01. ஆய்வுத் தலைப்பு:-
“அரச கரும மொழிக்கொள்கை அமுலாக்கமும் மலையக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளும் “
விஷேட ஆய்வு:- அம்பகமூவ கொரளை பிரதேசம்
02. ஆய்வு அறிமுகம்:-
மொழி என்பது சமுத்தில் மக்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளும் ஓர் பரிமாற்ற ஊடகமாகும். மொழியானது தொடர்பாடலுக்கும் அறிவைப் பெருக்குவதற்குமான கருவியாகும். ஒரு நாட்டில் வாழும் மக்களின் பிரதானமாக தொடர்பாடல் மையம் மொழியாகும். இயற்கையாகவே மனிதன் உரிமையுடையவனாக பிறக்கின்றான். இவ்வாறே மொழியுரிமையும் அவனோடு பின்னிப்பிணைந்ததே வந்துள்ளது. ஒரு தனிமனிதனின் ஆளுமையை விருத்தி செய்ய மொழி ஓர் கருவியாக செயற்படுகின்றது.
ஓரு நாட்டில் அனைத்து மொழிபேசும் மக்களினதும் உரிமைகளை கவனத்தில் கொண்டு அங்கு ஒரு மொழிக்கொள்கையினை வகுப்பது மிகவும் முக்கியமானதாகும். மொழியினை நாம் வெறும் கருத்துப் பரிமாறும் ஊடகமாக மட்டும் அடையாளப்படுத்தாமல் அதனை ஒர் இனத்தின் அடையாளத்தை வெளிகாட்டும் கருவியாகவும் அடையாளப்படுத்த முனைய வேண்டும். பல்லினச் சமுகத் தன்மை கொண்ட ஒரு நாட்டில் மொழிக் கொள்கை என்பது தேசிய ஒருமைப்பாட்டிற்கான தூணாகும். அது ஒழுங்காக வகுக்கப்படாவிடத்து நாட்டின் ஒருமைப்பாட்டினை கட்டியெழுப்ப முடியாது என்பதற்கு உலக வரலாறுகளும் கடந்த தசாப்பங்களில் இலங்கையில் இடம்பெற்ற இனப்பிரச்சினையும் எடுத்துக்காடுகின்றன .
இலங்கையை பொறுத்தமட்டில் நான்கு பிரதான தனித்துவமான அடையாளங்களை உடைய மக்கள் வாழ்கின்ற ஓர் நாடாகும். இலங்கையில் மொழிக்கொள்கை அமுலாக்கத்தினை நோக்கும் போது 1945 இல் இருந்து 1956 வரை டீ..எஸ்.சேனநாயக்கவின் அரசு ஆங்கிலேய காலனித்துவத்தின் ஆட்சியில்; இருந்து சற்றும் மாறுபடாமல், ஆட்சி நடத்திச் சென்றது. ஆங்கில படிப்பு பெற்ற மேலை நாட்டைச் சேர்ந்த சிறிய மேல் வர்க்க மக்களிடம் அதிகாரம் இருந்தது. இவர்கள் சட்டசபை மற்றும் அரச நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தினர். ஆங்கிலம் அரச மொழியாக இருந்து வந்தது. ஆங்கிலம் தெரியாத பெரும்பான்மையினரான மக்களுக்கு எவ்வித இலாபங்களையும் பெற்று தரவில்லை..
19ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில் மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இடம்பெற்ற பௌத்த மத மறுமலர்ச்சி பௌத்த மதத்தினரிடையே புதிய அமைப்பு வடிவங்களை ஊக்குவித்தது. இதனால் பௌத்தமதம் சிங்களவர்களது மொழி கலாசாரம் இவற்றிடையே உள்ள உறவு பற்றிய புதிய கருத்துக்களை தோற்றுவித்தது. மிகவும் தர்க்க ரீதியாக நியாயப்படுத்தப்பட்டு பௌத்தமதம் வளர்ந்தது. இதனைத் தொடர்ந்து சிங்கள கல்வி பெற்ற கிராம மேல் வர்க்கத்தினால் தான் தேசிய உனர்வை கட்டயெழுப்பி 1956 ஆம் வருடம் பொதுத் தேர்தலில் பண்டார நாயக்காவினால் தலைமைத் தாங்கப்பட்ட 'மகாஜன எக்சத் பெரமுன' வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தனர். 1966இ 33 ஆம் இலக்க அரசகரும மொழிச்சட்டம் கொண்டுவரப்பட்டது. 1958ஆம் ஆண்டு தமிழ் மொழி விசேட ஏற்;பாட்டுச் சட்டம் இயற்றப்பட்டது. எனினும் இச்சட்டத்தை செயல் முறையில் அமுல்படுத்துவதற்கான விதிமுறைகள் 1966 வரை தயாரிக்கப்படவில்லை. 1972ம் ஆண்டு அரசியல் சாசனத்தில் மதம், இனம், சாதி மற்றும் பாலின் அடிப்படையில் பொதுத்துறை பதவி வழங்கப்படுவது தடை செய்யப்படாது எனப்பட்டது. ஆனால்; 1931 ஆம் ஆண்டு டொனமூர் ஏற்பாடு பாரபட்சம் காட்டும் எந்தச் சட்டம் இயற்றப்படுவதை தடை செய்தது. (29 (20) 2 ஆம் பிரிவு ) இதை விட 1972 ஆம் சாசனம் வலுக்குன்றியே காணப்பட்டது. 1972 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு அத்தியாயம் 3 இல் இடம் பெறும் மொழி தொடர்பான ஏற்பாடுகளும் 1978 ஆம் ஆண்டு யாப்பின் மீதான திருத்தத்தின் உறுப்புரை 2(1987) 1978 யாப்பின் 16ஆம் திருத்தச் சட்டம் 1988 இல் கொண்டுவரப்பட்டது.
1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் அத்தியாயம் 4 ஆனது மொழி என்ற தலைப்பின் கீழ் மொழிக் கொள்கைகள் பற்றிய ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தமும் 16வது திருத்தமும் அரசியலமைப்பில் தமிழ் மொழியின் அந்தஸ்த்து தொடர்பான முன்னேற்றமான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தியது. தமிழ் மொழியானது அரச கரும மொழி. தேசிய மொழி, பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளுரதிகாரசபை மொழி, கல்வி மொழி, நிர்வாக மொழி, சட்டவாக்க மொழி, நீதிமன்ற மொழி ஆகியன அரசியலமைப்பு அந்தஸ்த்துக்களைக் கொண்டுள்ளது. எனவே இவ்வாறு வளர்ச்சிப் பெற்று வந்த அரச கரும மொழிக் கொள்கைகள் எவ்வளவு தூரம் மலையக மக்களுக்கு பயன்படுகிறது என்பது தொடர்பான இவ்வாய்வு அம்பகமூவ கொரளை பிரதேச செயலகத்தில் மலையக மக்கள் அரசகரும மொழிக் கொள்கை அமுலாக்கத்தின் விளைவாக எதிர் நோக்கும் பிரச்சினைகள், சவால்களை பற்றிய விசேட ஆய்வாக இவ்வாய்வு அமைகிறது.
03. ஆய்வின் கோட்பாட்டுத்தளம்:-
இவ் அத்தியாயமானது கோட்பாடுகளையும் எண்ணக்கருக்களையும் அணுகு முறைகளையும் உள்ளடக்கியதாகும். மொழிக் கொள்கை பற்றி ஆய்வு செய்கையில் கோட்பாடுகளை ஆய்வு செய்வதன் மூலமே மொழிக் கொள்கையின் தன்மை, அதன் வகைப்பாடு, எத்தகைய கொள்கைகளை கையாள வேண்டும் போன்ற விடயங்களுடன் தொடர்புப்படுத்தி ஆய்வு செய்யப்படுகின்றது. அதற்காகவே இவ் ஆய்வுக்காக இங்கு மொழிக்கொள்கைக் கோட்பாடு அடையாளப்படுத்தப்படுகிறது. அத்துடன் இவ் அத்தியாயத்தினூடாக பல மொழிக்கோட்பாடுகள் தொடர்பாக ஆய்வுச் செய்யப்பட்டாலும் ஆய்வுடன் தொடர்புப்பட்டது என்றவகையில் பன்மொழிக் கொள்கை கோட்பாடு பொருத்தமுடையதாகின்றது.அதாவது அம்பகமூவ கொரளை பிரதேச செயலகத்தில் “இருமொழிகளிலும் சேவைகளை வழங்கும் நிறுவனம் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதுடன் இங்கு இருமொழி சார்ந்த மக்களும் நாளாந்தம் சேவைப்பெற வருவதன் பயனாக இவ் ஆய்வு பன்மொழிக்கோட்பாட்டின் கீழ் இருமொழிக்கொள்கை, மும்மொழிக்கொள்கை, பன்மொழிக்கொள்கை முதலிய துணைக்கோட்பாடுகளையும் ஆதாரமாகக் கொண்டு மொழிக்கொள்கை அமுலாக்கம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பில் ஆராய்கின்றது.
3.1.2 மொழிக் கொள்கை
ஒரு மனிதனின் அல்லது இனக்குழுவினது கலாசாரம், இன அடையாளத்தை மொழியின் மூலமாகவே வெளிப்படுத்த முடியும். அதனால் ஒன்றுக்கு மேற்பட்ட இனக் குழுக்கள் வாழும் ஒரு நாட்டில் அநேகமாக மொழித் தொடர்பான கொள்கை ஒன்று காணப்படும். பல நாடுகள் அதனது அரசியல் அமைப்புச் சட்டத்தில் மொழித் தொடர்பான ஏற்பாடுகளை கொண்டுள்ளமையினைக் காணலாம். உதாரணமாக இலங்கையின் 1978ம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியல் அமைப்பின் ஐஏ அத்தியாயம் மொழித் தொடர்பான ஏற்பாட்டைக் கொண்டுள்ளது. அதுபோல இந்தியாவிலும் அதனது அரசியல் அமைப்பில் மொழிதொடர்பான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பொதுவாக மொழிக்கொள்கை என்பது மொழிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் தணிப்பதற்கும் ஏதுவான வகையில் மொழிகளின் நடைமுறைக்கும் பயன்பாட்டுக்கும் பொருத்தமான ஏற்பாடுகளை வகுத்து நடைமுறைப்படுத்தலே மொழிக் கொள்கையாகும். மொழிக் கொள்கை தவறாக அமையும் போது அது பெரும் பிரச்சினைகளுக்கு இட்டுச்செல்லலாம். இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முரண்பாடுகள் அதற்கு சான்றாகும். இதனால் இன்று அநேக நாடுகள் பன்மொழியை பாதுகாக்கும் பண்புடனேயே சட்டங்களை அமைக்க வருகின்றன. குறிப்பாக இன்று வளர்முக நாடுகள் மட்டுமல்லாது வளர்ந்த நாடுகளும் கூட இவற்றுக்கேற்ற வகையிலேயே சட்டங்களை உருவாக்க முனைவதையும் காணலாம்.

3.1.2.1 மொழிக்கொள்கைகளின் வகைகள்
- இன்று நடைமுறையில் பல்வேறுப்பட்ட மொழிக் கொள்கைகள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. பொதுவாக அவற்றை பின்வருமாறு அடையாளப்படுத்த முடியும்.
- தன்வயமாக்கல் கொள்கை( Assimilation Policy)
- தலையிடாக் கொள்கை (Non-Intervention Policy)
- வேறுபடுத்தப்பட்ட சட்ட ரீதியான சாசனக் கொள்கை (Differentiated Legal Statute Policy)
- தனிமொழிவாத கொள்கை (Policy of Unilingualism)
- பன்மொழிக் கொள்கை (Multilingualism)
- கலப்பு மொழிக் கொள்கை (Mixed Linguistic policies) போன்ற மொழிக் கொள்கைகள் இன்று நடைமுறையில் காணப்படுகின்றன
3.1.2.2 தன்வயமாக்கல் கொள்கை ( Assimilation Policy)
ஒரு மொழிக் குழுவையோ அல்லது பல குழுக்களையோ அவற்றின் பருமனை குறைப்பதற்கான ஏற்பாடுகளை கொண்ட கொள்கையே தன்வயமாக்கல் கொள்கை ஆகும். இக்கொள்கையானது வியட்நாம், ஈராக், ஈரான், தாய்லாந்து, பிரான்ஸ், மியன்மார் போன்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இக்கொள்கையின் மூலம் பல மொழிகளின் அளவு வெகுவாக கட்டுப்படுத்தப்படும்.
3.1.2.3 தலையிடாக் கொள்கை (Non-Intervention Policy)
பிரதான மொழிக்குழுவுக்கும் சுயமாக வளர்ச்சியுறும் சிறுபான்மை மொழிக் குழுக்களுக்குமிடையில் சாதாரண தொடர்பினை அனுமதிப்பதே தலையிடாக் கொள்கை ஆகும். இக்கொள்கையானது அங்கோலா. ஆஜேன்டீனா, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், சிலி, கொங்கோ ஜனநாயக குடியரசு, கியூபா, ஈக்வடோர், கானா, ஜெர்மனி, கயானா, மாலி, சவுதிஅரேபியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
3.1.2.4 வேறுபடுத்தப்பட்ட சட்ட ரீதியான சாசனக் கொள்கை (Differentiated Legal Statute Policy)
ஓர் அரசினுள் பல்வேறு மொழிகளின் இருப்பை அனுமதிப்பதை இலக்காக கொண்டு ஒரு குறிப்பிட்ட மொழிக்கு வேறுப்பட்ட சட்ட அந்தஸ்தை வழங்கும் கொள்கையே இதுவாகும். அதாவது ஒரு நாட்டில் எத்தனை மொழிகள் இருந்தாலும் அவற்றில் ஒரு குறிப்பிட்ட மொழிக்கு விசேட தன்மையை சட்ட ரீதியில் வழங்கும் கொள்கை முறையாக அடையாளப்படுத்தலாம். உலகில் இம்முறைமையானது அல்போனியா, பொஸ்னியா, பல்கோனியா, கலிபோனியா, சீனா, ஸ்பெயின், குவாட்டமாலா, ஒற்றாவியோ, நெதர்லாந்து, நியு மெக்சிக்கோ, போர்த்துக்கள், சுவிடன் போன்ற நாடுகளில் காணமுடிகிறது
3.1.2.5 தனி மொழிவாத கொள்கை (Policy of Unilingualism)
அரசகரும மொழியாக ஒரு குறிப்பிட்ட மொழியை மட்டும் ஆதரிக்கும் கொள்கையே தனிமொழிவாதக் கொள்கை என்று அழைக்கப்படும். ஆனால் இதன் பொருள் அங்கு ஒரு மொழிமட்டுமே காணப்படும் என்பதல்ல. அதாவது பல சிறுபான்மை மொழிகளும் காணப்படும். ஆனால் ஒரு குறிப்பிட்ட மொழிக்கு மட்டுமே அங்கிகாரம் வழங்கப்பட்டிருக்கும். அல்ஜிரியா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, லித்துவேனியா, வட கொரியா, தென் கொரியா போன்ற நாடுகளில் இம்முறை நடைமுறையில் உள்ளது.
3.1.2.6 பன்மொழிக்கொள்கை (Multilingualism)
அரசகரும மொழியாக ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அங்கிகரித்து நடைமுறைப்படுத்தும் முறையே பன்மொழிக் கொள்கை எனப்படும். இம்முறை அநேகமாக பல்லின மக்களை கொண்ட நாடுகளிலேயே அதிகமாக காணப்படுகிறது. இப்பன்மொழிக் கொள்கையானது பல்வேறுப்பட்ட வகைப்பாடுகளை கொண்டுள்ளது.
• இருமொழிக்கொள்கைர் அரசு தனது ஆள்புலத்தில் நிர்வாக மொழியாக ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை குறிப்பாக இரண்டு மொழிகளை கொண்டிருக்குமாயின் அது இருமொழிக் கொள்கை எனப்படும.; உதாரணமாக இலங்கை இருமொழிக் கொள்கையை கொண்டதொரு நாடாகும்.

• மும்மொழிக் கொள்கை
ஓர் அரசு அதனது ஆட்சிப்பரப்பினுள் மூன்று மொழிகளை அதனது அரசகரும மொழியாகக் கொண்டு காணப்படுமாயின் அந்நாடுகள் மும்மொழிக் கொள்கை நாடுகள் என்று அழைக்கப்படும்.
உதாரணமாக, பிலிப்பைன்ஸ், நமிபியா போன்றவற்றை குறிப்பிடலாம்.
பன்மொழிக்கொள்கை (Multilingualism)
நாடானது அதனது நிர்வாக மொழியாக இரண்டுக்கு மேற்பட்ட மொழிகளைக் கொண்டு காணப்படுமாயின் அதனை பன்மொழிக் கொள்கை கொண்ட நாடாக அடையாளப்படுத்தலாம். உதாரணமாக, இந்தியா ஒரு பன்மொழிக் கொள்கை கொண்ட நாடாகும். தென்னாபிரிக்காவில் சுமார் 11 மொழிகள் அங்கிகாரம் பெற்றுள்ளன.
இதனடிப்படையில் இன்று உலகில் மொழித் தொடர்பான கொள்கைகள் வகுக்கப்பட்டு அம்மொழித் தொடர்பான ஏற்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்றன. இருப்பினும் வளர்ச்சியடைந்த நாடுகள் மொழிக்கொள்கை ஒன்றை வைத்துக் கொள்வதில் பூரண திருப்தியற்ற ஒன்றாகவே காணப்படுகின்றன. காரணம் இம்மொழிக் கொள்கைகளே முரண்பாட்டை ஏற்படுத்துவதாக இன்று அடையாளப்படுத்தப்படுகிறது.
எனவே “அரச கரும மொழிக் கொள்கை அமுலாக்கமும் மலையக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளும்”; என்ற இவ் ஆய்வானது அரச கருமமொழி தொடர்பாகவும், இருமொழி அமுலாக்கம் தொடர்பாகவும் ஆய்வு செய்வதாக அமையப்பெற்றுள்ளதால் அவ் ஆய்வுக்கு பன்மொழிக்கொள்கை என்ற பிரதானக் கோட்பாடு பொருத்தமாக அமைந்துக் காணப்படுகின்றது. அத்துடன் இருமொழிக்கொள்கை தொடர்பான விசேட ஆய்வாகக் காணப்படுவதனால் இவ் ஆய்வுக்கு இருமொழிக்கொள்கை, மும்மொழிக்கொள்கை, பன்மொழிக்கொள்கை என்ற துணைக்கோட்பாடுகளும் பொருத்தமாய் அமைந்து காணப்படுகிறது.
அதாவது ஒரு அரசிற்குள் மொழித் தொடர்பான பிரச்சினைகள் தோன்றும் போது அந்நாடு அப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இருமொழிக் கொள்கையையோ, மும்மொழிக் கொள்கையையோ அல்லது பன்மொழிக் கொள்கையையோ பயன்படுத்தி அப்பிரச்சினையை இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும் அதேப் போல இவ் ஆய்வும்; அரசகரும மொழிக்கொள்கை தொடர்பாக ஆராய்வதாக அமைந்துள்ளதால் இம்மொழித் தொடர்பான கோட்பாடுகளும், கொள்கைகளும் இவ்வாய்வினை கொண்டு செல்ல ஏற்புடையதாக உள்ளது.
04. ஆய்வுப் பிரச்சினை:-
பல்லின சமூகத் தன்மை கொண்ட நாடான இலங்கையில் குறிப்பாக இரு மொழி பேசுபவர்கள் வாழும் மலையக பகுதிகளில் மொழிக் கொள்கை தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் நாளாந்தம் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. அவ்வகையில் நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ கொரளை பிரதேச செயலகத்திலும் அதற்குட்பட்ட பகுதிகளிலும் ஏன் அரச கரும மொழிக்கொள்கை அமுலாக்கமானது சீராக இடம்பெறவில்லை? இலங்கையின் மொழிக்கொள்கை அமுலாக்கத்தில் உள்ள குறைபாடா அல்லது நடைமுறைப்படுத்துவதிலுள்ள அசமந்த போக்கா? காரணம் என்ற பல பிரச்சினைகள் எழுந்துள்ளது. இதனால் இப்பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
05. ஆய்வின் கருதுகோள்:-
5.1. பிரதான கருதுகோள்
“அம்பகமூவ கொரளை பிரதேச செயலகத்தில் அரசகரும மொழிக்கொள்கையானது
அமுலாக்கமானது முறையாக இடம்பெறவில்லை”
5.2. துணைக் கருதுகோள்
அம்பகமூவ கொரளை பிரதேச செயலகபிரிவு மக்கள் அரச கரும மொழிக் கொள்கை தொடர்பான விழிப்புணர்வை பெற்றிக்கவில்லை.
மொழிக் கொள்கை அமுலாக்கம் முறையாக இடம்பெறுகின்றதா? என பரீசிப்பதற்கு தனியான நிறுவனம் காணப்படாமையானது மொழிக்கொள்கை அமுலாக்கத்தின் நடைமுறையில் அசமந்தபோக்கை ஏற்படுத்தியுள்ளது.
06. இலக்கிய மீளாய்வு
1996ம் ஆண்டு International Centre for Ethnic Studies (ICES) இனால் வெளியிடப்பட்ட “National Language Policy in Srilanka (1956-1996)” என்ற நூலில் இலங்கையில் பன்மைத்துவ சமூகத்தில் அரச கரும மொழிக் கொள்கையும், அரச கரும மொழிக் கொள்கை அமுலாக்கம்(1956-1970) மற்றும் பொதுத்துறை நிர்வாகத்தில் மொழிக் கொள்கை, பொதுத்துறை நிர்வாகத்தில் தமிழ், என்பன பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் இந்நூலில் மொழிக் கொள்கை கோட்பாடுகளும் அதன் நடைமுறை பிரயோகம் தொடர்பாக விளக்கப்பட்டுள்ளது.
International
Center for Ethnic Studies வெளியிட்ட ‘Tamil
as Official Language’ டுயபெரயபந’ எனும் (1995) நூல் தமிழ்மொழியும் அரசகரும மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும், அதன் அவசியப்பாட்டையும் உணர்த்துவதாக A.Thevarajan எழுதியுள்ளார். இது தேசிய ரீதியிலான பார்வையை மையப்படுத்தியதாக காணப்படுகிறது. இலங்கையின் அரச கரும மொழிகளின் தோற்றப்பின்னணி, தமிழ்மொழி அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இனப்பிரச்சினையை பின்புலமாகக்கொண்டு அரசகரும மொழிக் கொள்கை பிரச்சினை தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
Internationnal
Center for Ethnic Studies யினால் 24 th, September 1990; இல் நடத்தப்பட்ட Workshop
on Implementation of Language Policy in Education working paper ஆனது கல்வித்துறையை மட்டும் மையப்படுத்தியதாக இருப்பதுடன் மொழி அமுலாக்கம் தொடர்பான பரிந்துரைகளை குறிப்பிடத் தவறியுள்ளதைக் காணலாம். அத்துடன் இது கல்வித்துறையை விடுத்து ஏனையதுறைகளில் கவனம் செலுத்தாமை மொழி அமுலாக்கப் பரப்பில் ஒரு பாரிய தாக்கம் செலுத்தத் தவறி இருக்கிறது எனலாம்.
B. Shanthkumar இனால் எழுதப்பட்ட ‘Language
Rights in Srilanka’ எனும் புத்தகத்தில் பலர் மொழி உரிமை பற்றி பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இதில் Reality
Check and Recommendations on Languge Rights எனும் கட்டுரையில் N.Selvakumaran
(P.05) மொழி அமுலாக்கம் எவ்வாறு காணப்படுகிறது என்பது தொடர்பில் விளக்க முன்வருகையில் அவர் நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து அரசாங்க அலுவலகங்களிளும் இப்பிரச்சினை உண்டு என மேலோட்டமாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கான காரணத்தினையோ அதனால் ஏற்படும் பாதிப்பினையோ குறிப்பிடவில்லை. இருப்பினும் தமிழ்மொழியினை அமுல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவற்றில் காணப்படும் சிற்;சில குறைபாடுகளையும் ஆங்காங்கே சுருக்கமாக கூறி இருக்கின்றார். பல புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இவரின் கட்டுரை அமைந்திருந்தாலும் கூட இவை அனைத்தும் தேசியமயமான மேலோட்டத்திலேயே நோக்கப்பட்டுள்ளது. எனலாம்.
The foundation of Co-Existence என்ற அமைப்பின் மூலம் 2003ம் ஆண்டு ''Human
Security in Hill Country' எனும் நூலில் மலையக மக்களின்; அரசியல். பொருளாதார நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்நூல் முதலாம்; இரண்டாம் நிலைத்தரவுகளை அடிப்படையாக கொண்டது. இந்நூலில் அரசகருமமொழி தொடர்பாக மலையக மக்கள் அரச அலுவலகங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக எதுவும் கூறப்படாமை இதன் இடைவெளியாக காணப்பட்டது எனலாம்.
Iqbal.M.C.M. என்பவரால் ‘The
Beginning of the Ethnic Problem in Srilanka
–Violation of Language Rights’ (LST- Review-Low &Society Trust) எனும் கட்டுரையில் மொழி உரிமையினை இனப்பிரச்சினையுடன் தொடர்புபடுத்தி வன்முறைகளை சுட்டிக்காட்டி தனது கட்டுரையை ஆக்கியுள்ளார். இதுவும் ஒரு பொதுவான ஆய்வாக காணப்படுகிறது. அத்துடன் அரசகருமமொழி ஆணைக்குழுவின் வகிபங்கை விளக்குவதாக காணப்படுகிறது. எனலாம். எனவே இதனை இப்புத்தகத்தின் ஆய்வு இடைவெளியாக அடையாளப்படுத்த முடியும்.
'மலையக அரசியலும் சமூக வாழ்வும்' எனும் நூல் 1999ம் ஆண்டு சந்தனம் சத்தியானந்தம் என்பவரால் வெளியிடப்பட்டது. இந்நூல் முதலாம், இரண்டாம் தரவுகளை அடிப்படையாக கொண்டது. இந்நூலில் மலையக மக்களின் சமகால பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு காணப்பட்டாலும் மொழி தொடர்பான முக்கியத்துவம் மிகக்குறைவாகவே காணப்படுகிறது. அதனால் அதன் ஆய்வு இடைவெளியாக அரசகரும மொழி தொடர்பில் மலையக மக்களின் பிரச்சினை சுட்டிக்ககாட்டப்படவில்லை. எனலாம். எனவே இதனை இப்புத்தகத்தின் ஆய்வு இடைவெளியாக அடையாளப்படுத்த முடியும்
“இலங்கை தமிழர் தேசிய வாதம் அதன் ஆரம்பம் பற்றியதோர் ஆய்வு” எனும் நூல் தென்னாசியாவின் ஆய்வியல் மையத்தினால் (சிட்னியில்) வெளியிடப்பட்;டது. அதிலும் முன்னர் குறிப்பிட்டதைப்போன்றே நுவரெலியா மாவட்டத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு தனிப்பட்ட பிரதேசத்தையோ குறித்துக்காட்டாமல் பொதுவான முறையில் பிரச்சினை அணுகப்பட்டுள்ளது இது இவ்வாய்வின் இடைவெளியாகும். எனலாம். எனவே இதனை இப்புத்தகத்தின் ஆய்வு இடைவெளியாக அடையாளப்படுத்த முடியும்.
சகவாழ்வு மன்றத்தினால் (FCE) “மொழிப் பாகுப்பாடும் சமத்துவமும்” எனும் ஆய்வறிக்கையானது அரசகரும மொழியை நடைமுறைப்படுத்துவது தொடர்பானதாகும். இது பதுளை. நுவரெலியா, கொழும்பு, கண்டி, போன்ற மாவட்டங்களினது ஒரு சில வைத்தியசாலைகள், பொலீஸ் நிலையம், பிரதேச செயலகம், இருமொழிக் கலப்புப் பாடசாலைகள் போன்றவற்றை மையப்படுத்தி ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இவ்வாய்வு அறிக்கையில் நுவரெலியா வைத்தியசாலையின் தமிழ்மொழி அமுலாக்கம் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டிருந்தாலும் கூட பிரதேச செயலகம் இங்கு கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனலாம். எனவே இதனை இப்புத்தகத்தின் ஆய்வு இடைவெளியாக அடையாளப்படுத்த முடியும். சகவாழ்வு மன்றத்தினால் வெளியிடப்பட்ட பிறிதொரு நூல் “இலங்கையின் மொழியுரிமை பற்றிய வள நூலாகும்” இது இலங்கையில் இதுவரைகாலமும் மொழிக்கொள்கை தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தொகுத்து வடிவமைக்கப்பட்டதாக காணப்படுகிறது. எனலாம். எனவே இதனை இப்புத்தகத்தின் ஆய்வு இடைவெளியாக அடையாளப்படுத்த முடியும்.
அரசியலமைப்பு அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சினால் வெளியிடப்பட்ட Progress 2006 Preposed Action Plan 2007 அறிக்கையில் அரச அலுவலகங்களில் இருமொழி தேர்ச்சிபெறல் சம்பந்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்ததாக குமாரி ஜயவர்த்தன அவர்களால் 1995ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூலில் மொழிப்பிரச்சினைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றைவிட இலங்கையில் கசந்துபோன அறுவடை எனும் நூலில் மொழிப்பிரச்சினை பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.
இவ்வகையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மொழிக் கொள்கை அமுலாக்கத்தினை இனப்பிரச்சினையுடன் தொடர்புப்படுத்தியும் கல்வித்துறையில் மொழிக் கொள்கை அமுலாக்க திட்டமிடல் மற்றும் மலையகத்தில் இடம்பெறும் மொழி உரிமை மீறல் என பொதுவான ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதுமட்டுமன்றி அரச கரும மொழிக்n;காள்கை தொடர்பாக மலையக மக்கள் அரச அலுவலகங்களில் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் தொடர்பாக முழுமையான ஆய்வுகள் இடம்பெறவில்லை. அத்துடன் அம்பகமூவ கொரளை பிரதேசப்பிரிவுகளில் அரசகரும்மொழிக் கொள்கை அமுலாக்கமும் நடைமுறைமுறை பிரயோகம் என்பன தொடர்பாக இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனை ஆய்வின் இடைவெளியாகக் கொண்டு அதனை நிரப்பும் வகையில் எனது ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
07. ஆய்வு முறையியல்:-
ஆய்வு இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு முறைமைப்பபடுத்தப்படவுள்ளது
7.1. தரவு சேகரித்தல்
7.1.1. முதலாம் நிலைத் தரவுகள்
அம்பகமூவ பிரதேச செயலக உறுப்பினர்கள், கிராம சேவகர்கள், மற்றும் அப்பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்களைநேர்காணல்
7.1.2. 2ம் நிலைத் தரவுகள்
மொழிக் கொள்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கைகள்,நூல்கள்,சஞ்சிகைகள், பத்திரிகைகள் மூலம் இவ்வகைத் தரவுகள் பெறப்பட்டுள்ளது.
7.1.3. 3ம் நிலைத் தரவுகள்
இலத்திரனியல் ஊடகங்கள் (Internet) மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள், தகவல்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இவ்வகைத் தரவுகள் பெறப்பட்டுள்ளன.
7.2 தரவு பகுப்பாய்வு:-
அம்பகமூவ கொரளை பிரதேச செயலக பிரிவு தொடர்பாக சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தரவு பகுப்பாய்வு செய்யப்பட உள்ளது. அதாவது பண்புசார், அளவுசார் பகுப்பாய்வு முறைகளும் சேர்த்து பகுப்பாய்வு செய்யப்பட உள்ளன. அத்துடன் அளவுசார் பகுப்பாய்வானது ஆள. Ms. ACCess, Excel முலமும் மேற்கொள்ளப்படவுள்ளது. புள்ளிவிபரவியல் தரவுகளின் முடிவுகளை கோட்டு வரைபடங்கள், பார் வரைபடங்கள், சட்டகங்கள், வட்ட வரைபடங்கள் என்பவற்றைக் கொண்டு வகைப்படுத்தி தெளிவுப்படுத்தப்படும்.பண்புசார் ரீதியான தரவுகளை அறியக்கூடிய தலைப்புகளாக வகுக்கப்பட்டு விஞ்ஞானத் தன்மையுடன் விமர்சன ரீதியாக பகுப்பாய்வு மேற்கொள்ளப்படும்.
08.ஆய்வின் முக்கியத்துவம்:-
அரசகருமமொழி தொடர்பில் பல்வேறுபட்ட ஆய்வுகள் காணப்பட்டாலும் கூட இதுவரையில் மலையகத்தை குறிப்பாக மலையக அரசாங்க அலுவலகங்களை மையப்படுத்திய ஆய்வுகள் மிகவும் குறைவு என்பதுடன் மொழிக் கொள்கை அமுலாக்க பிரச்சினைகள் தொடர்பில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஆய்வாளர்கள் கொண்டுள்ள கரிசனையினை மலையகத்தில் கொண்டிருக்கவில்லை, அதிலும் இந்திய வம்சாவளியினர் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமூவ கொரளை பிரதேசம் தொடர்பாக ஒரு தனித்துவமான ஆய்வு மேற்கொள்ளப்படாமல் உள்ளளமை இவ்வாய்வின் முக்கியத்துவமாகும். எதிர்காலங்களில் மொழிக்கொள்கையினை வகுக்கையில் இவ்வாய்வானது முக்கியமானதாக அமையலாம். அத்துடன் மொழிஉரிமை தொடர்பிலும், மொழிக் கொள்கையின் சீரான அமுலாக்கம் இன்மையாலும் இப்பிரதேச மக்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளை வெளிக் கொணரவும் இவ்வாய்வு துணையாக அமையும். என்பதால் முக்கியத்துவம் பெறுகின்றது.
09. ஆய்வின் நோக்கங்கள்
இலங்கை போன்ற பல்லின, சமூக, மொழி, கலாசாரங்களை கொண்ட நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு திறமான மொழிக்கொள்கை அவசியமாகும். இது நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை பாதிக்கும் தன்மைக் கொண்டது என்பதால் இதன் சீரான அமுலாக்கம் அவசியமாகும.; அவ்வகையில் இவ்வாய்வானது பின்வரும் நோக்கங்களுக்காக ஆராயப்படவுள்ளது.

- தனிப்பட்ட விசாரணை
- வினா கொத்து முறை
- கலந்துரையாடல்

9.1 பிரதான நோக்கம்:-
அம்பகமூவ கொரளை பிரதேச செயலகப்பிரிவில் மொழிக் கொள்கை அமுலாக்கம் சீராக இடம்பெறாமைக்கான காரணங்களை இணங்காணல்
9.2 துணை நோக்கங்கள்
அம்பகமூவ கொரளை பிரதேச செயலகப்பிரிவில் மொழிக் கொள்கை அமுலாக்கத்திலுள்ள குறைபாடுகளை அடையாளங்காணலும் அதனை நிவர்த்திச் செய்தலும்
அரச அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் காணப்படும் மொழிப் பிரச்சினையை அடையாளப்படுத்துதல்,
10. ஆய்வின் வரையறை:-
இவ்வாய்வானது “அரசகரும மொழிக் கொள்கை அமுலாக்கமும் மலையக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளும்” எனும் தலைப்பின் கீழ் அம்பகமூவ கொரளை பிரதேச செயலகப் பிரிவை மாத்திரம் ஆய்வு செய்யவதாக அமைந்துள்ளது. அத்துடன் இவ் ஆய்வில் பொதுத்துறை ஊழியர்களும் அங்கு சேவைபெறுவதற்கு வரும் தமிழ் மொழிபேசும் மக்களையும் உள்ளடக்கியதாக காணப்படுகிறது. மேலும் சேவைபெற வரும் மக்களில் சுமார் 20 பொதுமக்களையும், சுமார் 20 பொதுத்துறை ஊழியர்களையும் மட்டும்; மாதிரியாக எடுத்து சமவாய்ப்பு அடிப்படையில் மாதிரி அலகுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன. இம் மாதிரி எடுப்பின் மூலம் 40 பேர் தெரிவுசெய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
crhj;Jiz gl;bay;

Gunasekara olcatt,R.G.G.
Samarasinghe,S.G. Vamadevan,V. National
language Policy in Sri lanka (1956-1999) (three studies in its
implementation) Kandy:
international centre for ethnic studies, (1996)
Halpe, Ashley. Fifty years of language
policy in Sri Lanka: the state of the English language (dialogue)
Colombo.(2007).
Kailainathan,R
‘Problems in learning Sinhala and Tamil as second languages, Sri Lanka Journal of South Asian Studies,(1994).
Mannikkam.P.P. Tea Plantations in
Crisis, Social Scientist’s Association. Colombo,(1995).
Nadesan,s. A- history of the up
country Tamil people in srilanka, sri lanka: nandalala publication.(1993)
Thevarajan, A. Tamil
as Official Language:Retrospect and Prospect, International Center for
Ethnic Studies, (1995).
Wesle Muthaiah. Sydney Wanasingha. Two Languages on
Nation-One Language Two Nations (The Lanka Sama Samaja Party on the state
language), Sri lanka: a young socialist Publication, (2005).
கணேசலிங்கம், வி. இனத்துவ முரண்பாடுகளும் மலையக மக்களும்;; : பல்பக்கப் பார்வை, “மலையக கல்வி அபிவிருத்தியின் இனமுரண்பாடுகளின் தாக்கம்” கொழும்பு: அமரர். இரா.; சிவலிங்கம் ஞாபகார்த்த குழு, (2007).
கீதபொன்கலன், ச , மலையகத் தமிழரும் அரசியலும் பண்டாரவளை: லியோ மார்க்கா ஆஸ்ரம்.(1995)
கீதபொன்கலன், ச. இருபத்தோராம் நூற்றாண்டில் மலையக தமிழர்கள் எதிர் கொள்ளும் சவால்கள,; பண்டாரவளை: நியூமார்க்கா நிறுவனம்.(2004)
சந்தனம் சத்தியநாதன், மலையக அரசியலும் சமூக வாழ்வும் கண்டி: ஞானம் பதிப்பகம்,(1999).
டானியல் பாஸ் மலையகத் தமிழ் அடையாளத்தின் பின்புல அமைவுகள், இலங்கை: மார்க்கா நிறுவனம், (2000).
தம்பையா, இ. ,மலையக மக்கள் என்போர் யார், புதிய பூமி வெளியீட்டகம்(1995)

0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்