மாணவர்களின் முதிர்ச்சி மட்டத்திற்கு ஏற்பவே அவர்களின் கற்றல் திறனும் விருத்தியடையும். குறிப்பிட்ட பிள்ளை போதுமான முதிர்ச்சி கட்டத்தை எட்டாமல் அப்பிள்ளைக்கு வழங்கப்படும் கற்றல் செயன்முறையானது எவ்வகையிலும் சாதகமான தராது மாறாக பாதகமான விளைவுகளை தரலாம். அதேபோன்று குறிப்பிட்ட முதிர்ச்சியை
அடைந்த பிள்ளைக்கு தேவையான பயிற்சிகள் வழங்காவிடினும் பாதகமான விளைவுகளை சந்திக்கக் கூடியதாக இருக்கும். இதனையே டெனிஸ்(1960) என்பவர் ஈரானிலுள்ள அநாதை இல்லமொன்றில் செய்த ஆய்வில் ஒரு வயது நிரம்பிய பிள்ளையால் கூட தானாகவே உட்கார முடியாதிருப்பதையும் மூன்று வயது பிள்ளைகளில் அநேகருக்கு நடக்க முடியாதிருப்பதையும் கண்டார். இதற்கு குறிப்பிட்ட நடவடிக்கையோ செயன்முறையோ காரணம் அல்லவென்றும் போதிய பயிற்சி வழங்கப்படாமையை விட சமூக மனவெழுச்சி ரீதியான ஊக்கம் கிடைக்காமையே காரணம் என எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறாக ஒரு பிள்ளையின் முதிர்ச்சியை கவனத்தில் கொள்ளுதல் கட்டாயமானதுடன் முதிர்ச்சிக்கு ஏற்றாட்போல் பயிற்சியை வழங்குதலும் இன்றியமையாததாகும்
ஆசிரியர் என்ற வகையில் அதிகமாக மாணவர்கள் அவர்களின் வழிக்காட்டலின் மூலமாகவே வழிப்படுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக ஒரு கற்றல் கற்பித்தலை வடிவமைக்கும் போது ஆசிரியர் மாணவர்களின் முதிர்ச்சி மட்டத்தினை கவனத்தில் கொள்ளுதல் கட்டாயமானதாகும் இதனை கீழ்வரும் எடுத்துக்காட்டுகளின் மூலம்
அறியலாம்.
எடுத்துக்காட்டுகள்
- வகுப்பறையில் எல்லா மாணவர்களும் ஒரே விதமான முதிர்ச்சி மட்டத்தை கொண்டிருக்க மாட்டார்கள் அதனால் ஒவ்வொரு மாணவருக்கும் ஏற்றாட்போல் கற்றல் கற்பித்தலை மேற்கொள்வதற்கு முதிர்ச்சி மட்டத்தை கவனத்தில் எடுத்தல் அவசியம்
- வினைத்திறன் விளைத்திறன் மிக்க வகுப்பறை ஒன்றினை கட்டியெழுப்புவதற்கு முதிர்ச்சியின் கவனம் தேவை
- மாணவர்களின் அறிவுசார் சமூகம்சார் பண்புகளை இனங்கண்டு கொள்வதற்கும் அப்பண்புகளை விருத்தி பாதையை நோக்கி கொண்டு செல்வதற்கும் முதிர்ச்சி மட்டத்தை கவனத்தில் எடுத்தல் வேண்டும்.
- மாணவர்களின் கற்றல் அளவையும் கற்றல் நுட்பங்களையும் தீர்மானிப்பதற்கு
- மாணவர்களின் முதிர்ச்சி மட்டத்தை அறிந்து அதற்கு ஏற்றாட்போல் கற்றலை வடிவமைப்பதற்கு.
- மாணவர்களின் கொள்ளளவு திறனை அறிந்துக்கொள்வதற்கு
- வகுப்பறையின் பல்வகைமை தன்மையை இனங்கண்டு கொள்வதற்கு
- மாணவர்களை தனிப்பட்ட ரீதியில் அறிந்து கொள்வதற்கும் பரிகார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும்
- வகுப்பறையில் மேலதிக செயற்பாடுகளை தீர்மானிப்பதற்கு இவ்வாறான நிலைமைகளை கட்டியெழுப்புவதற்கு முதிர்ச்சியின் மட்டத்தை கவனத்தில் எடுத்தல் வேண்டும்.
ஆக்கம்
R..திஸ்ணாராஜா
BA,PGDE, DIP in TAmil,
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்