகும். இது உயர்மட்ட அரசியல், ராஜதந்திர நடவடிக்கைகளின் வழி ஏற்படுத்தக்கூடிய விடயமாக உள்ளது. எனினும் இவ் முறையானது சமாதானத்தை நீண்டகாலத்தில் தக்க வைத்துக்கொள்வதற்கான அம்சங்களை உள்ளடக்கியிருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட சமாதானத்தை காத்தல் என்பது ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் செயற்பாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக அமையும். அடையப்பட்ட உடன்படிக்கைகளை கண்காணித்தல், நடைமுறைப்படுத்தல், நம்பிக்கைகளை கட்டியெழுப்புதல் முதலியன இதில் கையாளப்படும் தந்திரோபாயங்களாகும். இவற்றினை அடைந்துகொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனத்திற்கு வலுபிரயோகமானது வழங்கப்பட்டிருக்கும். அவர்கள் எச்சந்தர்பத்திலும் குறித்த தரப்பினரோடு கலந்துறையாடவோ குறைகளையும் பிரச்சினைகளையும் கண்டறியவோ முடியும்.
அதனைத் தொடர்ந்து சமாதான கட்டுமானம் எனும்போது இது மிக ஆழமான, பரந்துபட்ட நீண்டகால நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டமைந்ததொரு தந்திரோபயமாகும். சமாதான கட்டுமானங்கள் மோதலுக்கான அடிப்படை காரணங்களை தீர்த்துக் கொள்வது மட்டுமன்றி சமூகத்தில் காணப்படும் பொதுவான அநீதிகளை இல்லாதொழித்தல். தரப்பினரின் மனோபாவங்களை மாற்றுதல், அச்சங்களை இல்லாதொழித்தல், அடிப்படை தேவைகளை உத்தரவாதப்படுத்தல் முதலிய பல்வேறுபட்ட விடயங்களை இது உள்ளடக்கியிருக்கும். சுருங்கக் கூறின் இது நீண்டகாலத்தில் நிலைத்திருக்கக்கூடிய சமாதானத்தை கட்டியெழுப்புவது இதன் பிரதான இலக்காக காணப்படுகின்றது. எனவே சமாதான கட்டுமான செயற்பாட்டின்போது பல்வேறு தரப்பினர் உள்வாங்கப்பட்டிருப்பது அவசியமானதொன்றாகும். அந்தவகையில் மேலும் இவர்கள் அனைவரும் ஒரேவகையாக சிந்திக்கக்கூடியவர்களா என பார்ப்பதும் அவசியமானது காரணம் தந்திரோபாயங்களை பயன்படுத்தும் போது அவற்றில் குலறுபடிகள் ஏற்பட்டுவிடும். எனவே ஒரு சமூகத்தை பல்வேறு மட்டங்களில் அடையாளங்கண்டு அதற்கேற்ப செயற்பட வேண்டியது அவசியமானதொன்றாகக் கருதப்படுகின்றது.
மும்மட்ட செயற்பாட்டாளர்கள்
அந்தவகையில் முதலில் ஜோன் போல் லெடரக் என்பவரால் மேற்கொள்ளாட்ட பாகுபாடு பயனுடையதாகும். இவரது கருத்தின் படி சமுகத் தலைமைத்துவத்தை முன்று மட்டங்களை கொன்ட ஒரு பிரமிட்டாக கருதுவது பயனுடையது ஆகும் இம் முன்று மட்டங்களும் உயர் மட்டங்கலும் இடைமட்டங்களும் சமூக மட்டங்களைக் கொண்ட ஒரு உயர் ஒழுங்கமைப்பில் அமைவதைக் காணலாம் அவையாவன
இது அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவத் தலைவர்களை உள்ளடக்கியதாக இருக்கும். குறிப்பாக உள்ளுர் இனக்கலவரங்களின் போது சிறுபான்மை குழுக்களை பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய இராணுவத் தலைவர்கள் முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம். இவர்களே மோதல் முறைமையின் உச்சகட்டத்தில் இருப்பதோடு எண்ணிக்கையில் குறைவாகவும் காணப்படுவர். இவர்கள் அரசியல் மற்றும் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் கொண்டிருப்பதால் இவர்களின் பங்கானது மோதல் தவிர்ப்பில் முக்கியமானதொரு பங்காகும். உதாரணமாக சமாதான கட்டுமான பணியொன்று இருதி உடன்படிக்கையொன்றிற்கு வருமாயின் அதனை பரீசிலித்து அதற்கு அங்கிகாரம் வழங்கி ஒப்பமிடுவது இம்மட்டத்தில் உள்ளவர்களாகவே காணப்படுவர்.
மேலும் இவ்மட்டத்தில் தீர்மானம் எடுத்தலில் பல பிரச்சினைகள் தோன்றும் காரணம் இதில் உள்ளவர்கள் தாம் அனுப்பட்ட நிறுவனத்தின் சார்பான இருக்கமான கொள்கைகளோடு வாதிடுவதால் உடனடி சமரசத்திற்கு வருவதும் கஸ்டமானதொரு நிகழ்வாகும். அதனாலயே இம்மட்டமானது நெகிழ்ச்சிதன்மை குறைந்ததாக காணப்படுகின்றது. அந்தவகையில் இம்மட்டத்தில் முக்கியமாக ஏற்படுத்தக்கூடிய முக்கியமான செயற்பாடு சமாதான பேச்சுவார்ததையாகும். எனவே இங்கு மூன்றாந் தரப்பினர் பங்கு கொள்ளவேண்டிய தேவையும் இருப்பது சுட்டிக்காட்டத்தக்கது. இவை படிப்படியாக தமது செயற்பாடுகளை நகர்த்த வேண்டியது அவசியமானதாக உள்ளது.
மேலும் இவ்மட்டத்தில் தீர்மானம் எடுத்தலில் பல பிரச்சினைகள் தோன்றும் காரணம் இதில் உள்ளவர்கள் தாம் அனுப்பட்ட நிறுவனத்தின் சார்பான இருக்கமான கொள்கைகளோடு வாதிடுவதால் உடனடி சமரசத்திற்கு வருவதும் கஸ்டமானதொரு நிகழ்வாகும். அதனாலயே இம்மட்டமானது நெகிழ்ச்சிதன்மை குறைந்ததாக காணப்படுகின்றது. அந்தவகையில் இம்மட்டத்தில் முக்கியமாக ஏற்படுத்தக்கூடிய முக்கியமான செயற்பாடு சமாதான பேச்சுவார்ததையாகும். எனவே இங்கு மூன்றாந் தரப்பினர் பங்கு கொள்ளவேண்டிய தேவையும் இருப்பது சுட்டிக்காட்டத்தக்கது. இவை படிப்படியாக தமது செயற்பாடுகளை நகர்த்த வேண்டியது அவசியமானதாக உள்ளது.
இடைமட்டம்
இது சமூகத்தில முக்கியத்துவம் வாய்ந்த நபர்களை உள்ளடக்கியதாக காணப்படும். அதாவது துறைசார்ந்த வல்லுணர்கள், கல்விமான்கள், வர்த்தக பிரமுகர்கள், சமயத்தலைவர்கள் முதலியோரை உள்ளடக்கியது. இவர்களின் செய்பாடானது உயர்மட்ட தரப்பினருக்கும் சிவில் சமூகத்திற்கும் இடையே பாலமாக இருப்பதாகும். இவர்கள் சமூகத்தில் நன்மதிப்பும், கௌரவமும் பெற்றிருப்பதால் உயர்மட்ட தலைவர்களுடன் தொடர்புடையவர்களாக இருப்பர். அதே நேரம் அவர்களுக்கு ஏற்றவகையில் முற்று முழுதாக நடப்பதுமில்லை அதே போன்றே கீழ்மட்ட மக்களிடத்தும் இவர்களது தொடர்பானது காணப்படும்.
மேலும் இம்மட்டத்தில் மேற்கொள்ளப்படும் மற்றுமொரு முக்கிய விடயம் பிரச்சினையை தீர்ப்பதற்கான பயிற்சிகளை வழங்குதல் ஆகும். இத்தகைய செயற்பாடானது இன்று மோதல் தீர்வு முறையில் முக்கிமானதாக காணப்படுகின்றது. இப்பயிற்சி பட்டறையின்போது கருத்துக்கள் சுதந்திரமாக பகிரப்படுவதால் சமாதானத்தை நோக்கி பயனிப்பதற்கு இலகுவாக இருக்கும். மேலும் இதன் போது சமாதான தீர்வு பயிற்சிகள், சமாதான குழுக்கள் என்பன இவ் மட்டத்தி;ல் முன்னெடுக்கபடும் ஏனைய நடவடிக்கைககளாகும்.
சமூக மட்டம்
லொடராக் கூறியது போல கடைசி நிலை மட்டத்தில் அமைந்திருக்கும் சமூகத்தை குறிப்பதாக இது அமைகின்றது. இது சமூக மட்ட தலைமைத்துவம் என கருதப்படும். இது சாதரான மக்களை குறித்து நிற்கின்றது. இவர்களது உடனடித் தேவை வேறுபட்டதாக காணப்பட்டாலும் சமாதானத்தை நோக்கி அக்கறை அதிகமாக காணப்படும். சமபாதான நடவடிக்கைகள் அனைத்திலும் இவர்களது கரிசனை மிக முக்கியமானதாக காணப்படும்
லொடராக் கூறியது போல கடைசி நிலை மட்டத்தில் அமைந்திருக்கும் சமூகத்தை குறிப்பதாக இது அமைகின்றது. இது சமூக மட்ட தலைமைத்துவம் என கருதப்படும். இது சாதரான மக்களை குறித்து நிற்கின்றது. இவர்களது உடனடித் தேவை வேறுபட்டதாக காணப்பட்டாலும் சமாதானத்தை நோக்கி அக்கறை அதிகமாக காணப்படும். சமபாதான நடவடிக்கைகள் அனைத்திலும் இவர்களது கரிசனை மிக முக்கியமானதாக காணப்படும்
எனவே சமாதானக் கல்வி, மோதற் தீர்வு பயிற்சிகள், உள்ளுர் சமாதான குழுக்கள் அமைத்தல் முதலியன இம்மட்டத்தில ஏற்படுத்தக்கூடிய சில நடவடிக்கைகள் ஆகும்.
சமாதானமாக செயற்பாடு அடையப்பட வேண்டுமாயின் அது மேலிருந்து கீழாகவோ அல்லது கீழிருந்து மேலாகவோ ஒழங்கான முறையில் செயற்பட்டாலே வெற்றிக்கொள்ள முடியும். எனவே தனித்தனியே ஒவ்வொரு மட்டங்களினூடாக செய்வதிலும் பார்க்க இவ்விரண்டு முறைகளையும் இனைத்து செய்யக்கூடிய ஒரு முறையை பின்பற்றினால் அது வெற்றியைத் தரக்கூடியதாக அமையும்.
பல்மட்ட கட்டமைப்பு
சமாதான கட்டுமானங்களுக்கு பங்களிப்பு செய்யக்கூடியனவாக லுவிஸ் டயமனட் மற்றும்ஜோன் மெக் டொனல்ட் ஆகியோர் சில கட்டுமாணங்களை அறிமுக்படுத்தியிருப்பதும் அவை மோதல் தீர்வு கற்கை நெறியில் முக்கியத்துவம் பெற்றுவிளங்குவதும் குறிப்பிடத்தக்கது. அவையாவன
1. அரசாங்கம்
2. அரசசார்பற்ற உயர்மட்டம்
3. வர்த்தகம்
4. தனிமனித முயற்சி
5. கல்வி,ஆராய்ச்சி,பயிற்சி
6. பரிந்துறை செயற்பாடுகள்
7. மதம்
8. நிதிவழங்கள்
9. ஊடகங்கள்
இவற்றை கருத்தில் கொண்டு இவைபற்றிய விடயங்களும் சமாதான கட்டுமானத்திற்கு பெரிதும் பங்களிப்பை செய்வதால் அவை தொடர்பாக சிறு விளக்கத்தை நாம் கீழே நோக்கிச் செல்லலாம்.
அரசாங்கம் இங்கு உத்தியோக பூர்வமான ராஜதந்திரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. அடையப்படும் எந்நவொரு சமாதமானமும் அரசாங்கத்தின் அங்கிகாரத்துடனயே நிறுவனமயப்பபடுத்தப் பட முடியும்.
1. அரசாங்கம்
2. அரசசார்பற்ற உயர்மட்டம்
3. வர்த்தகம்
4. தனிமனித முயற்சி
5. கல்வி,ஆராய்ச்சி,பயிற்சி
6. பரிந்துறை செயற்பாடுகள்
7. மதம்
8. நிதிவழங்கள்
9. ஊடகங்கள்
இவற்றை கருத்தில் கொண்டு இவைபற்றிய விடயங்களும் சமாதான கட்டுமானத்திற்கு பெரிதும் பங்களிப்பை செய்வதால் அவை தொடர்பாக சிறு விளக்கத்தை நாம் கீழே நோக்கிச் செல்லலாம்.
அரசாங்கம் இங்கு உத்தியோக பூர்வமான ராஜதந்திரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. அடையப்படும் எந்நவொரு சமாதமானமும் அரசாங்கத்தின் அங்கிகாரத்துடனயே நிறுவனமயப்பபடுத்தப் பட முடியும்.
அரசசார்பற்ற உயர் மட்டம்
இது ஒழுங்கமைக்கப்ட்ட தொடர்பாடல் கருத்து பரிமாற்றம் போன்ற செயற்பாடுகளினூடாக சமாதான செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். அரசசார்பற்ற நிறுவன தலைவர்கள் பிரசித்தி பெற்ற கல்வியலாளர்கள், ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் போன்றோர் இம்மட்டத்தில் செய்படுவது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகம்
வெறுமனே இலாப நோக்கத்திற்காக மட்டுமன்றி மாறாக சமூக அக்கறையுடன் அல்லது சமூக பொறுப்பு செயற்படக்கூடிய சில நிறுவனங்கள் செயற்படவே செய்கின்றன. இவை சமாதான எழுச்சிக்கு உதவுகின்றன. இவை பொருளாதார பலத்தை கொண்டிருப்பதால் சமாதான முன்னேற்றத்தில் பெரிதாக உதவ நேரிடும்.
தனிமனித முயற்சிகள்
தனிநபர்களும் சமூகமும் இவ் சமாதானத்தை கட்டியெழுப்புவதையே நோக்கமாக கொண்டு செயற்படுகின்றன. ஒவ்வொரு தனி நபரினதும் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைகின்றது. இவ்வாறான தனிமனித பஙகேற்பானது “பிரஜைகள் ராஜதந்திரம் என அழைக்கப்படும். சமாதானமானது தனிமனிதனிடத்திலிருந்தே ஆரம்பிக்க்ப்பட வேண்டியதொன்றாகும்.
கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி
அதாவது சமாதான செயன்முறையில் ஈடுப்படும் அனைத்து தரப்பினரும் சமாதான கல்வி, மோதலின் பல்வேறுபட்ட பரிணாமங்களை அறிந்திருத்தல், புதிய மோதல் தீர்வு நுட்பங்களை அபிவிருத்தி செய்தல் முதலியன கட்டுமான செயன்முறையின் அங்கங்களாகும் எனவே இவை தொடர்பான அறிவையும் பயிற்சியையும் அனைவருக்கும் வழங்குதல் கட்டாயமானது.
அதாவது சமாதான செயன்முறையில் ஈடுப்படும் அனைத்து தரப்பினரும் சமாதான கல்வி, மோதலின் பல்வேறுபட்ட பரிணாமங்களை அறிந்திருத்தல், புதிய மோதல் தீர்வு நுட்பங்களை அபிவிருத்தி செய்தல் முதலியன கட்டுமான செயன்முறையின் அங்கங்களாகும் எனவே இவை தொடர்பான அறிவையும் பயிற்சியையும் அனைவருக்கும் வழங்குதல் கட்டாயமானது.
பரிந்துரை செயற்பாடுகள்
இவை சமூக நீதியை உறுதி செய்வதன் மூலம் சமாதானத்தை அடைய முயற்சிப்பதை குறித்து நிற்கின்றது. காரணம் சமூக மாற்றறமின்றி சமாதானத்தை அடைந்துக்கொள்ள முடியாது. இதுவும் ஒருவகையில் பிரஜைகள் ராஜதந்திரமாகும்.
மதம் எல்லா மதங்களும் சமாதானத்தையும் நல் ஒழுக்கத்தையும், புரிந்துணர்வையும் போதிப்பனவாகவே உள்ளன. அதனடிப்படையில் சமாதான கட்டுமானத்திற்கு இவை அனைத்துமே பெரிதும் துனைப்புரிவது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். மதங்களுக்கு மக்களை கட்டுப்படுத்தக்கூடிய இயலுமை இருக்கின்ற தன்மையானது மக்களை மிக விரைவாக சமாதான நடவடிக்கையில் ஈடுப்படுத்த காரணமாக அமைகின்றது.
நிதிவழங்கள்
நிதிவழங்கள்
சமாதான கட்டுமான பணியில் நிதி வழங்கள் முக்கிமானதொரு இடத்தை பிடித்துள்ளது. பொருளாதார வளமுள்ள நாடுகளும், சமூகங்களும் உலக சமாதானத்தின் பொருட்டு பல்வேறு வழிகளில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அந்தவகையில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஏற்படும் முரண்பாடுகளை களைவதற்கு இவ் நிதியுதவிகள் பெரிதும் உதவுவனவாக அமைகின்றன.
ஊடகங்கள்
எதையும் ஆக்கவும் அழிக்கவும் கூடிய சக்தி ஊடகங்களுக்கே உண்டு அவ்வாறே சமாதான செயன்முறையும் ஆகும். பெருமளவு சமாதான விரோதங்களுக்கு மத்தியிலும் இன்று பல ஊடகங்கள் சமாதானத்தின் பொருட்டு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதைக் காணலாம். இவ் ஊடகங்கள் சமாதானம் பற்றிய எண்ணக்கருக்களை மக்களுக்கு எடுத்துச்செல்லும் அதே நேரம் மக்களது எண்ணம் சிந்தனை எத்தகையது என்பதை ஆட்சி அதிகாரத்தில் இருப்போரின் கவணத்திற்கு எடுத்துச் செல்வது குறிப்பிடதக்கதொரு விடயமாகும். எனவே இத்தகைய ஊடகங்களின் பங்களிப்பை சமாதான தீர்வு தொடர்பான நடவடிக்கையயின்போது அபிவிருத்தி செய்ய வேண்டியது கட்டாயக் கடமையாகும்.
மேற்கூறப்பட்ட அம்சங்கள் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் அவற்றில் வெற்றிகரமான பாதையை நோக்கி பயணிப்பதிலும் பெரும் பங்குவகிப்பனவாக உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதொரு விடயமாகும்.
முடிவுரை
இன்று உலக நாடுகளை பொருத்தவரையில் ஏதோ ஒருவகையில் மோதலக்கு உட்பட்டவண்ணமாகவே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். எனவே அவற்றை எவ்வாறு கட்டுபடுத்துவது தீர்பது என்பது சவாலான காரியமொன்றாகும். எனவே அதன் பொருட்டு மோதல் தீரவு கற்கை நெறியனது இன்று அறிமுகப்படுத்தப்பட்டு அது வளர்ச்சியடைந்து வந்திருந்தாலும் அது தொடர்பான விடயங்கள் மோதலோடு தோடர்புடைய நேரடியான மக்களுக்கு சென்றடைந்தள்ளதா என்பது கேள்விக்குறியானதொரு விடயமாக உள்ளது. எனவே அதனை எல்லா பரந்துபட்ட மட்டங்களில் வாழும் மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் கற்பிக்கப்படுமாக இருந்தால் வரவேற்கத்தக்க விடயமாகும். காரணம் நாளுக்கு நாள் மோதலுக்கு அடிப்படை காரணமாக விளங்கும் காரணங்கள் நாளுக்கு நாள் வேறுபட்டதாகவும் வித்தியாசமானதாகவும் உறுவாகுவதை நாம் காணக்கூடியதாய் உள்ளது. எனினும் மோதல் தீர்வு கற்கைநெறியின் வளர்ச்சியானது இன்று ஆரம்ப காலங்களில் காணப்பட்ட மோதலின் தீவிரத்தன்மையை விடவும் அதன் தாக்கத்தை குறைப்பதற்கு பெறும் பங்களித்திருப்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது எனலாம்.
இன்று உலக நாடுகளை பொருத்தவரையில் ஏதோ ஒருவகையில் மோதலக்கு உட்பட்டவண்ணமாகவே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். எனவே அவற்றை எவ்வாறு கட்டுபடுத்துவது தீர்பது என்பது சவாலான காரியமொன்றாகும். எனவே அதன் பொருட்டு மோதல் தீரவு கற்கை நெறியனது இன்று அறிமுகப்படுத்தப்பட்டு அது வளர்ச்சியடைந்து வந்திருந்தாலும் அது தொடர்பான விடயங்கள் மோதலோடு தோடர்புடைய நேரடியான மக்களுக்கு சென்றடைந்தள்ளதா என்பது கேள்விக்குறியானதொரு விடயமாக உள்ளது. எனவே அதனை எல்லா பரந்துபட்ட மட்டங்களில் வாழும் மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் கற்பிக்கப்படுமாக இருந்தால் வரவேற்கத்தக்க விடயமாகும். காரணம் நாளுக்கு நாள் மோதலுக்கு அடிப்படை காரணமாக விளங்கும் காரணங்கள் நாளுக்கு நாள் வேறுபட்டதாகவும் வித்தியாசமானதாகவும் உறுவாகுவதை நாம் காணக்கூடியதாய் உள்ளது. எனினும் மோதல் தீர்வு கற்கைநெறியின் வளர்ச்சியானது இன்று ஆரம்ப காலங்களில் காணப்பட்ட மோதலின் தீவிரத்தன்மையை விடவும் அதன் தாக்கத்தை குறைப்பதற்கு பெறும் பங்களித்திருப்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது எனலாம்.
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்