அறிமுகம் (2009 ஆண்டு களநிலவரங்களின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வு)
என சர்வதேச சமூகம் நாளுக்கு நாள் ஆய்வு செய்து வருகின்றது.
ஒரு சட்டததின் பங்கானது அடிப்படை விதிகளை அழிப்பதன் மூலம் ஒரு சமுதாயத்தின் குறிக்கோளை மேம்படுத்தியும் அதனை அச்சமூக மக்கள் பின் தொடந்தால் அவர்களின் பொதுவான இலட்சியங்களை உணர்வதற்கு இடமளிக்ககூடியவாறு இருத்தல் வேண்டும். இச்சட்டம் நல்ல விளைவினை ஏற்படுத்த வேண்டுமாயின் அது வெறுமனே அச்சில் மட்டும் நின்று விடாமல் மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். சட்டத்தினை மீறினால் தடைகளும் கட்டுப்பாடுகளும் ஏற்படும் என்ற பயத்தின் காரணமாக அன்றி இயல்பாகவே அசசட்டங்களுக்கு அடிபணியவேண்டும்.
தற்போது இலங்கையில் நிகழ்ந்து வரும் பாரதூரமான மனித உரிமை மீறல்களும் தண்டணையிலிருந்து மீறும் கலாச்சாரமும் பொது மக்களது பாதுகாப்பும் மனித உரிமையையும் கேள்விக்குறியாக்குகின்றது. எனவே தற்கால இலங்கையின் சட்டங்கள் அரச பாதுகாப்பு நிறுவனங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளான மனித உரிமைகளையும் பாதுகாப்பினையும் எவ்வாறு நிறைவேற்றுகின்றது என்பதனை விமர்சன ரீதியாக ஆராய்ந்துள்ளேன்.

மனித உரிமைகள் என்றால் என்ன?
ஒரு மனிதன் தனது நாகரீக வாழ்வை கொண்டு நடத்தவும் தனது ஆளுமையை விருத்திசெய்துக்கொள்ளவும் உரிமைகள் அடிப்படையாக அமைகின்றது.
“மனித உரிமைகளை பெறுவது தாம் இழந்த பெரும்பொருளை மீண்டும் பெற்றதற்கு ஒப்பாகும்” -பேராசிரியர் லாஸ்கி-
இதனுடாக புலப்படுவது யாதெனில் ஒரு மனிதனிடமிருந்து நிறத்தினை எவ்வாறு பிரிக்கமுடியாதோ அதேபோன்று மனித உரிமைகளையும் மனிதனிடமிருந்து பிரிக்க முடியாது.
இலங்கையில் அடிப்படை உரிமைகள் என்பன இந் நாட்டின் அரசியல் அமைப்பில் எழுதி உத்தரவாதப்படுத்தப்பட்டவையாகும். இவை நாடுகளின் பொருளாதார நிலை, அரசியல் கலாச்சாரம், சமூக தன்மை போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றது எனவே நாட்டிற்கு நாடு மனித உரிமைகள் வேறுபடலாம். வரலாற்று காலகட்டத்தில் நிகழ்ந்த புரட்சிகள் அனைத்தும் இம்மனித உரிமைகளை வென்றெடுப்பதாக அமைகின்றது.
இலங்கையில் 1947ம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பு வடிவமைக்கப்பட்ட போது அடிப்படை உரிமைகளுக்கு முக்கியத்துமளிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டதாயினும் சேர். ஜவர் ஜெனிங் அதை கருத்திற்கொள்ளவில்லை. 1972ல் மனித உரிமைகள் அரசியல் யாப்பு ரீதியாக முதல் முதலில் உத்தரவாதப்படுத்தபட்டது. அதை தொடர்ந்து 1978 யாப்பில் இது விரிவாக பல அத்தியாங்களுடன் மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டதிட்டங்கள் பல கொண்டுவரப்பட்டது. 1996ல் 21ம் இலக்க சட்ட மூலத்தினடிப்படையில் 5 உறுப்பினர்களை கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. இது பல்வேறு மனித உரிமைகள் பாதுகாக்கும் செயற்பாடுகளில் ஈடபட்டு வருகின்றது. இன்னும் இலங்கை ஜக்கிய நாடுகளில் உறுப்புரிமை பெற்றதன் பின்னும் ஜக்கிய நாடுகின் துனை நிறுவனங்களான உணவு விவசாய தாபனம், புணர்நிர்மான அபிவிருத்திற்கான சர்வதேச வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம், ஜக்கிய நாடுகளின் சனத்தொகை அபிவிருத்தி நிதியம், அகதிகளுக்கான ஜக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர், ஜக்கிய நாடுகள் தகவல் மையம், ஜக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், உலக சுகாதார ஸ்தாபனம் என்பன அரசுக்கு உதவி செய்கின்றன. இவற்றை தவிர ஒரு நாட்டின் மனித உரிமைகள் அளவுக்கதிகமாக மீறப்படும் போது மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சர்வதேசத்தை சாருகின்றது. எனவே “பாதுகாக்கும் பொறுப்பு” (Responsibility to protect – R2P) சர்வதேச ரீதியாக மக்களை பாதுகாப்பதற்காக காணப்படுகிறது.
இலங்கையை பொறுத்தமட்டில் மனித உரிமைகள் என்பது 1947ம்ஆண்டு சோல்பரியாப்பின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் 1972ம்ஆண்டு 1ம் குடியரசு யாப்பின் 6ம் அத்தியாயத்தில் அடிப்படை உரிமைகள் என்பது தெளிவுப்படுத்தப்பட்டது. ஆனால் அது மீறப்படும்போது நிவாரணப்பெறும் நிலை காணப்படவில்லை. மட்டும் சொத்துரிமையும் உறுப்புரை 25 ல் பிள்ளைகளின் நலன்களுக்கும் முக்கியத்துவமளிக்கப்படவில்லை. 1924ம் சிறுவர் உரிமை தொடர்பான பட்டயம் சிறுவர் உரிமைகள் தோன்ற காரணமாகியது 1978ம் ஆண்டின் 2ம் குடியரசு யாப்பில் மனித அடிப்படை உரிமைகள் தொடர்பான ஏற்பாடுகள் உறுப்புரை 10,11,12,13 என்றவாறு அனைத்து நலன்களையும் அனுபவிக்ககூடிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.
• குடியியல் உரிமைகள்
• அரசியல் உரிமைகள்
• இயற்கை உரிமைகள் அடிப்படை உரிமைகள்
• பொருளாதார உரிமைகள்
• சித்திரவதைக்குட்படாமல் இருபபதற்கான உரிமை
குடியியல் உரிமைகள்
1)பாதுகாப்புரிமை 6) வேலைஉரிமை
2)குடும்ப உரிமை 7)பேச்சுரிமை
3)சொத்துரிமை 8)ஒப்பந்த உரிமை
4)மத உரிமை 9)சுதந்திர உரிமை
அரசியல் உரிமைகள்
1) வாக்குரிமை
2) தேர்தலில்போட்டியிடும் உரிமை
3) பொதுதுறையில் பங்கு பற்றும் உரிமை
4) மனு விணணப்பிக்கும் உரிமை
5) அரசாங்க செயற்பாடுகளை செய்வதற்கான உரிமைகள்1) வாக்குரிமை
2) தேர்தலில்போட்டியிடும் உரிமை
3) பொதுதுறையில் பங்கு பற்றும் உரிமை
4) மனு விணணப்பிக்கும் உரிமை
அடிப்படை உரிமை மீறல்கள் ஏற்பட்டால்?
• நிறைவேற்றுத்துறையினர்
• நிர்வகாத்துறையினர்
கடமையின்போது மீறல்கள் ஏற்படுமானால்
உறுப்புரை-17 • நிறைவேற்றுத்துறையினர்
• நிர்வகாத்துறையினர்
கடமையின்போது மீறல்கள் ஏற்படுமானால்
ஆள் ஒவ்வொருவரும் அடிப்படை மனித உரிமை நிறைவேற்றுத்துறையினரால் அல்லது நிர்வாகதுறையினரால் மீறப்படுமானால் உறுப்புரை 126 பிரகாரம் உயர்நீதிமன்றதிற்கு விண்ணப்பிகக முடியும்
உறுப்புரை-126-(1)
126(2)
126(5)
1996ம்ஆண்டுக்கு பின்
மனித உரிமை ஆணைக்குழு(1996ம்ஆண்டு 21ம் இலக்கச்சட்டத்தின் பிரகாரம்)
இதனை விசாரிப்பதற்கும் தீர்மானம் எடுக்கவும் உயர்நீpதிமன்றத்திற்கு நியாயாதிக்கம் உள்ளது.
ஒரு மாத காலத்திற்குள் எழுத்திலான அல்லது சட்டதரனி மூலம் விணணப்பிககலாம்
மேற்படி மனுவை விசாரித்து 2 மாத கால அளவில் இறுதி முடிவு எடுத்தல் வேண்டும்
மனித உரிமை ஆணைக்குழு(1996ம்ஆண்டு 21ம் இலக்கச்சட்டத்தின் பிரகாரம்)
ஒம்புட்ஸ்மனிடமும்(156(1) சட்ட ஆணைக்குழு என்வற்றின் மூலம் நிவாரணம் பெறலாம்
இவ்வாறாக நாம் நோக்கும்போது நிர்வாகத்துறையினருக்கு எதிராக வழக்கு தொடரப்பபட்டாலும் இதில் தீர்வு என்பது நிர்வாகதுறையினரின் பணத்தின் பக்கம் வழக்கு செல்லும் மற்றும் நீதிமன்றத்தின் தீர்மானம் பெரும்பாலும் நிர்வாகத்தினர் சார்ந்ததாக காணப்படும் காரணம் நிர்வாக துறையால் இவர்கள் தெரிவு செய்யபடுகின்றார்கள் மற்றும் மேலும் ஒம்புட்ஸ்மன் என்பவரை காண்பதே மக்களுக்கு தெரியாத நிலையும் மற்றும் நாட்டிக்கு ஒருவர் காணப்படுதல் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்கள் ஜனாதிபதியால் நியமனம் பெறுவதால் இங்கு மக்களுக்கு ஒழுங்கான நிவாரணம் கிடைக்கப்பெறாது (இது ஜனாதிபதி சார்ந்த விடயமாக இருப்பின்)
இலங்கையின் மனித உரிமைகளும் பாதுகாப்பும்
மனிதன் ஒருவன் தனது உரிமையை இழக்கும்போது சுதந்திரம் நசுக்கப்பட்ட கைதியாகின்றான். இந்நிலைமையை மனித வர்க்கத்தின் ஆரம்ப கட்டத்தில் (வரலாறுகள் படம் பிடித்து காட்டுகின்றன.) வளமிக்க உறுதிபடைத்த வர்க்கத்தின் பிடியில் மனிதன் அடிமையாக நடத்தபட சந்தர்பங்களே அதிகம். இதற்கு பண்டைய றோமசாம்ராச்சிய வரலாற்றினை சிறந்த உதாரணமாக கொள்ளலாம். அங்கு மனிதன் அடிமையாக அதிலும் ஒரு பொருளாக கணிப்பிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மனிதனின் உரிமைகள் மதிக்கப்படும்போது மானுடமும் மதிக்கப்படும். 2ம் உலகபோருக்கு முற்பட்ட வரலாறுகள் மனித உரிமைகளுக்கான பல்வேறு போராட்டங்களை சந்தித்து வந்தமை வரலாற்று சான்றாகும். ஆனால் 2ம் உலகபோருக்கு பிற்பட்ட 1945 காலமே மனித உரிமைகள் சர்வதேச தராதரத்தினை பெற்று உண்மையாக பொருள் கொள்ளப்பட்டது. இதற்கு 2ம் உலகப்போரின் கொடூரமான சுவடுகள் காரணமாயின. ஜ.நாவின் தோற்றமும் சர்வதேச பிராந்திய உள்ளுர் அமைப்புக்களின் சிறிய கட்டமைப்பும் மனித உரிமைகள் சம்பந்தமான ஆவணங்களின் தோற்றுவிப்பும் மனித உரிமைகள் கருத்தேற்றத்தை தோற்றுவித்ததுடன் அதற்கு ஒரு செம்மையான இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. இதற்கு மனித உரிமைகளின் பிரகடனம்..
• அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்
•பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்பாட்டு ஒப்பந்தம்
• குடியல் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வசன ஒப்பந்ததிற்கான விருப்பத்தேரிவுக்குரிய பின்னேடு
• குடியியல் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச ஒப்பந்திற்கான மரண தண்டனையை ஒழிக்கும் நோக்குடைய இரண்டாவது தெரிவுக்குரிய பின்னேடு
• பெண்களுக்கு எதிரான பாரபட்சங்ளுக்கு எதிரான பிரகடனம் ; (CEDAW)
• வேலையாட்களை பாதுகாப்பதற்கான உரிமை
• 1989 சிறுவர் உரிமைகள்
• ICCPR

மேற்கூறியவற்றை ஏற்று அங்கீரித்துள்ள இலங்கையானது வருடாவரும் இது தொடர்பான அறிக்கையினை குறிப்பிட்ட தாபனங்களுக்கு வழங்குவது அவசியமாகும். இத்தகைய ஏற்பாட்டின் படி பாதுகாப்பு என்பது நாட்டின் அபிவிருத்தி என்பதனை கருத்திற்கொண்டுள்ளது. ஒவ்வொரு நாடுகளும் சர்வதேசமும் இதில் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. உதாரணமாக நோக்கின் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் இலங்கைக்கு 2..5 பில்லியன் கிடைக்கும்போது மனித உரிமைகள் எனபது முக்கியத்துவம்பெற்று காணப்பட்டதனை கோடிட்டு காட்டமுடியும்
மேற்கூறிய பிரகடனங்களை உலக பெரும்பாலான நாடுகளில் ஏற்றுக்கொண்டு அங்கரித்துள்ளது. அத்தகைய நாடுகளில் இலங்கையும் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதனை குறிப்பிட்டு கூற முடியும். இலங்கையும் மனித உரிமைகள் பாதுகாப்பும் என்ற ரீதியில் நோக்கும்போது அனைத்து மனித உரிமைகள் சர்வதேச ஆவணங்களையும் இலங்கை ஏற்று அங்கிகரித்துள்ளது. ஆனால் அத்தகைய ஆவணங்கள் எந்தளவுக்கு நடைமுறையில் வெற்றியளிக்கின்றது என்பது கழுது கண்கொண்டு நோக்கவேண்டிய விடயமாகும்.
இவ்வாறு ஒவ்வொரு நாடுகளிலும் மேற்கூறிய ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டாலும் இதன் உண்மையான அறிக்கைகள் சர்வதேசத்திற்கு வழங்கப்படுவதில்லை. காரணம் நாட்டின் நலன் கருதி மக்களின் சமூக நலன் பேணப்படாத தன்மை காணப்படுகின்றது. எனவே இத்தகைய மனித உரிமைகளில் என்பது நாட்டின் சூழ்நிலைகள் சமூக நடத்தை சமூக கட்டமைப்பு என்பனவும் செல்வாக்கு செலுத்துகின்றது அதாவது குடும்பம் என்ற ஆரம்ப சமூக அலகானது சிறந்தமுறையில் சமூகமயமாக்கல் செயற்பாட்டின் மூலம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மனித உரிமைகள் என்பதன் உண்மைத்தன்மை தெளிவு என்பது தெரிதல் வேண்டும், அவ்வாறு இது பற்றிய சரியான சமூகத்தின் விளக்கத்தினை பெறுவதன் மூலம் தான் இந்த மனித உரிமைகள் பாதுகாப்பு பற்றிய தெளிவான பெறுபேறுகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அந்த வகையில் கீழ்வருமாறு இலங்கையில் மனித உரிமையின் பாதுகாப்பு எந்தளவுக்கு நிலைப்பெற்றுள்ளது என்பதனையும் இதனை ஒவ்வொரு சமூகத்தின் நலன்கருதி எவ்வாறு செயற்படுத்துகின்றது என்பதனை நோக்குவோம.;

உயிர்வாழும் உரிமை
இவ்வாறாக ஏனைய நாடுகள் ஏற்றுக்கொண்ட அதே சர்வதேச ஆவணங்களை இலங்கையும் ஏற்றுக்கொண்டாலும், இவ்வாறாக வாழும் உரிமை அரசினால் உறுதிப்படுத்தப்படும்போதே நாட்டில் சுதந்திரமாக மக்கள் வாழும் வழி ஏற்படும் போது அனைத்து உரிமைகளும் இயல்பாக பெறுபவர் இன்று நாம் விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற சிவில்யுத்தினால் அண்மையில் இறுதிபோராட்டத்தில் 2இலச்சத்திற்கும் அதிமான மக்கள் உயிர் இழந்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ்வாறு இதில் இன்று இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் தங்கிருப்பவர்கள் இன்னும் தாங்கள் முழுமையாக இலங்கையர் என்ற அடையாளத்தினை பெற்றுக்கொள்ள முடியாதளவில் இன்றும் அரசு இங்குள்ளவர்கள் விடுதலைப்புலிகள் என கூறுகின்றது. இதிலிருந்து இவர்களுக்கு இலங்கையில் வாழும் உரிமை மறுக்கப்படுவது மறைமுகமாக தெளிவுப்படுத்தபபடுகின்றமையினை நோக்க முடிகின்றது.
ஒரு மனிதனுடைய பிரதானமான உரிமை உயிர்வாழும் உரிமையாகும் இத்தகைய உயிர்வாழும் உரிமை இருக்கும் போது தான் ஏனைய உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படுவதுடன் எல்லா உரிமைகளையும் அனுபவிப்பதற்கான உரிமைகள் காணப்படும். அந்தவகையில் சர்வதேச ரீதியாக அனைத்துலகிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இந்த உரிமையானது ICCPR மூலம் பாதுகாக்கப்படவேண்டும் எனவும் இது மீறப்படும்போது உயாநீதிமன்ற தீர்ப்பினால் ஆவணம் பெற முடியும் என்று குறிப்பிடுகின்றன. ஜரோப்பிய ஆணைக்குழு குறிப்பிடும் போது உயிரை பாதுகாக்கும் உரிமை அனைவருக்குமுண்டு என உறுப்புரை2(2) குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் ஜக்கிய நாடுகளின் பட்டயம் உறுப்புரை(2) உயிர்வாழ்வதற்கான உரிமையினை தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவில் உறுப்பரை21ல் உத்தரவாப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பங்களாதேஸில் உறுப்புரை 32லும் அமெரிக்காவின் யாப்பின் படி உறுப்ர்ரை4லும் இது உத்தரவாதப்படுத்தப்படுகின்றது.
சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையும் விருப்பமான கட்சிக்கு வாக்களித்தலும் தேர்தலில் போட்டியிடுதல் என்றவாறான உரிமைகள் காணப்பட்டாலும் இன்றைய இலங்கை வரலாற்றின் ஒவ்வொரு தேர்தலிலும் கல்வி வாக்குபதிவு இடம்பெறுதலும் கட்சிகளுக்கிடையிலான வன்முறைகள் 2000க்கு மேற்பட்டதாக காணப்பட்டமையும் சரியான முறையில் மனித உரிமைகள் பற்றிய தெளிவுத்தன்மை சமூகத்தில் தெளிவுப்படுத்தப்படாமை எனலாம. உதாரணமாக நாம் 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது யாழ்மாவட்ட மக்களுக்கு வாக்களிப்பதற்கான உரிமைகள் என்பது குறிப்பிட்ட இனக்குழுக்கலான விடுதலைப்புலிகள் மூலம் மறுக்கப்பட்டது இத்தகைய செயற்பாடானது அரசியல் ரீதியான உரிமைகள் என்பது மறுக்கப்பட்டது என்பதினை எடுத்துகாட்டுகின்றது. இதில் அரசியலின் முக்கியத்துவம் மனித உரிமைகள் என்பது பாதுகாப்பது பற்றியதன் உறுதிதன்மை தங்கியுள்ளது. அரசியல் அமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்படும் என்பதனை மறுக்கமுடியாது.
பெண்களின் உரிமை
இன்றைய உலகின் பெண்களின் உரிமை என்பது பெரும்பாலும் மறுக்கப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது. வீட்டில் தொடங்கும் பெண்ணடிமையே நாட்டில் அரசியல் அடிமைத்தனங்களுக்கும் வலுகோறுகின்றது. வீட்டில் தொடங்கும் பெண் விடுதலையே நாட்டின் அரசியல் விடுதலைக்கும் கருவியாயுள்ளது. இன்றைய பெண்களிடம் முக்காடு இடும் வழககம் வீட்டினுள் முடங்கி கிடக்கும் வழக்கம் என்பன நகர்புரங்களில் அரிதாக்கப்பட்டுள்ளது. ஆண்கள் முகத்தை பார்த்தால் கூட தகாத செயலாக கருதும் சமூகத்தின் மடமையை அவர்கள் கருத்திற்கொள்வதில்லை. ஆயினும் இன்றைய இலங்கையில் பெண்கள் போதிய உரிமை பெற்றுவிட்டால் என்று கூற முடியாது. இன்று நகரங்களில் பெண்கள் சிலர் பெருமையும் சிறப்பும் பெற்று விளங்குகிறார்கள். எல்லாத்துறைகளிலும் அவர்கள் முன்னனி வகிக்கிறார்கள. ஆனால் இதை வைத்துக்கொண்டு பெண் உயர்வாக சுதந்திரமும் சமத்துவமும் பெற்று வாழ்கின்றாள் என்று கூற முடியாது. உலகம் அறிய முடியாமல் இரவும் பகலும் சமயலரைகளிலும் தொழிற்காலைகளிலும் வயல்வெளிகளிலும் தேயிலை தோட்டங்களிலும் உழைத்து ஓய்ந்து மடியும் பெண்களே அதிகமாகவுள்ளனா. இந்நிலைக்கு காரணம் பெண்ணின் சமஉரிமை அற்ற வாழ்க்கையே ஆகும். ஆண்கள் பெண்களை தமக்குரிய காம பொருள்களாகவும் பணிமகளாகவும் நினைத்ததன் விளைவே பெண்ணடிமையாகும். இன்றைய சமூகத்தில் பெண்கள் உச்சநிலையை அடைந்திருக்கும் அதேவேளை மிகவும் அடிமட்டத்தில் இல்லாமலில்லை. பெண்கள் உரிமைகள் சமூக பொருளாதார அரசியல் உரிமைகள் என எலலாவகையிலும் பாரபட்சமாக உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேவுள்ளன இவர்கள் பாரிய உரிமை மீறலாக வீட்டு வன்முறை பாலியல் வன்முறை என்பன இடம்பெற்று வருதலை குறிப்பிட முடியும்.
சிறுவர் உரிமையும் பாதுகாப்பும்
சிறுவர்களின் உரிமைகள் என்பது எமது நாட்டில் பாரியளவில் பாதிப்புக்குற்பட்ட ஒன்றாகும். சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் தண்டணைக்குரிய குற்றம் எனினும் நகர்ப்புறங்களிலும் சரி கிராமப்புறங்களிலும் சரி அவர்களது உரிமைகள் மீறப்பட்டு உழைப்புச் சுரண்டலுக்கும் உரிமை மீறலுக்கும் உள்ளாகின்றனர். அவர்களது விருப்பங்கள் மறுக்கப்பட்டு விளையாடும் வயதில் குடும்ப பொறுப்பை ஏற்கும் நிலை காணப்படுகின்றது இதனால் இவர்களின் கல்வியை பெறும் அடிப்படை உரிமை மீறப்படுகின்றது. அரசு வீதியோர சிறுவர்களின் கல்வியை மேம்படுத்துவதில் பல திட்டங்களை கொண்டு வந்தாலும் அவர்களது உடல் உள ரீதியான பாதிப்புக்கள் அவர்களது உரிமைகளை பெறுவதற்கு தடையாகவுள்ளது இதற்கு பெற்றோரும் அரசும் பொறுப்பு கூற வேண்டியுள்ளது. தற்கால இலங்கையின் சிறுவர் பாதுகாப்பு உரிமைகளை நடைமுறைப்படுத்தபட வேண்டிய அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

தொழில் உரிமையும் பாதுகாப்பும்
சமத்துவ உரிமைகள்
பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்தரம்
இன, மத, மத, மொழி ரீதியான உரிமைகள்
அரசியல் யாப்பின் உறுப்பரை12(2) படி எந்தவொரு பிரஜையும் பால் இனம் மொழி மதம் சாதி அரசியல் அபிப்பிராயம் மற்றும் பிறப்பிடம் காரணமாக காரணமாக பாரபட்சம் காட்டப்படக்கூடாது என விளக்குகின்றது. இதற்கான அடிப்படையாக 1956ம் ஆண்டு தனிச்சிங்களமொழிச்சடடம் அதன்வழி 1978ம்ஆண்டில் யாப்பில் சிங்களத்திற்கு முக்கியத்துமளிககப்பட்டது.
பொருளாதார உரிமைகள் பாதுகாக்கப்படும் தன்மையினை எடுத்து நோக்கும் போது பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்பாட்டு ஒப்பந்தம் உறுப்புரை-1 இன் படி ஜக்கிய நாடுகள் பட்டயத்தில் பிரகடனப்படுததப்பட்டுள்ள நிலையில் ஆள் ஒவ்வொருவரும் பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகளையும் மற்றும் குடியியல் அரசியல் உரிமைகளையும் சுதந்திரமான முறையில் அச்சுருத்தலில் இருந்தும் பற்றாக்குறையிலிருந்தும் விடுபட்டு தோய்க்கின்றவர்களாக காணப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் நாம் நோக்கும்போது இலங்கையில் பொருளாதாரத்தில் மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள பாரபட்சம் காணப்படுகின்றதனை நோக்கமுடியும் 500 ருபா சம்பள உயர்வுகூட பெறமுடியாத நிலையில் அவர்கள் அதிகமான உழைப்புக்களில் ஈடுபடுகின்றார்கள். இவர்களுக்கு சுதந்திரமான முறையில் செயற்பட முடியாத நிலையினையும் நோக்க முடிகின்றது. உதாரணமாக நாம் மலையக சிறுமிகள் கொழும்பு பிரதேசத்திற்கு வேலைக்கு வந்ததால் பாலியல் வல்லுறவுக்குற்பட்ட சுமதி ஜீவராணி ஆகிய சிறுமிகள் பௌத்தாலோக மாவத்தையில் வைத்து கடந்த மாதம் கொள்ளப்பட்டனர். இவ்வாரன சம்பவங்களை நோக்கும்போது ஒழுங்கான முறையில் மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு வழங்கப்பட்டிருந்தால் இவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது. எனவே இந்த சமூகங்களை அரசாங்கமானது பாதுகாப்பு எனும்பெயரை சுட்டிக்காட்டி அதனை துஸ்பிரயோகம் செய்கின்றதனை அறியலாம் மேலும் இங்கு பொருளாதார ரீதியாக நோக்கும் போது அனைவரும் தனது தொழிலை செய்வதற்கான உரிமைகள் காணப்பட்டாலும் தற்போதைய சமூக சூழ்நிலைகள் அதனை மறுக்கின்றது.
இலங்கை அரசியல் அபைப்பின் படி12(1) எலலோரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் சட்டத்தின் பாதகாப்புக்கு உரித்துடையவர்கள் என கூறபடுகின்றது. இவ்வாறாக டைசி “சட்டத்தின் உயிர்”; என்ற நூலின் ஊடாக சட்டத்தின் முன் யாவரும் சமம் என கூறுகின்றார் . அனைத்துலக மனித உரிமைகள் சாசனம் உறுப்புரை 7 சகலரும் சட்டத்தின் முன் சமமானவர்கள், சமமான பாகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படும்போது ICCPR இதனை வழியுறுத்தியுள்ளதெனலாம.; இவ்வாறாக நோக்கும்போது இலங்கையில் இதன் பாதுகாப்பு தன்மை என்பது ஆளுக்காள் வேறுபடுகின்றதை நோக்க முடிகின்றது. உதாரணமாக 2009ம் ஆண்டு மே தின கூட்டத்தின் போது ஏனைய எல்லா கட்சிகளுக்கும் கண்டியில் நடத்துவதற்கு சந்தர்ப்பம் அழிக்கப்பட்டபோதும் ஜக்கிய தேசிய கட்சிக்கு இதற்கான சந்தர்பபம் வழங்கப்படவில்லை என்றே கூறமுடியும். இதிலிருந்து நடைமுறையில் ஒவ்வொரு விடயங்களிலும் சமத்துவம் மீறப்படுகின்றதெனலாம. உதாரணமாக இலங்கையில் ஏதாவது குற்றம் புரிந்தால் நீதிமன்றத்தின் கட்டளைப்படியன்றி கைதுசெய்யப்படவோ தடுத்துவைக்கப்படவோ முடியும் ஆனால் அதனை இலங்கையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களோ அல்லது அரச அதிகாரிகளோ செய்திருந்தால் இதற்கான விசேடத்தன்மையும் மற்றும் நாட்டின் ஜனாதிபதி செய்யும் போது எந்தவொரு நீதிமன்றத்தாலோ வேறு நிறுவனங்களாலோ கைது செய்யவோ தடுத்து வைக்கவோ முடியாத நிலை ஏற்படுகின்றதனை மறுக்கமுடியாது. இவ்வாறு பார்க்கும் சமத்துவரீதியான உரிமைகள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
இலங்கை அரசியல் யாப்பின் உறுப்புரை 14(1) குறிப்பிடப்படுவது யாதெனில் கருத்து வெளியிடும் சுதந்திரம் அமைதியான முறையில் ஒன்றுக்கூடுவதற்கான சுதந்திரம், தொழிற்சங்கம் ஒன்றினை அமைப்பதற்கான உரிமை என்பவற்றினையும் எடுத்துக்காட்டுகின்றது. இந்தவகையில் நோக்கும்போது கருத்து வெளியிடும் சுதந்திரம் எனும்போது இலங்கையில் ஊடகத்தில் பெருமளவு முக்கியத்தும்பெற்று காணப்படுனின்றது. இந்தவகையில் இத்தகைய கருத்து வெளியிடும் சுதந்திரத்தினை அச்சுறுத்துவதில் (ஊடாகவியலாளர்களை) இலங்கை தற்போது 2ம் இடத்தில் உள்ளதனை அறியக்கூடியதாகவுள்ளது. அந்தவகையில் இத்தகைய கருத்து வெளியிடும் சுதந்திரம் எனும்போது இலங்கையின் பெயர் பற்றிய கருத்துக்களை சில நிலவரங்களை அறிவிப்பதில் இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் பெற்று காணப்படும். அந்தவகையில் அதன் செயற்பாடு அரசியல் சார்ந்தாக அமையாத போது அவர்கள் அழிக்கப்படுகின்றனர் மற்றும் உண்மை நிலை என்பது எந்த ஒரு ஊடகத்திற்கும் செயற்பட முடியாத நிலை காணப்படுகின்றது என்பதனை மறுக்க முடியாது.
அரசியல் யாப்பின் உறுப்பரை12(2) படி எந்தவொரு பிரஜையும் பால் இனம் மொழி மதம் சாதி அரசியல் அபிப்பிராயம் மற்றும் பிறப்பிடம் காரணமாக காரணமாக பாரபட்சம் காட்டப்படக்கூடாது என விளக்குகின்றது. இதற்கான அடிப்படையாக 1956ம் ஆண்டு தனிச்சிங்களமொழிச்சடடம் அதன்வழி 1978ம்ஆண்டில் யாப்பில் சிங்களத்திற்கு முக்கியத்துமளிககப்பட்டது.
அந்தவகையில் நாம் ஆரம்ப காலத்தினை எடுத்து நோக்கும் போது 1947களில் அடிப்படை மனித உரிமையின் ஆரம்பத்திலிருந்து தொடர்ச்சியாக நாம் நோக்கும் போது சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டனர் அத்தகைய காலத்தில் தோற்றம் பெற்ற 1956ம் தனிச்சிங்கள மொழிச்சட்டமானது குறிப்பிட்ட சிறுபான்மையினரை பாதிக்ககூடியவாறு அமைந்தது. இதன்போது முதலாவதாக பிரித்தானியரின் ஆட்சி நடைமுறையில் இருக்கும் போதே இச்செயற்பாட்டின் வழி இலங்கையில் குறிப்பிட்ட இனத்திற்கான பாரபட்சமானது அவர்களின் மொழி உரிமைக்கு பாதுகாப்பு இல்லாது போகும்போது இனப்பிரச்சனையின் வெடிப்பு ஏற்பட்டது. அந்த வகையில் இத்தகைய மனித உரிமையின் மீறலே போரின் சரியான ஆரம்பம் எனலாம். நாம் உதாரணமாக கோடிஸ்வரனுக்கு மொழி ரீதியாக பாரபட்சம் காட்டப்பட்டதனை குறிப்பிடலாம். மேலும் 1972ம் யாப்பில் இலங்கையில் உயிர்வாழும் உரிமையானது உத்தரவாதப்படுத்தப்பட்டாலும் இதிலே பௌத்த மத்திற்கான தனிச்சிறப்பிடம் வழங்கப்பட்டது. இவ்வாறாக நோக்குமிடத்து மதரீதியாக ஏனைய மதங்களின் பாரபட்சம் காணப்பட்டது. அதன் பின் 1978ம் ஆண்டுயாப்பு சீர்திருத்தில் உயிர் வாழும் உரிமை உத்தரவாப்படுத்தப்படவில்லை. இவ்வாறாக தொடர்ச்சியாக ஒரு இனத்திற்கு உரிமைக்கு பாதுகாபாப்பினை அரசு வழங்காதபோது 1983ம்ஆண்டில் இடம்பெற்ற ஜீலை கலவரம் என்பது தோற்றம்பெற்றது. இவ்வாறு நடைமுறையில் இருக்கும் யாப்பானது உயிர்வாழும் உரிமை உத்தரவாதப்படுத்தப்படாத போது மேற்கூறிய நிகழ்வானது மிக பெரிய அடிப்படை உரிமை மீறல் சம்பவமாகும். இதன்போது 13 இராணுவத்தினர் யாழ்பானத்தில் கொல்லப்பட்டமையானது அவர்களின் வாழும் உரிமை மீறப்பட்டிருக்கின்றது. இத்தகைய நிலையிலே குறிப்பிட்ட இனத்திற்கான பாரபட்சமாக தெளிவுப்படுத்தப்பட்டது. இதன் பின்னே மோதல் இடம்பெற்று தற்போது இலங்கையின் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முடிவுரை
இன்றைய நெறிப்படுத்தப்பட்ட அரசியல் சமுதாயத்தில் ஒர் சமூகத்தின் சேமநலனில் அக்கரைக்கொண்டு அதனை மேம்படுத்த வேண்டிய உயரிய பொறுப்பு அரசுக்குண்டு மனித உரிமைகள் என்ற அம்சத்தினை இத்தகைய அரசுகள் பிரதானமாக ஒர் நாட்டின் உயிர் நாடியாக திகழ்கின்ற அரசியல் அமைப்பின் ஊடாக உத்தரவாதப்படுத்தவேண்டியுள்ளன ஆனால் இன்றைய நிலையில் இலங்கை மட்டுமன்றி உலகின் தனிமனிதன் குடும்பம் பல நாட்டின் உள்நாட்டு கலவரம்பிராந்திய முரண்பாடுகள் அரசியல் ஆயுத அணுவாயுத தொழினுட்ப ஏகாதிபத்தியத்திய போட்டிகளின் நிமிர்த்தம் இந்த மனித உரிமைகளை பாதுகாப்பதில் போலிக்காரணங்களை காட்டி தப்பித்துக்கொள்கின்றது இந்தவகையில் அன்று இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோதலுக்காய் இடம்பெற்றாலும் இன்று இது கலாச்சாரம் பால் நிலை என்றவாறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கடத்தல் கொல்லை என்ற வடிவங்களாக மனித உரிமை மீறப்படுகின்றதெனலாம் எனினும் ஒவ்வொரு சமூக பொருளாதார கலாச்சார நாட்டின் சூழ்நிலைகள் என்பவற்றினை அடிப்படையாக கொண்டு சமூகத்திற்கு சமூகம் நாட்டிக்கு நாடு வேறுபடும் இத்தகைய மனித உரிமைகள் என்பது சமூகத்தின் விழுமியங்கள் நியமங்கள் ஒழுங்குகள் என்பவற்றினை பாதுகாப்பதற்காக பல சமூக நிறுவனங்கள் காணப்படுகின்றது அத்தகைய சமூக நிறுவனங்களில் மக்களின் சமூக நல அரசியல் தேவைகளை சமூகத்தில் நிலைநிறுத்துவதற்கு அரசின் பங்கு இன்றிமையாத ஒன்றாகும்.

இத்தகைய மனித உரிமைகளை சமூகத்தில் நிலை நாட்டுவதன் மூலமே சமூகத்தின் ஒழுங்கு அபிவிருத்தி வெற்றி என்பன தங்கியுளளது எனலாம் இந்தவகையில் சமூகத்தினால் உருவாக்கப்ப்பட்ட அரசானது ஒவ்வொரு தனிமனிதனின் சுயகௌரவத்தினை பாதுகாக்கும்பொருட்டு இலங்கையினை பொருத்தவரையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை ஒழிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் நாட்டில் ஒடுக்கப்படுவதால் அதனை இல்லாமல் செய்தல் மற்றும் அரசியல் யாப்பில் எழுத்துருவில் காணப்படும் உரிமைகளை பாதுகாப்பதற்கான தவீரமான ஒரு செயல்முறையை உருவாக்குதலும் மற்றும் அமுலாக்க குழுவின் சீத்திருத்தம் என்பவற்றினை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மனித உரிமைபற்றிய தெளிவு,; உன்னத அரசாக செயற்படல், சமூகமயமாக்கல் செயல்முறையின் மூலம் உறுதிப்படுத்தப்படுவதன் மூலம் மனித உரிமையினை பாதுகாக்க முடியும்.
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்