ஒரு கற்றல் செயன்முறையின் வெற்றியானது¸ ஆசிரியர் கையாளக்கூடிய பல்வேறு நுட்பமுறைகள் மற்றும் திட்டமிடல்கள் என்பவற்றின் வினைத்திறனிலையே தங்கியுள்ளது. இவ்வாறான நுட்ப முறைகள் மற்றும் திட்டமிடல்களை தற்காலத்தில் நாம் கல்வி தொழினுட்பம் என்று கூறலாம். அந்தவகையில் கல்வி தொழினுட்பம் என்பது கல்வி புலத்தின் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பதமாகும். இப்பதத்தின் அர்த்தம் நபருக்கு நபர் வேறுபடுவதுடன் அதன் கருத்துக்களும் மாற்றம் பெற்றுக்கொண்டே வந்துள்ளது. பொதுவாக கல்வி தொழினுட்பம் என்பது கல்வியில் புதிய தொழினுட்பத்தை பிரயோகித்தலா? உபகரணங்களை உபயோகித்தலா? பல்வேறு நுட்பமுறைகளை பயன்படுத்துவதா? கற்பித்தலுக்கான கல்வித்துணைகள் பற்றிய ஆய்வா? போன்ற பல்வேறு வினாக்கள் எழுப்பப்பட்ட போதிலும் இவைகள் அனைத்தும் கல்வி தொழினுட்பத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். அந்தவகையில் கல்வி தொழினுட்பம் தொடர்பாக கீழ்வரும் வரைவிலக்கணங்களை நோக்கலாம்.
“ கல்வி தொழினுட்பம் என்பது மனிதன் கற்றலுடன் தொடர்புபட்ட சகல அம்சங்களிலும் உள்ள பிரச்சினைகளைப் பகுத்தாராய்வதற்கும் அவற்றுக்கான தீர்வுகளை வகுத்தல்¸ நடைமுறைப்படுத்தல்¸ மதிப்பிடல் செய்முறைகள் கருத்துக்கள் கருவிகள் அமைப்பு ஆகிய அனைத்துடனும் தொடர்புபட்ட சிக்கலான செய்முறை ஆகும்.
மேற்கூறப்பட்ட வரைவிலக்கணங்களை நோக்கமிடத்து கல்வி தொழினுட்பம் என்பது தனியே கற்பித்தல் உபகரணங்களோ கருவிகளோ பொருட்களோ அல்ல மாறாக கல்வி நடவடிக்கைகளின் போது நாம் கையாளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளுமே கல்வி தொழினுட்பம் எனக் கூறலாம். மேலும் இக்கல்வி தொழினுட்பமானது தனியான ஒரு பாடமன்று இதனுடன் கல்வி உளவியல் கல்வி அளவீடுகளும் மதிப்பீடும்¸ கல்விக்கொள்கைகள்¸ கலைத்திட்டம்¸ கல்விக் கோட்பாடுகளும் நடைமுறையும் போன்ற பாடத்துறைகளையும் உள்ளடங்குவதுடன் கல்வி நடவடிக்கைகளில் நாம் பயன்படுத்தக்கூடிய அனைத்து வகையான உத்திகளும் உள்ளடங்குகிறது.
மேலும் மேற்கூறப்பட்ட வரைவிலக்கணங்களில் அடிப்படையில் இக்கல்வி தொழினுட்பத்தில் கற்பித்தல் முறைகள்¸ கற்பித்தல் நுட்பமுறைகள்¸ கற்றல் துணைச்சாதனங்கள் மற்றும் பாடத்திட்டமிடல் போன்ற அம்சங்கள் கல்வி தொழினுட்பம் எனும் பாடத்துறையில் உள்ளடங்குவதை அவதானிக்கலாம்.
அந்த வகையில் கல்வி தொழினுட்பம் எனும் பாடத்துறையில் கற்பித்தல் முறைகளும் ஒரு பிரிவாகும். கற்பித்தல் முறை என்பது வகுப்பறையில் ஆசிரியரால் கற்றல் நடவடிக்கைகளின் போது கையாளக்கூடிய வழிமுறைகளாகும். எடுத்துக்காட்டாக விரிவுரை முறை¸ கண்டறி முறை¸ பிரச்சினைத் தீர்த்தல் முறை¸ செற்றிட்ட முறை¸ முன்திட்ட முறை ஒப்படை முறை என்பவற்றை உதாரணமாக கூறலாம்.
அடுத்ததாக கல்வி தொழினுட்பத்தில் கற்பித்தல் முறைமைகளும்; ஒரு உள்ளடங்களாகும். கற்பித்தல் முறைமை என்பது வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் சந்தர்ப்பங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளும் முறைமைகளே ஆகும். அதாவது மாணவர்களை எவ்வாறு வகுப்பறையில் ஒழுங்கமைத்துக் கொள்ளுதல் எனும் செயன்முறையாகும். உதாரணமாக குழுமுறை கற்பித்தல்¸ அணிமுறைக் கற்பித்தல் பல்வகுப்புக் கற்பித்தல் போன்றவற்றை கூறலாம்.
அடுத்ததாக கற்பித்தல் நுட்பமுறைகள் அல்லது உத்திகளும் கல்வி தொழினுட்பத்தின் ஒரு அம்சமாகும். கற்பித்தல் நுட்பமுறை என்பது கற்றலை இலகுப்படுத்துவதற்காக ஆசிரியரால் கையாளக்கூடிய முறையாகும். எடுத்துக்காட்டாக கதைக் கூறல்¸ நடித்தல்¸பொருட்காட்சி¸ முன்மாதிரி விவாதங்கள்¸ காரணங்கள் கூறுதல்¸ அவதானம் களச்சுற்றுப்பிரயாணம் கலந்துரையாடல்¸ வினாக்கள் வினவுதல் போன்ற அம்சங்களை கூறலாம்.
மேலும் கற்றல் துணைச்சாதனங்கள் பொருத்தவரை கற்றலை இலகுப்படுத்துவதற்காக பயன்படுத்தக்கூடிய சாதனங்களாகும். எடுத்துகாட்டாக கரும்பலகை¸ பாடநூல்கள்¸ அட்டவணைகள்¸ படங்கள்¸ இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் கணினியையும் குறிப்பிடலாம். மேலும் பாடத்திட்டமிடலை மேற்கொள்ளுவதற்கு பயன்படுத்தக்கூடிய கோட்பாடுகளும் இவற்றில் உள்ளடங்குவதை காணலாம். இவ்வாறாக கல்வி தொழினுட்பம் என்பது தனியான தொழினுட்ப சாதனங்களின் பயன்பாடுகள் மட்டுமன்றி அதனை விடவும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின் போது அதனை வெற்றிக்கொள்வதற்காக பயன்படுத்தக் கூடிய அனைத்து வழிமுறைகளுமே கல்வி தொழினுட்பம் எனும் பாடப்பிரிவினுள் அடங்குகிறது. இவற்றையே கற்பித்தல் முறைகள்¸ கற்பித்தல் நுட்பமுறைகள்¸ கற்றல் துணைச்சாதனங்கள் மற்றும் பாடத்திட்டமிடல் போன்ற அம்சங்கள் கல்வி தொழினுட்பத்தில் பிரதான தலைப்புகளாக உள்ளடங்கி இருப்பதையும் காணலாம
ஆக்கம்
R..திஸ்ணாராஜா
BA,PGDE, DIP in TAmil,
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்